02 September 2023

60. அவன் போனான் என்றேனோ மாருதி ஆண்டான் போலே !

 (60) அவன் போனான் என்றேனோ மாருதி ஆண்டான் போலே !





சுவாமி ராமானுஜர் மேல் கோட்டையில் திருநாராயணப் பெருமாளைச் சேவித்துக்கொண்டு இருந்தாலும் அவர் திருவரங்கன் நினைவாகவே இருந்தார். சோழ அரசன் இருக்கும் வரை அங்கே செல்ல முடியாத சூழ்நிலை. எப்போது திருவரங்கத்துக்குப் போகலாம் என்று தினமும் ஏங்கிக்கொண்டு இருந்த சமயம் ஒரு நாள் வைணவ அடியார் ஒருவர் மேல்கோட்டைக்கு விஜயம் செய்தார்.


பெருமாளை அங்கே சேவித்துவிட்டு. 

ராமானுஜர் அங்கே இருக்கிறார் என்று தெரிந்து அவர் மடத்துக்குச் சென்று அவரை வணங்கி “நான் திருவரங்கத்திலிருந்து வருகிறேன்” என்ற சொன்னதுடன் ராமானுஜருக்கு மிகுந்த சந்தோஷம்.

 திருவரங்கம் எப்படி இருக்கிறது. 

கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார். 

அதற்கு அந்த வைணவ அடியார் கண்களில் கண்ணீருடன் “உங்களுக்குப் பதிலாகக் கூரத்தாழ்வானும் கூடப் பெரிய நம்பிகளும் அரசவைக்குச் சென்றார்கள்.


அங்கே ஆழ்வானிடம் ‘சிவனே பரம் பொருள்’ என்று கையெழுத்திட அரசன் கட்டாயப்படுத்தினான். 

ஆழ்வான் முடியாது என்று மறுக்க, அரசன் அவர்களுடைய கண்களைப் பறிக்க ஆணையிட்டான். 

ஆழ்வான் “நீ என் கண்களைப் பறிக்க வேண்டாம், என்று தாமே பறித்துக் கொண்டார்.

 முதிர்ந்த வயதுடைய பெரிய நம்பிகளின் கண்களைக் காவலாளிகள் கூர்மையான ஆயுதத்தால் பறித்தார்கள். அந்த வேதனையால் பெரிய நம்பி திருவரங்கம் திரும்பும் போதே வழியில் திருநாட்டை அடைந்தார். 

கூரத்தாழ்வான் உங்களையே நினைத்துக்கொண்டு திருவரங்கத்தில் இருக்கிறார்” என்று அந்த வைணவ அடியார் சொல்ல ராமானுஜர் கண்கலங்கி தன் சீடர் சிறியாண்டானை அழைத்தார்

 (சிறியாண்டான் ராமானுஜர் மடத்தில் கறிகாய், பால் நெய் முதலியவற்றை எல்லாம் ஏற்பாடு செய்பவர்).


”ஆண்டானே! உடனே திருவரங்கத்துக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை அறிந்து வாரும்” என்று சொல்லச் சிறியாண்டான் திருவரங்கம் புறப்பட்டார்.

திருவரங்கம் அடைந்த சிறியாண்டான் கூரத்தாழ்வான் இல்லத்துக்குச் சென்று அவரைச் சேவித்தார். 

ஆழ்வான் “ராமானுஜர் நலமாக இருக்கிறாரா ?” என்று கேட்க அதற்குச் சிறியாண்டான் ராமானுஜர் நலமாக இருக்கிறார் பெரிய நம்பிகள் பிரிவுக்கு வருந்தியதையும், ஆழ்வான் கண்கள் பறிபோனதற்குக் கதறி அழுதார். நிலைமையை அறிந்து வர என்னை அனுப்பினார்” என்று கூறினார்.


”உயிருக்கு உயிரான ராமானுஜர் மேல்கோட்டையில் நலமாக இருக்கிறார் என்று கேட்டு மனம் குளிர்ந்தது. என் கண்கள் மட்டும் தான் போயிற்று உலகிற்கே கண்ணாக விளங்கும் ராமானுஜர் நலமாக இருக்கிறார் என்ற இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன்!” என்றார் ஆழ்வான் கண் இல்லை என்றாலும் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.


அப்போது ஒருவர் வந்து வைணவர்களைக் கொடுமைப்படுத்திய சோழ மன்னன் கழுத்தில் ஒரு பெரிய கட்டி வந்து இறந்தான் என்ற செய்தியைச் சொன்னார். 

இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள சிறியாண்டான் கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

சோழ அரசன் மாண்டான் என்ற செய்தியை நிச்சயித்துக் கொண்டு மேல்கோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில் அம்மங்கியம்மாளை சந்தித்து, இருவரும் விரைவாக மேல்கோட்டை வந்தடைந்தார்கள்.


ராமானுஜர் மேல்கோட்டையில் கல்யாணிப் புஷ்கரணியில் தன் சீடர்களுடன் காலை நீராடிவிட்டு அங்கே அநுஷ்டானம் முடிக்கும்போது சிறியாண்டானும், அம்மாளும் ராமானுஜர் திருவடிகளில் விழுந்து சேவித்து ”திருவரங்கம் திரும்பலாம் !” என்று கூறி பெரிய நம்பிகளுக்கும், கூரத்தாழ்வானுக்கும் அபராதம் செய்த சோழன் கழுத்தில் புண் புழுத்துப் புரண்டு போனான் என்ற செய்தியைக் கூறினார்கள்.


உடையவர் இந்தச் செய்தியைக் கேட்டு ஆனந்தப்பட்டு “சிறியாண்டானே !” என்று அவரை வாரியெடுத்து அணைத்துக் கொண்டு ”நீர் எமக்கு மற்றொன்றில்லாத மாருதி சிறியாண்டான் !” என்றார்.


அன்று அனுமார் கொண்டு வந்த நல்ல செய்தியைக் கேட்ட சீதை ‘அனுமாரே நீ கொண்டு வந்த நல்ல செய்திக்கு என்னால் கைமாறு செய்ய முடியாது’ என்று சொன்னாள். 

அதுபோல ராமானுஜர் சிறியாண்டானை ‘மாறொன்றில்லா மாருதி சிறியாண்டான் ' என்று கூறி என்னிடம் உமக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை அதனால் மீண்டும் உமக்கு த்வயத்தை உபதேசிக்கிறேன்” என்று ராமானுஜர் மாருதி சிறியாண்டானுக்கு மீண்டும் த்வயத்தையே பரிசாக அருளினார்.


பின்னர், இராமானுஜர் தன்னுடைய திருமேனி மேல் ஒரு விக்கிரகம் செய்யச் சொல்லி அதை வைத்து வழிபட திருநாராயணபுரம் சீடர்களுக்கு அனுமதி அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் புறப்பட்டார்

"மாருதியாண்டான் போல வெகுதொலைவு பயணம் மேற்கொண்டு நற்செய்தியை கொண்டு வந்தேனா? இல்லையே. நான் இந்த திருக்கோளூரை விட்டுப் போனால் தான் என்ன?" என்று இராமானுஜரிடமே கூறிவிட்டு புறப்பட்டுச் செல்கிறாள் பெண்பிள்ளை.

முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே







திருவாய்மொழி -இரண்டாம் பத்து

 2- 1 வாயும் திரை - பிரிவாற்றாமைக்கு வருந்துதல்



நொந்து ஆராக் காதல் நோய்* மெல் ஆவியுள் உலர்த்த,* நந்தா விளக்கமே,* நீயும் அளியத்தாய்,* செந்தாமரைத் தடங்கண்* செங்கனி வாய் எம் பெருமான்,* அம் தாமம் தண் துழாய்* ஆசையால் வேவாயே. 9

3017

வேவு ஆரா வேட்கை நோய்* மெல் ஆவியுள் உலர்த்த,* ஓவாது இராப்பகல்* உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,* மா வாய் பிளந்து* மருதிடை போய், மண் அளந்த,* மூவா முதல்வா* இனி எம்மைச் சோரேலே. 10

3018 சோராத எப் பொருட்கும்* ஆதியாம் சோதிக்கே,* ஆராத காதல்* குருகூர்ச் சடகோபன்,* ஓராயிரம் சொன்ன* அவற்றுள் இவை பத்தும்,* சோரார் விடார் கண்டீர்* வைகுந்தம் திண்ணனவே. 11

3019











61.திருநீர்மலை

ஸ்ரீ அணிமா மலர்மங்கை ஸமேத ஸ்ரீ நீர்வண்ணன் ஸ்வாமிநே நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

2 comments:

  1. வாசித்தேன் அனு.

    கீதா

    ReplyDelete