26 May 2023

48.அரக்கனுடன் பெருதேனோ பெரிய உடையார் போலே !

48) அரக்கனுடன் பெருதேனோ பெரிய உடையார் போலே !









ராமர், லக்ஷ்மணர்கள் வனவாசத்தின்போது பஞ்சவடியை என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கே ஒரு மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. அதில் மிகப் பெரிய கழுகு ஒன்று இருந்தது. ராமர் முதலில் பறவை உருவில் ஏதோ ஒரு அசுரன் என்று எண்ணினார். 

கழுகைப் பார்த்து “நீ யார் ?” என்றார். 

கழுகு பேசியது. “குழந்தைகளே! என் பெயர் ஜடாயு. உங்கள் தந்தை தசரதனின் பிரியமான தோழன்” என்றது.

ராமர் உடனே அந்தக் கழுகை வணங்கி “உன் கதையைக் கூறு” என்று சொல்லத் தன் கதையை ஜடாயு கூறியது.

காசியப முனிவரின் மனைவி பெயர் வினதை. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அருணன், கருடன். அருணன் ஊனமுற்றவன் ஆனால் நல்ல பிரகாசமாக இருப்பான். அவனைச் சூரியன் தன் தேரோட்டியாக வைத்துக்கொண்டான்.


அருணனுக்கும் சியோனி என்ற பெண்ணுக்கும் நானும் சம்பாதியும் இரண்டு பிள்ளைகளாகப் பிறந்தோம். சம்பாதி என் அண்ணன். சிறுவயதில் யார் உயரப் பறக்க முடியும் என்று எங்களுக்குள் போட்டி. நானும் சம்பாதியும் மேலே பறக்கச் சூரியனுக்கு அருகில் சென்றோம். வெப்பம் தாங்காமல் நான் மயங்கி விழும் சமயம் என் அண்ணனான சம்பாதி தன் சிறகுகளை அகலக் குடை மாதிரி விரித்து என்னைக் காப்பாற்றினான். ஆனால் பாவம் சூரிய வெப்பத்தால் சம்பாதியின் சிறகுகள் பொசுங்கின. இருவரும் கீழே விழுந்தோம். சம்பாதி விந்திய மலைத் தொடரில் விழுந்தான். நான் இங்கே பஞ்சவடியில் விழுந்தேன். இப்போது உங்களைச் சந்தித்தேன்.


ராமர் தன் கதையைச் சொல்லிவிட்டு.

 ”பதினான்கு வருடங்கள் வனவாசம் எங்கள் வனவாசம் முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. என் நடு தாய் கைகேயி கேட்டுக்கொண்டதால் நாங்கள் காட்டுக்கு வந்தோம். என் தந்தை தசரதன் மாண்டார். இங்கே உங்களைப் பார்க்கும்போது என் தந்தையைப் பார்ப்பது போல இருக்கிறது. பாதுகாப்பாக உணர்கிறோம். இங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கலாம் என்று இருக்கிறேன் ”என்றார்.

“நான் இருக்கும் வரை உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது” என்று மிகுந்த சந்தோஷத்துடன் கூறியது. 

ஜடாயுவோடு மூவரும் பஞ்சவடி நோக்கி தொடர்ந்தனர். 

இராமர் குடியிருந்த ஆஸ்ரமத்தின் அருகிலேயே ஜடாயுவும் தங்கியது. மீண்டும் பயணத்தை தொடர்வதற்கு முன் இராமன் இலக்குவனிடம், "நாம் நமது தந்தையிடமிருந்து பிரிந்துவிட்டோம். ஆகையால், ஜடாயுவின் சிறகுகளின் கீழ் வசிப்போம்" என்றான். 

பஞ்சவடி நோக்கி காட்டில் நடந்து செல்லும் ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும் இலட்சுமணனையும் வெயிலில் இருந்து பாதுகாக்க, தனது பெரிய அகண்ட சிறகுகளை குடைப் போல் விரித்தது ஜடாயு.

ஆனால் அதற்குப் பிறகு தான் ராமருக்கு ஆபத்தே வந்தது!

சூர்ப்பணகை வந்தாள். மூக்கு அறுபட்டு போனாள். பிறகு பல ஆயிரம் ராட்சசர்களுடன் சண்டையிட்டார் ராமர். மாரீசன் மாய மானாக வந்து, ராமர் அதைத் துரத்திக்கொண்டு போக, சீதையைக் கவர்ந்து சென்றான் ராவணன்.

ராவணன் ஆகாசத்தில் சீதையைத் தூக்கிச் செல்லும்போது ஜடாயு கீழே இருப்பதைப் பார்த்தாள் சீதை. “ஐயோ என்னை ராவணன் தூக்கிச் செல்கிறான். ராமனிடம் சொல்லுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினாள்.

ஜடாயு மேலே பார்த்தது.

 உடல் பதறியது. 

விஷயத்தைப் புரிந்துகொண்டது. 

உடனே “ராவணா நீ சாஸ்திரம் அறிந்தவன். இப்படி ராமரின் மனைவியைத் தூக்கிக்கொண்டு போவது முறையற்ற செயல்” என்று அறிவுரை கூறியது. 

ராவணன் கேட்கும் நிலையில் இல்லை.

 ஜடாயு மேலே பறந்து சென்று ராவணனுடன் சண்டை போட்டது. ஜடாயுவிற்கு வயதாகிவிட்டதால் ராவணன் என்ற அரக்கனின் சக்திக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 

ஜடாயு அசந்த சமயமாகப் பார்த்து ராவணன் தன் வாளால் அதன் இறக்கை இரண்டையும் வெட்டித் தள்ளினான். கீழே விழும்போது அதன் கால்களையும் சீவினான்.

சீதை ஜடாயுவின் நிலைமையைப் பார்த்துக் கலங்கினாள். அழுதுகொண்டே ஜடாயுவைத் தழுவிக்கொண்டாள். ஜடாயு அப்படியே ரத்தம் சொட்டச் சொட்டக் குற்றுயிரும் குலையுயிருமாக ஜடாயு கீழே விழுந்தது.

ராம லக்ஷ்மணர்கள் சீதையைத் தேடிக்கொண்டு வரும் வழியில் ரத்த குட்டையில் ஜடாயு விழுந்து கிடக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ந்துபோனார்கள். 

ஜடாயு பேச முடியாமல் “ராவணன் என்னை வீழ்த்திவிட்டு சீதாபிராட்டியை எடுத்துக்கொண்டு ஆகாச மார்க்கமாகப் போனான் அவனிடம் சண்டை போட்டேன். என்னை வெட்டி விட்டான்” என்றபோது, ராமருக்குத் துக்கம் முன்பை காட்டிலும் அதிகமாகியது.

 தன் வில்லை விட்டெறிந்து ஜடாயுவைக் கட்டிக்கொண்டு கீழே விழுந்து புரண்டு அழுதார்.

அப்போது ராமர் ”லக்ஷ்மணா ! கையில் கிடைத்த ராஜ்யத்தை திடீரென்று இழந்தேன்; ராஜ்யத்தில் பிச்சை எடுத்துக்கொண்டு வாழ்ந்திருப்பேன். அப்படியும் இல்லை, காட்டுக்குத் துரத்தப்பட்டேன். இங்கும் நிம்மதி இல்லை, சீதையைப் பறிகொடுத்தேன். சொந்தம் பந்தம், தம்பிகள் பக்கத்திலிருந்தாலாவது கொஞ்சம் துக்கத்தை போக்கலாம். ஆனால் அவர்களும் பக்கத்தில் இல்லை. என் தந்தை போல மதிக்கும் ஜடாயுவின் அரவணைப்பில் சிறிது காலம் வாழலாம் என்று எண்ணியிருந்தேன். இப்போது ஜடாயுவிற்கும் இந்த நிலமை என்று புலம்பித் தீர்த்து ஜடாயுவைத் தடவிக் கொடுத்தார். 

ஜடாயு ராமர் மடியில் ஈனக்குரலில் “குழந்தாய்! சிரஞ்சீவியாக இருப்பாய்” என்று வாழ்த்திவிட்டு உயிரை விட்டது.

பெண் பிள்ளை தொடர்ந்தாள் “சாமி! இறக்கும் சமயத்தில் கூடப் பெருமாளைப் பார்த்துப் பெரியாழ்வார் போலப் பல்லாண்டு பாடியதால் ஜடாயுவிற்குப் பெரிய உடையார்” என்று பெயர் ஏற்பட்டது என்றாள்.

 சீதாபிராட்டி ராமரைத் தவிர யாரையும் தொட்டதில்லை. அசோகவனத்தில் அனுமார் தோளின் மீது அமர்ந்தால் இப்பொழுதே ராமனிடம் கொண்டு சென்று விடுகிறேன் என்றபோது தோளில் ஏற மறுத்தாள். அப்படியிருக்க ராவணன் தூக்கிக்கொண்டு சென்றபோது, ஜடாயுவைத் இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள். பெரிய திரு என்றால் மஹாலக்ஷ்மி அவளுடைய அருள் கிடைத்தது ஜடாயுவிற்கு எனவே ‘பெரிய திருவுடையார்’. அது மட்டுமில்லாமல், ராமரால் தடவிக்கொடுக்கப்பட்டு சரம கைங்கரியம் செய்யப்பட்டார், அந்தப் பெரிய செல்வத்தை உடையவர் ஜடாயு.

"அப்படி ஜடாயுவைப் போல இராவணனுடன் போர் புரிந்து உடலையும் உயிரையும் இழக்க துணிந்தேனா? இல்லையே. பின் எதற்காக இந்த திருக்கோளூரில் இருக்க வேண்டும்?" என்று அந்தப் பெண்பிள்ளை கிளம்புகிறாள்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே






திருவாய்மொழி -முதற் பத்து

1- 9 இவையும் அவையும் 

ஆழ்வாரோடு  எம்பெருமான் கலந்த வகை 


ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி,

செக்கம்  செக அன்று அவள் பால் உயிர் செக உண்ட பெருமான்,

நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக,

ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சின் உளானே. 9.5

2991


மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே,

காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே,

சேயன், அணியன், எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்,

தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணையானே. 9.6

2992






49. திருநிலாத்திங்கள் துண்டம்

ஸ்ரீ நேர்ஒருவரில்லாவல்லீ ஸமேத ஸ்ரீ நிலாத்திங்கள்துண்டத்தான் ஸ்வாமிநே நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕



No comments:

Post a Comment