கச்யபருக்கும்,அதிதி தேவிக்கும், திருவோண நக்ஷத்திரத்தில்,
உலகை அளக்க அவதரித்த உத்தமர் ...
பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க
அவதரித்த பெருமான் - ஸ்ரீ வாமனர்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்
476
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக்
களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு,
அண்டமும், இவ் அலை கடலும் , அவனிகளும் எல்லாம்
அளந்த பிரான் அமரும் இடம் வளங்கொள் பொழில் அயலே,
அண்டம் உறு முழவு ஒலியும், வண்டு இனங்கள் ஒலியும்
அரு மறையின் ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்,
அண்டம் உறும் அலைகடலின் ஒலிதிகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு,மட நெஞ்சே.
1242
தொழும் நீர் வடிவின் குறள்உருவாய்* வந்து தோன்றி மா வலிபால்*
முழு நீர் வையம் முன் கொண்ட* மூவா உருவின் அம்மானை*
உழும் நீர்வயலுள் பொன்கிளைப்ப* ஒரு பால் முல்லை முகையோடும்*
கழு நீர் மலரும் கண்ணபுரத்து* அடியேன் கண்டு கொண்டேனே.
1722
தானவன் வேள்வி தன்னில்* தனியே குறள் ஆய், நிமிர்ந்து,*
வானமும் மண்ணகமும்* அளந்த திரி விக்கிரமன்,*
தேன் அமர் பூம்பொழில் சூழ்* திரமாலிருஞ் சோலை நின்ற,*
வானவர் கோனை இன்று* வணங்கித் தொழவல்லள் கொலோ!
1832
வெந் திறல் வாணன் வேள்யி டம்எய்தி* அங்கு
ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர*
செந் தொழில் வேத நாவின் முனி ஆகி, வையம்*
அடி மூன்று இரந்து பெறினும்,*
மந்தர மீது போகி, மதி நின்று இறைஞ்ச*
மலரோன் வணங்க வளர் சேர்,*
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம்*
அது நம்மை ஆளும் அரசே.
1986
No comments:
Post a Comment