13 May 2023

46. வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே.

 (46) வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே.




 “ராமருக்குப் பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடக்கிறது. அயோத்தியில் எல்லோரும் ஆனந்தமாக இருக்கிறார்கள். அந்தச் சமயம் பரதன் தன் மாமாவைப் பார்க்கக் கேகய நாட்டுக்குச் சென்றிருந்தான். மறுநாள் பட்டாபிஷேகம். அன்று இரவு கைகேயி கூனி பேச்சைக் கேட்டு ராமரைக் காட்டுக்கு அனுப்ப. அதிர்ச்சியில் தசரதன் இறந்து போனான். வசிஷ்டர் தூதுவர்களை அனுப்பி பரதனிடம் எதுவும் சொல்லாமல் அழைத்து வாருங்கள் என்றார்..


நடந்தது இது எதுவும் தெரியாமல், பரதன் அயோத்திக்குத் திரும்பினான். 

அரண்மனைக்கு வந்த பிறகே நடந்த விஷயங்களை அறிந்தான். தன் தாய் கைகேயி தான் எல்லாவற்றிருக்கும் காரணம் என்று அவளை ஏசினான். ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று புலம்பினான். 

வசிஷ்டர் பரதனைப் பட்டாபிஷேகம் செய்து கொள்ள அறிவுறுத்தினார். ஆனால் பரதன், இந்த நாடு ராமருடைய சொத்து. நானும் இந்த ராஜ்யத்தைப் போல ராமருடைய சொத்து. 

ஒரு சொத்து இன்னொரு சொத்தை எப்படி ஆள முடியும் ? என்றான். 

ராமரைத் திரும்ப அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று காட்டுக்குப் புறப்பட்டான்.


வழியில் குகன் பரதனைப் பார்த்து அவனுடைய பெருமைகளை உணர்ந்து “பரதா ஆயிரம் ராமர்கள் சேர்ந்தாலும் உன் ஒருவனுக்குச் சமம் ஆக மாட்டார்கள்” என்கிறான். 

குகன் லக்ஷ்மணனுக்கு ராமரிடம் உள்ள பரிவு பற்றியும் பரதனிடம் பெருமையாகப் பேசினான். அப்போது குகன் பரதனிடம் ராமர் படுத்துக்கொண்ட இடத்தைக் குகன் காண்பித்தான்.

 உடனே பரதன் இங்கேயே நானும் இன்று உறங்கப் போகிறேன். அண்ணன் பட்ட கஷ்டங்களைப் நானும் படுவேன். அண்ணன் சாப்பிட்ட பழம், கிழங்கையே நானும் உண்பேன். அண்ணன் உடுத்திய மரவுரி போல நானும் அணிவேன் என்று சபதம் செய்தான்.


பிறகு பரத்வாஜ முனிவரைச் சந்தித்தான் பரதன். முனிவர் “பரதா இந்தப் பெரிய படையுடன் எங்கே போகிறாய் ? ராமனுக்கு ஏதாவது தீங்கு விளைவிக்கப் போகிறாயா ?” என்று சந்தேகத்துடன் கேட்டபோது அதற்கு “ராமரைத் திரும்ப அழைத்து வரப் போகிறேன்” என்று அழுதுகொண்டே பதில் கூறினான் பரதன்.


பரதனை வருவதைப் பார்த்த லக்ஷ்மணனும் சந்தேகப்பட “பரதன் என் உயிரைவிட மேலானவன்” என்றார் ராமர். ராமரைப் பார்த்த பரதன் ஓடி வருகிறான். தரையில் தாரைத் தாரையாகக் கண்ணீர் சிந்துகிறான். துக்கம் தொண்டையை அடைக்கப் பேச முடியாமல் தவிக்கிறான். என்ன செய்வது என்று தெரியாமல் தரையில் புரள்கிறான். ராமர் பரதனை அணைத்துக்கொண்டு தன் மடியில் வைத்துக் கொள்கிறார்.


நடந்த எல்லா விஷயங்களையும் பரதன் கூற ராமர் அதைக் கேட்கிறார். 

பரதன் ”அண்ணா ! திரும்ப நாட்டுக்கு வர வேண்டும். அயோத்தியை ஆள வேண்டும்” என்று ராமர் காலில் விழுகிறான். ஆனால் ராமர் மறுத்துவிடுகிறார். 

பரதன் எவ்வளவு கெஞ்சியும் ராமரின் மனம் இரங்கவில்லை. விடாப்பிடியாக இருக்கிறார். பரதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

 ராமரின் விருப்பமே தன் விருப்பம் என்ற முடிவுக்கு வருகிறான். 

“இந்தப் பாதுகைகளின் மீது ஏறி நின்று எனக்குக் கொடுங்கள் அதை அயோத்திக்கு எடுத்துச் செல்கிறேன்” என்று கூற ராமர் பாதுகைகளைக் கொடுக்கிறார். 

”நீங்கள் திரும்ப வரும் வரையில் இந்தப் பாதுகைகளே எனக்குக் கதி. அவையே அயோத்தியின் அரச பீடத்தை அலங்கரிக்கும்” என்று அந்தப் பாதுகைகளை தன் தலைமீது சுமந்து அயோத்திக்கு திரும்பச் செல்கிறான் பரதன்.


 பொருள் ஒன்றை ஓர் இடத்தில் வைத்தால் அது அங்கேயே இருக்கும். ராமர் பரதனை அயோத்திக்குத் திரும்பப் போ என்று சொன்னபோது பரதன் ஒரு பொருள்போலக் கேட்டுக்கொண்டான். நான் பரதனைப் போலப் பெருமாள் சொன்ன பேச்சைக் கேட்டேனா ? இல்லையே அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள் அச்சிறுபெண்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே



44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45.வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணைப் போலே !



திருவாய்மொழி -முதற் பத்து

1- 9 இவையும் அவையும் 
ஆழ்வாரோடு  எம்பெருமான் கலந்த வகை 


இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்,

எவையும்  எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்,

அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்,

சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சுழல் உளானே. 9.1

2987


சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத்து உலகை

கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்,

வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்

ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலில் இலானே. 9.2

2988













47. திருநீரகம்

ஸ்ரீ நிலமங்கைவல்லீ ஸமேத ஸ்ரீ ஜகதீஸாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment