அனுவின் தமிழ் துளிகள்.....
சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
04 April 2023
மேல்கோட்டை ஸ்ரீ செல்வ நாராயண ஸ்வாமி வைரமுடி சேவை
மேல்கோட்டை ஸ்ரீ செல்வ நாராயண ஸ்வாமி வைரமுடி சேவை -- திவ்ய தரிசனம்....
வைர முடி சேவை
வைரமுடி சேவை அன்று கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருள செய்யப்படுகிறது.
வைர முடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையில் இவ்வைர முடி சேவை இப்போதும் இரவுப் பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டுவிடுகிறது.
மேலும் வைரமுடி சாற்றும் போதும் பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைரமுடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார்.
கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது “வைநதேய முடி” என்றழைக்கப்பட்டு, “வைநமுடி” என சுருங்கி பின்னர் “வைரமுடி” என மருவியுள்ளது.
ஸ்ரீ செல்வப்பிள்ளை திருவவதார க்ரமம்-
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பெரிய பெருமாளை எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்த பின்பு
தன்னகத்தில் திருவாராதனத்துக்கு அர்ச்சாவதார இல்லாமையால் இழவு பட்டு இருக்கும் சமயம் இந்த மூர்த்தியை நான்முகன், சக்கரவர்த்தி திருமகனுக்கு எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்தான் –
அது முதல் -ஹ்ருத உத்பவன் -என்ற திருநாமம் உடைய இவருக்கு -ராம பிரியன் -என்ற திருநாமம் ஆயிற்று .
செல்லப்பிள்ளை கண்ணன் திரு மாளிகைக்கு சேர்ந்த க்ரமம் -
சக்கரவர்த்தி திரு மகன் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி - என்றபடியே
திரு அயோத்யையில் இருந்த சராசரங்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு தன்னுடைச் சோதிக்கு சேரும் பொழுது இந்த ராம பிரியனை திருவடி கையிலே கொடுத்தான் –
அவன் சக்கரவர்த்தி திருமகன் திருக்குமாரரான குசா மஹாராஜனுக்குக் கொடுத்தான் –
குசன் தனது பெண் குழந்தையான கனக மாலினிக்கு ஸ்த்ரீதனமாகக் கொடுத்தான் –
அந்த கனக மாலினி யது வம்சத்தில் யது சேகரன் என்கிற வரனைக் கைப்பிடித்ததால் -அந்த வம்சக் க்ரமத்தாலே
ஸ்ரீ ராமபிரியன் கண்ணனுடைய திரு மாளிகையிலும் சேவையைக் கைக் கொண்டு நின்றான்.
வைரமுடி சரித்திரம்
ஒரு கால் விரோசனன் என்கிற அசுரன் - தனது தகப்பனாக ப்ரஹ்லாதன் விஷயத்தில் தேவதைகளுக்கு இருக்கும் விஸ்வாசத்தைப் பற்றித் தானும் அவர்களோடே கூட பாற்கடலில் பள்ளி கொண்ட அநிருத்த பகவானை சேவித்துக் கொண்டு இருந்து –
பகவான் யோகத்துயில் கொண்டு இருக்கும் பொழுது யாரும் இல்லாத சமயத்தில்
பகவானுடைய கிரீடத்தைப் பறித்துக் கொண்டு பாதாள லோகம் சேர்ந்தான் –
பிறகு அந்தரங்க கைங்கர்ய பரர்கள் பகவானுடைய திருமுடியைக் காணாமல் -இது விரோசனன் செய்த தீம்பு என்று சங்கித்து ஸ்ரீ கருடாழ்வானை அனுப்பினார்கள் –
வைநதேயன் பாதாள லோகம் சென்று விரோசனனை ஜெயித்து அநிருத்தனனுடைய கிரீடத்தை மீட்டுக் கொண்டு மகா வேகத்துடன் வாரா நின்றான் –
வைரமுடியை கண்ணனுக்கு சமர்ப்பித்தது –
