13 June 2023

10. மங்கள கௌரி மந்திர்



 1. வாரணாசி ......


மகாபோதி கோவில் பார்த்த பிறகு அங்கிருந்து அருகில் இருந்த ஸ்ரீ   ராமர் கோவிலுக்கு அந்த ஆட்டோக்காரர் எங்களை  அழைத்து சென்றார். உண்மையில் மிக அழகான இடம் 70 படிகள் ஏறி மேலே சென்றால் ஸ்ரீ ராமர், ஸ்ரீ லக்ஷ்மணர்,  சீதா மாதா, அனுமனுடன் வெண்ணிறத்தில் காட்சி  அளிக்கிறார்.















அழகான அமைதியான இடம். இங்கு தரிசனம் கண்டு பிறகு நாங்கள் சென்ற இடம்.. .மங்கள கௌரி மந்திர்.  



மங்கள கௌரி மந்திர் -

 பல்குனி ஆற்றின் கரையில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது மங்கள கௌரி ஆலயம். இது மிகப் புராதனமான 51 சக்தி ஸ்தலங்களில் ஒன்று.


இங்கு குறுகலான வழியில் பல படிகள் கடந்து சென்று அம்பாளை தரிசிக்க வேண்டும்.

 மங்கள கௌரி மந்திர் மைதானத்தில் விநாயகர், மா காளி, ஹனுமான் மற்றும் சிவன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

அசுரர்களிடமிருந்து தேவர்களை ரட்சிக்க மஹா விஷ்ணுவின் ஆலோசனைப்படி தேவர்கள் ஒவ்வொருவரின் ஆன்ம சக்தியில் இருந்தும் ஸ்ரீ சதி தேவி உருவாகிறாள். இந்த சதி தேவி தட்சனால் வளர்க்கப்படுகிறாள். சிவபெருமானை மணந்து கொண்டதால் சதி தேவி மீதும் சிவன் மீதும் தட்சண் கோபம் கொள்கிறான். 

தட்சண் நடத்திய யாகத்துக்கு சிவபெருமானை அழைக்காததால் கோபம் கொண்ட பார்வதி தேவி  தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.

சிவபெருமான் தன் மனைவியின் உடலை கையில் சுமந்து கொண்டு திரிந்தார். இதனால் மூவுலகிலும் அனைத்து இயக்கங்களும் ஸ்தம்பித்து நின்றன. இதைக்கண்ட மஹாவிஷ்ணு தன் கையில் உள்ள சக்ராயுதத்தை பிரயோகித்து சதிதேவியின் உடலை பல துண்டங்களாக சிதைத்தார். அப்படி உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி ஸ்தலங்களாக வழிபடப்பட்டு வருகின்றன. 

அப்படி சதிதேவியின் மார்பு பகுதி விழுந்த இடமே மங்கள கௌரி ஆலயமாக விளங்குகிறது.









இங்கு இந்த மண்டபத்தின் உள்ளேயே அம்பாள் அருள் புரிகிறார். மிக குறுகலான இடம். நாங்கள் சென்ற பொழுது ஒரே நேரத்தில் பலர் உள்ளே செல்லவும், வெளியே வரவும் என தள்ளு முள்ளு நடந்தது. பிறகு சிறிது நேரம் காத்திருந்து பொறுமையாக தரிசனம் கண்டு வந்தோம். ஆனாலும்  உள்ளே சில நிமிடங்கள் கூட நிற்க இயலவில்லை. ஏனோ  இவ்விடத்தில் படங்கள் ஒன்றும் நாங்கள்  எடுக்கவில்லை. எனவே இந்த கோவிலின் படங்கள் எல்லாம் இணையத்திலிருந்தே.


அங்கிருந்து நேராக எங்கள்  மடத்திற்கு  சென்று விட்டோம். அங்கு எங்களின்  மதிய  உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் மீண்டும் ஒரு முறை விஷ்ணு பாதம்  கோவிலுக்கு சென்றோம்.


இப்பொழுது இங்கு முற்றிலும் வேறு தோற்றம். பிண்ட தானமும், அதை செய்யும் வாத்தியார்கள்  யாரும் இல்லை. ஆனால் அருமையான பஜனை நடந்து கொண்டு இருந்தது. 

விஷ்ணு பாதத்திற்கு அழகான  அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். சந்தனம் மற்றும் பிரஸ் வைத்து பொறுமையாக  செய்தார்கள் ....அதனை கண்டு ரசித்து மீண்டும் ஒரு முறை கோவிலை வலம்  வந்த பிறகு மற்றோரு ரிக்க்ஷாவில் ஏறி  எங்கள்  இடம் வந்தோம்.















அன்று இரவு எங்களுக்கு கயாவிலிருந்து வாரணாசிக்கு ரயில் பயணம்....

மீண்டும் காலை வாரணாசி பயண அனுபவத்துடன் அடுத்த பதிவில் காணலாம்.
 

அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼




2 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. ஸ்ரீ ராமர்,, லெஷ்மணர், சீதா பிராட்டியோடு அனுமன் அனைவரையும் வணங்கி கொண்டேன். மங்கள கௌரி மந்திர், மற்றும் விஷ்ணு பாதம் வைத்திருக்கும் கோவிலையும் நமஸ்கரித்து கொண்டேன். எல்லா கோவிலுள்ளும் தீடீரென இப்படித்தான் தள்ளு முள்ளு வந்து விடும். ஆரம்பத்திலிருந்து நிதானமாக ஒருவர் பின் ஒருவராக வந்த போதும் கடவுளை காணும் சமயத்தில் என்ன அவசரமோ இந்த மக்களுக்கு என்ற எண்ணமே வருகிறது...! பகிர்வுக்கு நன்றி சகோதரி. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. நாங்கள் பல இடங்களுக்கு (மங்கள கௌரி, இராமர் கோவில்) செல்லவில்லை. ச்ராத்தம் முடிந்தபிறகு மாலை 6 மணிக்கு அந்த ஊரிலிருந்து கிளம்பிவிட்டோம். மாலையில் விஷ்ணுபாதம் கோவில் அமைதியாக இருக்கும். எங்களுக்கு விஷ்ணுபாதத்தில் அங்கு வாங்கிய காப்பர் விஷ்ணு பாதத்தை வைத்துத் தந்தார்கள்.

    ReplyDelete