01 July 2023

53. காட்டுக்கு போனேனோ பெருமாளைப் போலே !

53.  காட்டுக்கு போனேனோ பெருமாளைப் போலே !




இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்க வேண்டும் என தசரதர் முடிவு செய்து அனைவருக்கும் தெரிவித்துவிட்டு அதற்கான நல்லதொரு நாளை தேர்வு செய்யும்படி ஆச்சாரியர்களை பணித்தார்.

 பட்டாபிஷேகத்திற்கு முந்தைய தினம் இரவு சீதையும் இராமனும் ஸ்ரீரங்கநாதரை நோக்கி விரதம் மேற்கொண்டிருந்தனர்.

கைகேயியை பற்றி ஊர்மக்கள் கூறுவது...


1591.

‘தாய் கையில் வளர்ந்திலன்;

     வளர்த்தது, தவத்தால்

கேகயன் மடந்தை; கிளர்

     ஞாலம் இவன் ஆள,

ஈகையில் உவந்த அவ்

     இயற்கை இது என்றால்,

தோகை அவள் பேர் உவகை

     சொல்லல் அரிது?’ 


 இராமனை வளர்த்தவள்  கைகேயியாதலின் அவளுக்கே மிக்க மகிழ்ச்சி
உண்டு என்றனர் சிலர்.  அவள் இந்நாள் வரை  இராமனிடம் பேர் அன்பு 
கொண்டவனாய் இருந்தமையை அனைவரும் அறிவராதலின் இவ்வாறு
கூறினர் என்பார் கம்பன். 

கௌசல்யையை விட கைகேயியிடம் வளர்ந்தவன் இராமன். அவனுக்கு மறுநாள் பட்டாபிஷேகம் என்றால், மற்ற அனைவரைக் காட்டிலும் அவளுக்குத்தான் மகிழ்ச்சி.

 இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல அங்கு மந்தரை தோன்றி கைகேயியிடம் இராமன் முடிசூடப் போவதைக் கூற, ஆய பேரன்பில் ஆர்த்தெழும் அவள் முத்துமாலையை கூனிக்கு பரிசாகக் கொடுக்கிறாள்.

துன்னரும் கொடுமனக் மந்தரையும் விடாது கைகேயி மனதை மாற்றி தசரதனை வீழ்த்தி முன்பெற்ற இருவரங்களை செயல்படுத்துகிறாள். 


1601.

‘ “ஆழி சூழ் உலகம் எல்லாம்

     பரதனே ஆள,  நீ போய்த்

தாழ் இருஞ் சடைகள் தாங்கி,

     தாங்க அருந் தவம் மேற்கொண்டு,

பூழி வெங் கானம் நண்ணி,

     புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ் - இரண்டு ஆண்டின் வா” என்று,

     இயம்பினன் அரசன்’ என்றாள்.


கடல் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் பரதனே முடிசூடி ஆட்சி செய்வான். நீ நாட்டை விட்டுப் போய், சடாமுடி தாங்கி, செய்வதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து, புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வரவேண்டும் என்று அரசன் கூறினான் – இவ்வாறு கைகேயி சொன்னாள்.

 இதனைக் கேட்டு மிகவும் மனமுடைந்து மயங்கி விழுகிறான் தசரதன். 

அப்பொழுது அங்கு வந்த இராமன் நடந்ததை அறிகிறான்.

ஒரு நொடியில் இராமனுக்கு சகலமும் விளங்கி விடுகிறது. 

அவன் முகத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லை. அவ்வாசகம் உணரக் கேட்ட இராமன் ...


1602.

இப் பொழுது, எம்ம னோரால்

     இயம்புதற்கு எளிதே? - யாரும்

செப்ப அருங் குணத்து இராமன்

     திருமுகச் செவ்வி நோக்கின்;

ஒப்பதே முன்பு பின்பு;

     அவ் வாசகம் உணரக் கேட்ட

அப் பொழுது அலர்ந்த செந்தா

     மரையினை வென்றது அம்மா!


இப்பொழுது எம்மைப் போன்றவர்களால் சொல்லுவதற்கு எளிதோ? யாரும் சொல்லித் தீராத நற்குணங்களையுடைய இராமனுடைய திருமுகத்தின் அழகைப் பார்த்தால்,

 அது கைகேயி சொன்னதைக் கேட்பதற்கு முன்பும், கேட்ட பின்பும் ஒன்று போலவே, செந்தாமரை போலவே இருந்தது. 

ஆனால், அந்தச் சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்த சமயத்தில், மலர்ந்த செந்தாமரையை வென்று விட்டது! என்கிறான் கம்பன். 

கைகேயியின் கோரிக்கைகளை கட்டளையாக ஏற்று வனம் புறப்பட தயாரானான். 

இதைவிட இராமனின் நற்பண்பினை எவரால் எளிதில் விளங்க வைக்க முடியும்?

"அப்படிப்பட்ட இராமபிரானைப் போல மனதிலும் இதயத்திலும் உறுதிகொண்டு தந்தையின் வார்த்தையின் படி இராஜ்ஜியத்தை துறந்து வனம் புகவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க தனக்கு யோக்கியதை இல்லை" என்று அந்த பெண்பிள்ளை கிளம்புகிறாள்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே






திருவாய்மொழி -முதற் பத்து

 1- 10 பொருமா நீள் படை

ஈஸ்வரன் செய்யும் உபகாரம் 


கண்டாயே நெஞ்சே*  கருமங்கள் வாய்க்கின்று,*  ஓர் 
எண் தானும் இன்றியே*  வந்து இயலுமாறு,*
உண்டானை*  உலகு ஏழும் ஓர் மூவடி 
கொண்டானைக்,*  கண்டு கொண்டனை நீயுமே.    10.5

3002



நீயும் நானும்*  இந் நேர்நிற்கில்,*  மேல் மற்றோர். 
நோயும் சார்கொடான்*  நெஞ்சமே சொன்னேன்,* 
தாயும் தந்தையுமாய்*  இவ் உலகினில்,* 
வாயும் ஈசன்*  மணி வண்ணன் எந்தையே.  10.6

3003



54. திருக்கள்வனூர்

ஸ்ரீ அஞ்சிலைவல்லீ ஸமேத ஸ்ரீ ஆதிவராகாய ஸ்வாமிநே நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் நன்றாக உள்ளது. இராமாயணம் பற்றிய பாடல்களும், விளக்கமும். நன்று. ஸ்ரீ ராமரின் நற்பண்புகளை கற்க எவ்வளவு தவம் செய்திருத்தல் வேண்டும். நல்ல பண்புகளுக்கு உதாரண புருஷனல்லவா ஸ்ரீ ராமர்.🙏. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete