23.ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவ் கோவில், மணிகர்னிகா காட், வாரணாசி.
முந்தைய பதிவுகள் ...
23.ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவ் கோவில், மணிகர்னிகா காட், வாரணாசி.
"வாரணாசியின் சாய்ந்த கோயில்" என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது. வாரணாசியில் மிக அதிக அளவில் புகைப்படம் எடுக்கப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த கோயில், நன்கு பாதுகாக்கப்பட்டாலும், பின்புறம் (வடமேற்கு) நோக்கி ஒன்பது பாகை அளவில் சாய்ந்துள்ளது, அதன் கர்ப்பக்கிரகம் பொதுவாக கோடையில் சில மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருக்கும்.
நாகரா சிகரம் மற்றும் பாம்சனா மண்டபத்துடன் பாரம்பரிய பாணியில் இந்த கோவில் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது .
கோயிலின் தளம் மிகவும் அசாதாரணமானது. வாரணாசிக் கங்கைக் கரையில் உள்ள மற்ற கோயில்களைப் போலல்லாமல், மிகவும் தாழ்வான நிலையில் கட்டப்பட்டுள்ளது. உண்மையில், நீர் மட்டம் கோயிலின் சிகாரா பகுதியைக் கூட அடையலாம்.
ஆண்டின் பெரும்பகுதி நீருக்கடியில் இருந்தபோதிலும், 12 மீட்டர் உயரம் கொண்ட இக்கோயில் நன்கு பாதுகாக்கப்படுகிறது.
இந்த கோயில் காசி கர்வத் என்றும் அழைக்கப்படுகிறது (காசி என்பது வாரணாசியின் பழங்காலப் பெயர்; காரத் என்றால் ஹிந்தியில் சாய்ந்திருக்கும் என்று பொருள்).
கட்டுமானத்தின் உண்மையான காலம் தெரியவில்லை. இருப்பினும், இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மான் சிங்கின் பெயர் தெரியாத வேலைக்காரனால் அவரது தாயார் ரத்னா பாய்க்காக கட்டப்பட்டது என்று கூறுகின்றனர். [ வருவாய் பதிவேடுகளின்படி, இது 1825 முதல் 1830 வரை கட்டப்பட்டது. இருப்பினும், மாவட்ட கலாச்சாரக் குழுவின் டாக்டர் ரத்னேஷ் வர்மாவின் கூற்றுப்படி, இது அமேதி அரச குடும்பத்தால் கட்டப்பட்டது எனத் தெரிகின்றது. ஜேம்ஸ் ப்ரின்செப் , 1820 முதல் 1830 வரை "பனாரஸ் மின்ட்" நிறுவனத்தில் ஒரு ஆய்வு அறிஞராக இருந்தார். அவர் ஸ்ரீரத்னேஷ்வர் மகாதேவ் கோவிலையும் உள்ளடக்கிய ஒரு தொடர் வரைபடங்களை உருவாக்கினார். கோயில் நுழைவாயில் நீருக்கடியில் இருந்தபோது, பூசாரி தண்ணீரில் மூழ்கி வழிபாடு நடத்துவார் என்று அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.
![]() |
“City of Benares,” an aquatint by Thomas Sutherland after Charles Rammus Forrest, from “A Picturesque Tour along the River Ganges and Jumna”, 1824 |
19 ஆம் நூற்றாண்டில் குவாலியரின் ராணி பைஜா பாய் கட்டியதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. மற்றொரு கூற்றின்படி, இது ரத்னா பாய் என்ற இந்தூரைச் சேர்ந்த ராணி அஹில்யா பாயின் பெண் ஊழியரால் கட்டப்பட்டது எனத் தெரிகின்றது. எவ்வாறு இருப்பினும் மூல மூர்த்தம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
1860களின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கட்டடம் சாய்ந்திருப்பதைக் காட்டவில்லை. நவீன புகைப்படங்கள் ஒன்பது பாகை அளவில் சாய்ந்திருப்பதைக் காட்டுகின்றன, 2015 இல் ஒரு மின்னல் தாக்குதலால் சிகராவின் சில கூறுகளுக்குச் சிறிய சேதம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.
மணிகர்னிகா காட்டில் உள்ள இக் கோயில் , 1795 இல் அஹில்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்ட தர்கேஷ்வர் மகாதேவ் மந்திர்க்கு முன்னால் அமைந்துள்ளது . இங்கு சிவபெருமான் தாரக மந்திரத்தை (முக்தி மந்திரம்) ஓதுவதாகக் கூறப்படுகிறது.
நாங்கள் செல்லும் பொழுது படகிலிருந்து தான் இந்த கோவிலை கண்டோம். நேரில் சென்று காண நேரம் அமையவில்லை. மேலே உள்ள படங்கள் எல்லாம் இணையத்திலிருந்து.
பாடல் எண் :5
உமையா ளொருபா கமதாகச்
சமைவா ரவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே.
உமையம்மை ஒருபாகத்தே விளங்கப்பொருந் தியவராகிய சிவபெருமான் சாரும் இடம், மலையிடையே உள்ள மூங்கில்கள் முத்துக்களைச் சொரிய அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்த திருவையாறாகும்.
அனுபிரேம் 🌼🌼🌼
No comments:
Post a Comment