31 May 2023

7.பெரிய புத்தர் சிலை (Great Buddha Statue)


வாழ்க வளமுடன் 






முந்தைய பதிவுகள்  

 பெரிய புத்தர் சிலை (Great Buddha Statue)

கயாவில் உள்ள முக்கியமான  சுற்றுலாத்தலங்களில் ஒன்று இந்த பெரிய புத்தர் சிலை.

இங்கு கௌதம புத்தர் தியானத்தில், தாமரையில் அமர்ந்த நிலையில் இருக்கிறார்.

 இந்த கல் சிலை 64 அடி உயரம் கொண்டது. இதன் மொத்த கட்டுமான உயரம் 80 அடி. 

 தியானத்தில் இருக்கும் புத்தரின் 64 அடி உருவத்தைக் காண உலகம் முழுவதிலிருந்தும்  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். 

இந்தச் சிலையை அமைத்து முடிக்க நான்கு வருடங்கள் ஆனது.  1989-ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று திரு  தலாய் லாமா அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இது புகழ்பெற்ற தமிழ்நாட்டு சிற்பி வைத்தியநாத கணபதி ஸ்தபதியால் உருவாக்கப்பட்டது.

 பகவான் கௌதம புத்தரின் மிக முக்கியமான பத்து மாணவர்களின் சிறிய சிலைகள் பெரிய சிலையைச் சுற்றி உள்ளன. 







தொடரும் ...

அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼




2 comments:

  1. அழகான இடம். நானும் எனது பயணத்தில் இங்கே சென்று வந்தேன்.

    ReplyDelete
  2. மிக அழகான புத்தர் சிலை. காணொளிகளும் பார்த்தேன் நல்லாருக்கு. அனு. தகவல்களும் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    ReplyDelete