இப்படி பெரிய திருவடி ஆகாச மார்க்கத்தில் வரும் பொழுது தன்னுடைய கதி தடைப்பட்டதைப் பார்த்து விஸ்மதனாய்-
நான்கு பக்கமும் பார்த்தாலும் ஒன்றும் புலப்படாமல் கீழே பூமியைப் பார்த்தான் –
மயில் பீலிகளாலும் குஞ்சா மணிகளாலும் அலங்க்ருதனாய் வேணு கானம் பண்ணிக் கொண்டும் பிருந்தாவனத்தில் ஆநிரைகளைக் காத்துக் கொண்டும் இருக்கிற கோபாலனைக் கண்டான் –
பரம ஆனந்த பூரிதனாய் -
இவனால் தான் என்னுடைய கமனம் நழுவிற்று - என்று நிச்சயித்து –
பகவானுடைய கருத்தின் படியே அந்தக் கிரீடத்தை கண்ணனுடைய சிரஸ்ஸிலே சமர்ப்பித்தான்-
அநேக யோஜனை விஸ்தாரமான அந்த முடியானது பகவானுடைய சங்கல்பத்தாலே கண்ணனுடைய சிரஸ்ஸுக்குத் தகுதியாக மாறி விட்டது –
பிறகு கண்ணனை ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைப் பண்ணி வணங்கி கருடன் பாற் கடல் சேர்ந்தான் – அங்கு எல்லாருக்கும் இந்த விஷயத்தைச் சொல்ல அவர்களும் ஆனந்தித்தார்கள் –
கண்ணன் தனது க்ருஹ அர்ச்சையான ராமப் பிரானுக்கு - அந்த முடியை சமர்ப்பித்தான் –
அது அவனுடைய சங்கல்பத்தாலே செல்வப்பிள்ளைக்குத் தகுதியாக போக்யமாய்த் தலைக்கட்டிற்று –
இவ்விதமாக வைரமுடியைச் சாற்றி ராமப் பிரியனை நித்ய ஆராதனம் செய்து கொண்டு இருந்தான் –
இப்படி இருக்கும் பொழுது ஒரு சமயம் நம்பி மூத்தபிரான் தீர்க்க யாத்திரைக்காக எழுந்து அருளினை காலத்தில் இந்த நாராயணாத்ரிக்கு வந்து கல்யாணி தீர்த்தத்தில் அவகாஹித்து ஆனந்த மய திவ்ய விமான மத்யஸ்தரான திரு நாராயணப் பெருமாளைச் சேவிக்க -
தம்முடைய க்ருஹ அர்ச்சையான ராமப் பிரியனைப் போலவே இருக்கிறார் -என்று
அறிந்து ஸ்ரீ மத் துவாரகைக்கு எழுந்து அருளி தென் திசையில் தென் பத்ரி -என்னும் நாராயணாத்ரியில் நம்முடைய ராமப் பிரியனைப் போலவே இருக்கும்
ஒரு பெருமாள் இருக்கிறார் -என்று சொன்னார் –
கண்ணன் இதை ஒப்புக் கொள்ளாமல் -நம்பி மூத்தபிரான் யாதவர்கள் எல்லாரையும் அழைத்து
தானே ஸ்ரீ ராமப் பிரியனையும் எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு நாராயணாத்ரிக்கு வந்து திரு நாராயணன் முன்பே எழுந்து அருளப் பண்ணி எல்லாரும் சேவித்து இருவரும் ஒரே ரூபத்தை உடையவர்கள் என்று சம்மதித்து ஆனந்தித்தார்கள் –
நாராயணாத்ரிக்கு யாதவாத்ரி என்ற பெயர் வந்தது –
இப்படி யாதவர்கள் எல்லாரும் ஸ்ரீ ராமப் பிரியனை அங்கேயே எழுந்து அருளப் பண்ணி அந்தந்த உத்சவ காலங்களில் தாங்களும் அங்கேயே சென்று உத்ஸவாதிகளை நடத்தி வந்த படியால் இந்த மலைக்கு யாதவாத்ரி என்று அது முதல் திரு நாமம் ஆயிற்று –
இப்படி திரு நாராயணன் -செல்வப்பிள்ளை இருவரும் ஒரே இடத்தில் மூல பேரராயும் உத்சவ பேரராயும் நம்முடைய பாக்ய அதிசயத்தாலே சேர்ந்தார்கள் –
இந்த வருடம் எதிர்பாராமல் செல்லப்பிள்ளையை நேரில் சென்று தரிசனம் பெறும் வாய்ப்புக் கிடைத்தது.
நாங்கள் சனிக்கிழமை காலை பெங்களூரிலிருந்து கிளம்பி நேரே தொண்டனுர் சென்று நம்பி நாராயனையும், பார்த்தசாரதி பெருமாளையும், வேணு கோபாலனையும் கண்டு தரிசனம் பெற்றோம். பின் சுவாமி ராமானுஜர் சன்னதி சென்று சேவித்து, அங்கிருந்து தொண்டனுர் கரை என்னும் ஏரிக்கு சென்றோம்.
