வாழ்க வளமுடன்
நட்புக்கள் அனைவருக்கும்
இனிய 'சோப கிருது' வருஷ வாழ்த்துக்கள்....
இந்த சோப கிருது வருடம் அறுபது ஆண்டு கணக்கு சுழற்சியில் வரும் 37வது ஆண்டு ஆகும்.
சோப கிருது என்ற சமஸ்கிருத பெயருக்கு மங்கலம் என்ற அர்த்தம் உள்ளது.
இடைக்காடர் சித்தர் அறுபது வருடங்களுக்கும் அதாவது ஒவ்வொரு தமிழ் வருடங்களுக்கும் ஒவ்வொரு வெண்பா எழுதி உள்ளார். அதன்படி 'சோப கிருது' வருஷ வெண்பா
"சோபகிருது தன்னிற் தொல்லுலகெல்லாம் செழிக்கும்!
கோபமகன்று குணம்பெருகும் - சோபனங்கள்
உண்டாகும் மாரியொழியாமற் பெய்யும் எல்லாம்
உண்டாகுமென்றே உரை!"
இந்த வெண்பாவின் பொருள்
பழமையான இந்த உலகம் செழிக்கும் ,எங்கும் செல்வம் நிறைந்திருக்கும்.
கோபம், பொறாமை போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும்.
உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள்.
நற்குணங்கள் மேலோங்கும். சுபமான மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மழை பொய்க்காது பெய்யும் எல்லா நலன்களும் பெற்று மக்கள் வாழ்வர் என்பதாகும்.
திருமாலை
விரும்பி நின்று ஏத்த மாட்டேன்* விதி இலேன் மதி ஒன்று இல்லை,*
இரும்புபோல் வலிய நெஞ்சம்* இறை-இறை உருகும் வண்ணம்,*
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,*
கரும்பினைக் கண்டுகொண்டு* என் கண்ணினை களிக்குமாறே! 17
888
இனி திரைத் திவலை மோத* எறியும் தண் பரவை மீதே,*
தனி கிடந்து அரசு செய்யும்* தாமரைக் கண்ணன் எம்மான்,*
கனி இருந்தனைய செவ்வாய்க்* கண்ணனைக் கண்ட கண்கள்,*
பனி அரும்பு உதிருமாலோ* என் செய்கேன் பாவியேனே! 18
889
குடதிசை முடியை வைத்துக்* குணதிசை பாதம் நீட்டி,*
வடதிசை பின்பு காட்டித்* தென் திசை இலங்கை நோக்கி,*
கடல் நிறக் கடவுள் எந்தை* அரவணைத் துயிலுமா கண்டு,*
உடல் எனக்கு உருகுமாலோ* என்செய்கேன் உலகத்தீரே! (2) 19
890
அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று
இந்த "சோப கிருது" ஆண்டில் மகிழ்வுடன் வாழ
எங்களது இனிய வாழ்த்துக்கள் .....
தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் திருவடிகளே சரணம் ....
அன்புடன்
அனுபிரேம் 💕💕💕💕💛
No comments:
Post a Comment