ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
முதல் திருநாள்
மூலவர் -சக்கரவர்த்தி திருமகன் திருக்கோலத்தில்
உற்சவர் -இளைய பெருமாள் திருக்கோலத்தில்
பாசுரம் - பேதம்நன்கரிவார்களோடு
இரண்டாம் திருநாள்
மூலவர் - ராஜகோபாலன் திருக்கோலத்தில்
உற்சவர் - ருக்மணி திருக்கல்யாணம்
நாச்சியார் திருமொழி
11.தாம் உகக்கும்
திருவரங்கன் மேல் கொண்ட காதல்
முதல் பாசுரம். “இந்த துயரமிகு நிலையிலும் நீர் வந்து உதவாமல் இருப்பது ஏன்?” என்று கேட்டால் அதற்கு பதில் வைத்திருக்கிறாரோ என்று கேளுங்கோள் என்கிறாள். என்னிடத்திலும் குறையில்லை, அவரிடத்திலும் குறையில்லை, இப்படி இருந்தும் அவன் வரவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்கிறாள்.
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ?
யாம் உகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்!
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ! முகத்தை நோக்காரால் அம்மனே! அம்மனே! 1
607
ஆபரணங்களை அணிந்துள்ள பெண்களே! நான் உகந்து அணிந்திருக்கும் என் கைவளைகள், தான் உகந்து வைத்திருக்கும் சங்குக்கு ஒப்பாகாதோ? (எனக்கு உதவாததால்) கொடிய முகங்களையுடைய திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே, சயனித்திருக்கிற திருவரங்கநாதர் என்னுடைய முகத்தை பார்க்கவில்லையே. ஐயோ! ஐயோ! ஐயோ!
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment