24 May 2023

ஶ்ரீரெங்கநாச்சியார் பூச்சாற்று உற்சவம்....

வாழ்க வளமுடன் ....

முந்தைய பதிவு ..... ஶ்ரீரெங்கநாச்சியார்  தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்)...

 ஶ்ரீரெங்கநாச்சியார் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்)....

ஆறாம் திருநாள் ...











ஶ்ரீரெங்கநாச்சியார்   --- தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்),

ஏழாம்  திருநாள் ....















ஶ்ரீரெங்கநாச்சியார்   --- தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்),

எட்டாம்  திருநாள் ...










ஶ்ரீரெங்கநாச்சியார்   --- தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்),

ஒன்பதாம்  திருநாள் 













ஶ்ரீரெங்கநாச்சியார்   --- தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்),

பத்தாம் நிறைவு திருநாள் ..























ஶ்ரீரெங்கநாச்சியார்  --- தாயார் சந்நிதியில்  கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்),
சாற்றுமுறை 










890.   

குடதிசை முடியை வைத்துக்*  குணதிசை பாதம் நீட்டி,* 

வடதிசை பின்பு காட்டித்*  தென்திசை இலங்கை நோக்கி,*

கடல்நிறக் கடவுள் எந்தை*  அரவணைத் துயிலுமா கண்டு,* 

உடல் எனக்கு உருகுமாலோ*  என் செய்கேன் உலகத்தீரே! (2)


894.   

கங்கயிற் புனிதம் ஆய*  காவிரி நடுவு பாட்டு,*

பொங்குநீர் பரந்து பாயும்*  பூம்பொழில் அரங்கந் தன்னுள்,*

எங்கள் மால் இறைவன் ஈசன்*  கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்,*

எங்ஙனம் மறந்து வாழ்கேன்*  ஏழையேன், ஏழையேனே!


895.   

வெள்ளநீர் பரந்து பாயும்*  விரிபொழில் அரங்கந் தன்னுள்,*

கள்வனார் கிடந்தவாறும்*  கமல நன் முகமும் கண்டு*

உள்ளமே! வலியைப் போலும்*  ஒருவன் என்று உணர மாட்டாய்,*

கள்ளமே காதல் செய்து உன்  கள்ளத்தே கழிக்கின்றாயே!


எத்தனை அழகிய உற்சவம், நேரில் பார்த்து பரவசம் அடைந்தாலும்  இத்தகைய  அழகிய படங்களை நம்மால் எடுக்க இயலாது. அதனாலே  முகநூலில் ஸ்ரீரெங்க விலாசம் தளத்திலிருந்து இங்கு பகிர்ந்தேன். இந்த முறை தாயாரை தரிசித்து வரும் பொழுது  சிலர் கேமரா கையில் வைத்து பேசி கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று நீங்கள் தான்  ஸ்ரீரெங்க விலாசம் தளத்தில்  பகிர்பவர்களா என கேட்டு எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் கூறினேன்.

நிச்சயமாக அவர்களின் இந்த படங்களின் காரணமாகவே நம்பெருமாளையும்,  தாயாரையும் இன்னும் நேரில் காணும் ஆவல்  மேலிடுகிறது என்ற தகவலையும் பகிர்ந்தேன். அதற்கு அவர்கள் அனைத்தும் தாயார்  செயல் என கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

என்றும் அவர்கள் பணி  சிறக்க தாயார் அருள் புரிவார்.

தொடர்ந்து தாயாரின் அழகிய தரிசனத்தை கண்டு ரசித்த அனைவருக்கும் நன்றிகள். 


ஶ்ரீரெங்கநாச்சியார்  திருவடிகளே சரணம் ...

அன்புடன் 

அனுபிரேம் 💗💗💗



No comments:

Post a Comment