வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்
கயா சிரார்த்தம் முடியவும் எங்கள் மடத்திற்கு சென்று பின் அங்கிருந்து அருகில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என முடிவு செய்தோம். தங்கிருந்த இடத்திலையே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் தெரிந்த ஆட்டோக்காரர் எண் தருகிறார்கள்.
அவர்களும் கொஞ்சம் உடைந்த தமிழில் பேசி நம்மை அழைத்து செல்கிறார்கள். எங்களுக்கு வந்த ஆட்டோக்காரர் 7 கோவிலுக்கு உங்களை அழைத்து செல்லுகிறேன் என்று கூறி அவரே வழிகாட்டியாகவும் மாறினார்.
அதன்படி நாங்கள் முதலில் சென்றது Metta Buddharam Temple மெட்டா புத்தராம் கோயில்.
மெட்டா புத்தராம் கோயில்
இந்த மெட்டா புத்தராம் கோயில், போத்கயாவில் அமைந்துள்ள தாய்லாந்து கோயிலாகும்.
துருப்பிடிக்காத எஃகு, வெளிப்புறம் ஷெல் மற்றும் கண்ணாடியைப் பயன்படுத்தி அலங்கார மொசைக் ஆகியவற்றுடன் இந்த கோயில் ஈர்க்கிறது.
தாய்லாந்து கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில் அமைந்துள்ளது.
வெள்ளை சிமென்ட், களிமண் மற்றும் எபோக்சி கலவையிலிருந்து கையால் செய்யப்பட்ட ஏராளமான சிற்பங்களால் இந்த கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் தனித்துவமான கட்டிடக்கலையில் இந்த இடம் அமைத்துள்ளது. இப்பொழுது தான் புதிதாக உருவாகி கொண்டிருக்கும் இடம். அதனால் அத்தனை கூட்டம் இல்லை.
வெண்ணிறத்தில் புத்தர் சிலை மிக அழகாக உள்ளது. சுத்தமான பளிச் கோவில்.
தொடரும் ...
அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼
No comments:
Post a Comment