பின் மேல்கோட்டை சென்று மாலை 6 மணிக்கு நரசிம்மர் தரிசனம் பெற்று, அங்கிருந்து கல்யாணி தீர்த்தம், அக்கா தங்கை குளம் எல்லாம் பார்த்து ரசித்து , எங்குகெங்கும் ஒளி வெள்ளத்தில் அத்தனை அழகுடன் இந்த இடங்கள் எல்லாம் பிரகாசித்தன.
இரவு 9 மணிக்கு வைரமுடி சேவை காண நின்றோம். அருகில் சென்று காணுவது என்பது எல்லாம் இயலாத காரியம். தூரமாக நின்று செல்லப்பிள்ளை கண்டோம். (ஆனாலும் இன்னும் கொஞ்சம் பக்கம் சென்று பார்க்க வேண்டும் என்னும் ஆசை வருகிறது) காலை 6 மணிக்கு மீண்டும் கோவில் சென்றோம், அப்பொழுது ராஜமுடியுடன் சுவாமி ஆஸ்தானம் சென்றார். அந்நேரம் அந்த சந்நதியில் நிற்கும் பாக்கியம் கிடைத்தது.
பெருமாள் திருமொழி
3. மெய் இல் வாழ்க்கையை
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்
மெய் இல் வாழ்க்கையை* மெய் எனக் கொள்ளும்* இவ்
வையம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* என் தன் மாலுக்கே (2) 1
668
நூலின் நேர்-இடையார்* திறத்தே நிற்கும்*
ஞாலம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா* அரங்கா என்று*
மால் எழுந்தொழிந்தேன்* என்தன் மாலுக்கே 2
669
மாரனார்* வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்*
பாரினாரொடும்* கூடுவது இல்லை யான்*
ஆர-மார்வன்* அரங்கன் அனந்தன்* நல்
நாரணன்* நரகாந்தகன் பித்தனே 3
670
ஸ்ரீ யதுகிரி தாயார் சமேத ஸ்ரீ திருநாராயண பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!
நானும் மேல்கோட்டையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். 1ம் தேதி காலையில் தொண்டனூர் ஏரியில் குளித்து மூன்று கோவில்களையும் தரிசனம் செய்தேன். மதியம் இரண்டு மணி நேர ஓயவுக்குப் பின் இரவு முழித்திருந்து வைரமுடி சேவையை போஸ்டாபீஸ் எதிரே சேவித்தேன். திருப்தி இல்லாமல், அர்ச்சகர் உதவியோடு அடுத்த தெருவில் பல்லக்கின் நடுவே சென்று ஒரு அடி தூரத்தில் ஒரு நிமிடம் தரிசனம் செய்தேன். பின்புதான் இதுபற்றி எபியில் எழுதணும்.
1ம் தேதி மதியம் தொண்டனுர் தரிசனம். நரசிம்மரை மிக அதிக கூட்டத்தோடு தரிசனம் செய்து, அகோபிலம் மடத்தில் தங்கி பின் சென்று ராமபிரியரை கண்டோம்.
எபியில் எழுதுங்கள் சார் , நீங்கள் இன்னும் விரிவாக தெளிவாக சொல்லுவீர்கள் . இன்னும் உங்கள் அகோபில யாத்திரை வாசிக்க வில்லை . விரைவில் பொறுமையாக வாசிக்க வேண்டும்
அதற்கு முந்தைய நாள் நரசிம்மர் கோவில், அன்று இரவு இருமுறை கோவிலில் இராமானுசர் மற்றும் ராம்ப்பிரியர் தரிசன், மறுநாள் காலை 5:30க்கு மூலவர் தரிசனம் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. 2ம் தேதி கல்யாணி குளத்தில் குளித்துவிட்டு மேல்கோட்டையைவிட்டுக் கிளம்பினோம்.
இன்னும் பரவசமாகவே உள்ளது.படங்களில் மட்டும் தரிசித்து இங்கு பகிரும் போது சில நேரம் இது போல எங்களுக்கு எந்தவிதமான பயண எண்ணங்களும் இல்லாத பொழுதும் இப்படி சில பயணங்களை அவனே கொடுக்கிறான்.
