08 April 2023

41. மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே

 41. "மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே"





திருமலை பக்கம் குரவபுரம் என்ற சிறு கிராமம். அந்தக் கிராமத்தில் மண் பானைகளைச் செய்யும் ஒரு ஏழை குயவர் இருந்தார். அவர் பெயர் பீமன். குடும்பம் நடத்துவதற்கே கஷ்டப்பட்டார். திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கையில் பணம் இல்லை. அதனால் திருமலைக்குப் போக முடியவில்லை. ஆனால் அவருக்கு எப்போதும் திருவேங்கடவன் நினைவு தான். அவன்மீது அடங்காத காதல்.

மண் பானை செய்யும் களி மண்ணில் திருமலை பெருமாள் உருவத்தைச் செய்து அதை வீட்டுக்குப் பக்கம் இருக்கும் மரத்தடியில் வைத்திருந்தார்.

தினமும் விடியற்காலை எழுந்துகொள்வார். குளித்துவிட்டு, மரத்தடியில் இருக்கும் பெருமாளை சேவிப்பார். பிறகு களி மண்ணை பிசைந்து, மண் பானை செய்ய ஆரம்பிப்பார். மாலை பானைகளைச் செய்து முடித்தபின். கீழே சிதறிக்கிடக்கும் சின்ன சின்ன மண் உருண்டைகளைப் பொறுக்கி பூக்கள் மாதிரி செய்வார். அதை மரத்தடியில் இருக்கும் பெருமாள் பாதத்தில் வைத்துக் கும்பிடுவார்.

குயவரை இவரை எல்லோரும் குரவநம்பி என்று கூப்பிடுவார்கள். இவருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது அது “குறும்பு அறுத்த நம்பி”... அதாவது  இவருக்கு எந்த ஆசையும் கிடையாது. யார் மீதும் பொறாமை கிடையாது. நான் என்ற அகம்பாவம் கிடையாது. கோபமே வராது. இந்தக் குறும்பு எல்லாம் இல்லாததால் இவர் ’குறும்பு அறுத்த நம்பி!’ .

இது போல தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் திருமலை பெருமாள் மீது மிகுந்த ஈடுபாடு. தினமும் விதவிதமான உயர்ந்த பூக்களைப் பெருமாளுக்கு சமர்பிப்பான். முதல் நாள் அரசன் சமர்பித்த பூக்கள் கீழே கிடக்கும். அதற்குப் பதில் மண் பூக்கள் பெருமாள் சூடியிருப்பார். அரசனுக்கு வியப்பாக இருந்தது.

ஒரு நாள் அரசன் இதைப் பற்றி விசாரித்தான் “தினமும் நான் உயர்ந்த மலர்களைச் சமர்ப்பிக்கிறேன். ஆனால் மறுநாள் நான் சமர்பித்த மலர்கள் கீழே கிடக்கச் சாதாரண மண்ணால் செய்த பூக்கள் பெருமாள் மீது இருக்கிறது. யார் இந்த வேலையைச் செய்கிறார்கள் ?” என்றான். 

அர்ச்சகர் “அரசே, நானும் இதைக் கவனித்தேன். யார் என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க வேண்டும்” என்றார். அன்று இரவு அரச படைகள் கோவிலைக் காவல் காத்தார்கள். மறுநாள் காலைப் பொழுது  கதவைத் திறந்தபோது பெருமாள் மீது அதே மண் பூக்கள்!

தொண்டைமான் சக்கரவர்த்தி பெருமாளிடமே ”மண் பூக்களின் ரகசியம் என்ன” என்று கேட்டான். பெருமாள் “அரசனே இந்த மண் பூக்களை எனக்கு வேண்டிய பக்தன் ஒருவன் சம்ர்பிக்கிறான். அவை எனக்குப் பிடித்திருக்கிறது” என்றார். 

“யார் அந்தப் பக்தன்?” என்று கேட்கப் பெருமாள் ”அது ரகசியத்தைக் கூற முடியாது!” என்று மறுத்துவிட்டார்.

அரசனும் தினமும் பெருமாளை நச்சரிக்க ஆரம்பித்தான். 

பெருமாள் ஒரு நாள் குறும்ப அறுத்த நம்பியிடம் “அரசன் தினமும் யார் இந்த மண் பூக்களைச் சமர்ப்பிக்கிறார் என்று என்னைக் கேட்டுத் தொந்திரவு செய்கிறான் உன்னிடம் அனுமதி கேட்டுவிட்டுச் சொல்லலாம் என்று இருக்கிறேன்” என்றார். 

அதற்கு நம்பி “சொல்லுங்கள் ஆனால் சொல்லும்போது எனக்கு மோட்சம் அளித்துவிட்டுச் சொல்லுங்கள்” என்றார்.

பெருமாள் அரசனிடம் சொல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். 

ஒரு நாள் பெருமாள் இன்று அரசனிடம் சொல்லிவிடுவது என்று முடிவு செய்தார். அன்றும் அரசன் கேட்கப் பெருமாள் “குரவபுரம் என்ற ஊரில் ஒரு குயவன் இருக்கிறான். தினமும் தான் செய்த மண் பெருமாளுக்கு மண் பூக்களை அன்போடு சமர்ப்பிப்பான். அவனுடைய இந்த மண் பூக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் அங்கே சென்று அந்தப் பூக்களை எடுத்துவருவேன்” என்றார்.

அரசன் அசந்து போனான். 

உடனே குரவபுரம் புறப்பட்டான்.அரசன் அங்கே சென்றபோது நம்பி முக்தி அடைந்து மோட்சம் பெற்றிருந்தார். பெருமாள் கொடுத்த வாக்கு!

திருக்கோளூர் பெண்மணி “குருவநம்பியைப் போல களிமண் மலர்களை கொடுத்து ஆழமான பக்தியுடனும் அன்புடனும் வைத்தமாநிதி பெருமாளை நான் சேவித்தேனா? இல்லையே. பிறகு ஏன் நான் இங்கு இருக்க வேண்டும்? நான் புறப்படுகிறேன்" என்கிறாள்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -முதற் பத்து

1- 8  ஓடும் புள் ஏறி
எம்பெருமானின் இனிமைத்தன்மை 


ஓடும் புள் ஏறி,*  சூடும் தண் துழாய்,*

நீடு நின்றவை,*  ஆடும் அம்மானே. 1

2976

         

அம்மானாய்ப் பின்னும்,*  எம் மாண்பும் ஆனான்,*

வெம் மா வாய் கீண்ட,*  செம்மா கண்ணனே. 2

2977







ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ ராஜகோபாலன்


42. திருக்கோவலூர்

ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார் ஸமேத ஸ்ரீ த்ரிவிக்ரமாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

1 comment:

  1. இந்தத் தொடர் மிக நன்றாக அமைந்து வருகிறது. பாராட்டுகள்.

    ReplyDelete