23 August 2023

24. சம்போ பூஜை .... காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலிருந்து

வாழ்க வளமுடன் 


முந்தைய பதிவுகள் ...

 1. வாரணாசி ......




24. சம்போ பூஜை 


 நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கி.பி. 1813 முதல் இன்று வரை காசி விசுவநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை பூசைகள் நடத்தப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் காசியில் உள்ள ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. தெருவில் "சம்போ சம்போ சங்கர மகாதேவா" என்று கூவி கொண்டு பூசை பொருட்களை கொண்டு செல்வதால் இது சம்போ என்ற பெயரால் வழங்கப்படுகிறது.



சம்போ,சம்போ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சிவன் என்று பொருள்.

விஸ்வேஸ்வரருக்கு நாள் தோறும் காலை 8 மணிக்கும், இரவு 9.30க்கும் பூசை, அபிசேக, அலங்கார பொருட்கள் சத்திரத்தில் இருந்து எடுத்து செல்லப்படுகின்றன.

உச்சி கால நைவேத்தியம் பருப்பு பொங்கல்,
அரத்தசாமத்துக்கு  சர்க்கரை பொங்கல்,
உஷாத் காலம் என்ற விடிகாலை 4 மணி பூசைக்கு பத்தாஸ் மிட்டாய்,நெய்வேத்யம் காசி சத்திர மாடியில் தயார் செய்து சம்போவுடன் அனுப்ப படுகிறது.

உச்சி கால பூசைக்கு ,
வாசனை தைலம், தேன், பன்னிர், ஊதுபத்தி,சூடம், அத்தர், தேசிச்சீனி(பழுப்பு சர்க்கரை),
திருநீறு, சந்தனம், முக்களை வில்வம் 16, அறுகம்புல்,பூ மாலை 3,பால் (6 1/4) ஆறே கால் படி,
தயிர்,பஞ்சாமிர்தம், பிரயாகை கங்கை (அலகாபாதில் இருந்து வரும்) பூணுல்,
அரிசி (மங்கள அச்சதை)..

அர்த்தஜாம பூஜைக்கு ,
மேற்கண்ட பொருட்களோடு, முக்களை வில்வம் 108, ஜவ்வாது, பட்டு, நாக ஆபரணம்,
பால் அண்டா, பூக்கூடை, வெண் சாமரம்,சோடாச ஆரத்தி பொருட்கள்,
ஆகியவை வெள்ளி பாத்திரங்களில் கொண்டு போக படும்.

அதோடு அதிகாலை 4 மணிக்கு உஷாத் காலம் என்ற திருவனந்தாலுக்கு தேவையான பொருட்களை சேர்த்து அனுப்பி வைக்கப்படுகிறது.

அன்னபூரணி கோவிலுக்கு அபிசேக பொருட்களும், குங்குமமும் ஒரு டலியா என்ற வட்ட தூக்கு சட்டியில் அனுப்புகின்றனர்.

அபிசேக, பூசை பொருட்கள் தூக்கி செல்ல நான்கு இந்துஸ்தானி பிராமணர்களை சத்திரம் பணி நியமனம் செய்துள்ளது. இவர்களோடு உச்சி காலத்தில் ஒரு நகராத்தார், அர்த்ததசாமத்தில் ஆறு நகரத்தார் உடன் பூசை பொருட்கள் தூக்கி செல்வர். 

காலை சரியாக 8 மணிக்கு பூஜை பொருட்கள் செல்லும் பொழுது 


1813 முதல் இதுவரை வரை ஒரு நாள் தவறாமல் பூசை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. 
1942ஆம் ஆண்டு காசி நகரில் மாபெரும் கலகங்கள் நிகழ்ந்தது ஆனால் அப்பொழுதும்  சம்போ நின்றதில்லை எமர்ஜென்சி காலத்திலும் நின்றதில்லை. அன்னபூரணி, விசாலாட்சி ஆகியோர் பூசை பொருட்களும் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் வழங்கப்படுகிறது.














மஞ்சள் நிற ஆடை அணிந்த  நாட்டுக்கோட்டை நகரத்தார்,  தினமும் பூஜை பொருட்களை எடுத்து செல்லுவது ஒரு விழா போல நடக்கிறது. நாமும் இதில் கலந்து கொள்ளலாம். ஆனால்  சம்போவுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் முன்பே பதிவு செய்து இருக்க வேண்டும். நாங்கள் அருகில் இருந்து சம்போ செல்லும் காட்சிகளை பக்தியோடு பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது மற்றவர்கள் படம் எடுக்க அவர்கள், எடுக்க வேண்டாம் என கூறவே, நாங்களும் எடுக்கவில்லை. 


அந்த அடர்ந்த சாம்பிராணி வாசத்துடன் அவர்கள் செல்லுவதை காணும் பொழுதே மிகவும் ஆசையாக இருக்கும். ஆச்சரிய நிகழ்வுகள்...

பின் அங்குள்ள கோவிலில் தரிசனம் செய்து கொண்டோம். பக்தி மணம்  கமழும் இடம்.


முந்தைய பதிவில் பிந்து  மாதவ பெருமாள் கோவில் தரிசனம் செய்து திரும்பவே மாலை  ஆகிவிட்டது என கூறினேன். அன்று தேவ் தீபாவளிக்கான கங்கா ஆர்த்தியை  பெரிய திரையில் கண்டு ரசித்து, பின் அங்கு விளக்கு மற்றும் ஊருக்கு கொண்டு செல்ல சில பொருட்களையும் வாங்கி கொண்டு விடுதி வந்து சேர்ந்தோம்.  

அடுத்தநாள் அலகாபாத் செல்ல வாகனத்தை பேசி  கொண்டு, அடுத்தநாள் காலை 5 மணிக்கு எங்களின்  அலகாபாத் பயணம் தொடங்கியது.... 








முதல் திருமுறை
036 திருவையாறு

பாடல் எண் : 6

தலையின் றொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே.
 


தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவ பிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவிவழிபாடு செய்யும் திருவையாறாகும்.


தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼



No comments:

Post a Comment