இது போலவே போன வருடம் ரெங்க நாச்சியார் திருவடி தரிசனம் கிடைத்தது
சென்ற வருடம் பத்தில் ஒரு பங்கு கூட்டம்தான் வந்ததாம் (கோவிட் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடந்த வைரமுடி திருவிழா). இந்த வருடம் அதைவிடக் குறைவு. அப்படி என்றால் எவ்வளவு கூட்டம் வரும் என்று பாருங்கள் (இந்த வருடம் எக்ஸாம் நேரம் என்பதால் கூட்டம் குறைவாம்)
பெரியோர்கள், இந்த பத்துப் பாசுரங்கள் மேல்கோட்டை விஷயமானது என்று அபிப்ராயப்படுவார்கள். அதுபோல, உயர்வற உயர்நலம் பத்துப் பாசுரங்கள் காஞ்சி தேவப்பெருமாள் விஷயமானது என்பர். இந்த இரண்டு தலங்களை நேரடியாகப் பாடும் பாசுரங்கள் திவ்யப்ப்ரபந்தத்தில் இல்லை
நானும் மேல்கோட்டையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். 1ம் தேதி காலையில் தொண்டனூர் ஏரியில் குளித்து மூன்று கோவில்களையும் தரிசனம் செய்தேன். மதியம் இரண்டு மணி நேர ஓயவுக்குப் பின் இரவு முழித்திருந்து வைரமுடி சேவையை போஸ்டாபீஸ் எதிரே சேவித்தேன். திருப்தி இல்லாமல், அர்ச்சகர் உதவியோடு அடுத்த தெருவில் பல்லக்கின் நடுவே சென்று ஒரு அடி தூரத்தில் ஒரு நிமிடம் தரிசனம் செய்தேன். பின்புதான் இதுபற்றி எபியில் எழுதணும்.
ReplyDeleteமிக மகிழ்ச்சி சார்,
Delete1ம் தேதி மதியம் தொண்டனுர் தரிசனம். நரசிம்மரை மிக அதிக கூட்டத்தோடு தரிசனம் செய்து, அகோபிலம் மடத்தில் தங்கி பின் சென்று ராமபிரியரை கண்டோம்.
எபியில் எழுதுங்கள் சார் , நீங்கள் இன்னும் விரிவாக தெளிவாக சொல்லுவீர்கள் . இன்னும் உங்கள் அகோபில யாத்திரை வாசிக்க வில்லை . விரைவில் பொறுமையாக வாசிக்க வேண்டும்
அதற்கு முந்தைய நாள் நரசிம்மர் கோவில், அன்று இரவு இருமுறை கோவிலில் இராமானுசர் மற்றும் ராம்ப்பிரியர் தரிசன், மறுநாள் காலை 5:30க்கு மூலவர் தரிசனம் என அனைத்தும் சிறப்பாக இருந்தது. 2ம் தேதி கல்யாணி குளத்தில் குளித்துவிட்டு மேல்கோட்டையைவிட்டுக் கிளம்பினோம்.
ReplyDeleteஎத்தனை விதமான மக்கள், மக்கள் வெள்ளம் ....
Deleteஇன்னும் பரவசமாகவே உள்ளது.படங்களில் மட்டும் தரிசித்து இங்கு பகிரும் போது சில நேரம் இது போல எங்களுக்கு எந்தவிதமான பயண எண்ணங்களும் இல்லாத பொழுதும் இப்படி சில பயணங்களை அவனே கொடுக்கிறான்.
இது போலவே போன வருடம் ரெங்க நாச்சியார் திருவடி தரிசனம் கிடைத்தது
சென்ற வருடம் பத்தில் ஒரு பங்கு கூட்டம்தான் வந்ததாம் (கோவிட் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடந்த வைரமுடி திருவிழா). இந்த வருடம் அதைவிடக் குறைவு. அப்படி என்றால் எவ்வளவு கூட்டம் வரும் என்று பாருங்கள் (இந்த வருடம் எக்ஸாம் நேரம் என்பதால் கூட்டம் குறைவாம்)
Deleteஒரு நாயகமாய் -திருவாய்மொழியிலிருந்துதான் பாசுரங்கள் போட்டிருக்கணும்.
ReplyDeleteஒரு நாயகமாய்* ஓட உலகு உடன் ஆண்டவர்,*
Deleteகரு நாய் கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
பெரு நாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
திருநாரணன் தாள்* காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.
பெரியோர்கள், இந்த பத்துப் பாசுரங்கள் மேல்கோட்டை விஷயமானது என்று அபிப்ராயப்படுவார்கள். அதுபோல, உயர்வற உயர்நலம் பத்துப் பாசுரங்கள் காஞ்சி தேவப்பெருமாள் விஷயமானது என்பர். இந்த இரண்டு தலங்களை நேரடியாகப் பாடும் பாசுரங்கள் திவ்யப்ப்ரபந்தத்தில் இல்லை
Deleteநான் கேக்க எண்ணினேன் நீங்களே கூறிவிட்டிர்கள். நன்றி சார்
Delete