08 June 2023

8. போத்கயாவின் மடங்கள் ...

வாழ்க வளமுடன் 





முந்தைய பதிவுகள்  

 முந்தைய பதிவில் பெரிய புத்தர் சிலை  கண்டோம். இன்று அதனை சுற்றி அமைந்துள்ள பல்வேறு மடங்களை காணலாம்.

 8. போத்கயாவின் மடங்கள்...

புத்தரின் போதனைகளின் மையமாக இருந்த  புத்த கயாவில் ---  இலங்கை, பூட்டான், மங்கோலியா, தைவான், கம்போடியா, திபெத் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளின் குடிமக்களால் கட்டப்பட்ட பல மடங்கள் மற்றும் கோயில் உள்ளன.  

பல மடங்களும் தொடர்ந்து சில இடங்களில் வரிசையாக அமைந்துள்ளன, அதிலும் அந்த அந்த நாட்டின் பாரம்பரிய முறைப்படி அமைந்துள்ளது இங்கு மிக சிறப்பு.


 உதாரணமாக, தாய்லாந்து கோவில் சாய்வு வடிவில் உள்ளது, ஜப்பானில் உள்ள நிப்பான் கோவில் பகோடா வடிவ அமைப்பாகும்.

 பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட இந்த கட்டிடக்கலை இங்கு  கயாவில்  மிகவும் பிரமிக்க வைக்கும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். 

Daijokyo புத்த கோவில், ஜப்பான்.....

பீகார் அரசால் ஒதுக்கப்பட்ட 2 ஏக்கர் நிலத்தில் டைஜோக்கியோ புத்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயம் 1983 பிப். 13 அன்று அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் மேதகு கியானி ஜைல் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு மாடி கான்கிரீட் கட்டிடம், ஜப்பானிய பாணியில் மேலே மூன்று மாடி பகோடா உள்ளது. இந்த  கோவிலில்  ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட வெண்கலத்தால் ஆன  தியான நிலையில் உள்ள  புத்தர் அருள் புரிகிறார்.










இங்கு எங்கு திரும்பினாலும் அழகிய ஓவியங்கள் மிளிர்கின்றன.






கர்மா திபெத் கோவில்

இந்த காட்க்யு கர்மா திபெத்திய கோயில், டைஜோக்கியோ ஜப்பானிய கோயிலுக்கு அருகில் மற்றும் இந்தோசன் நிப்போஞ்சிக்கு மேற்கே அமைந்துள்ள ஒரு அழகான திபெத்திய கோயிலாகும். இந்த கோவில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. புத்தரின் வாழ்க்கை நிகழ்வின் ஓவியங்களுடன் இந்த கோயில் சுவர் அருமையாக  சித்தரிக்கப்பட்டுள்ளது. 





















தொடரும் ...

அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼





No comments:

Post a Comment