22 July 2023

ஆடிப்பூர நாயகி --- ஸ்ரீ ஆண்டாள்

ஆடிப்பூர  நாயகி --- ஸ்ரீ ஆண்டாள்  அவதாரம்  திருநட்சத்திரம் இன்று ...


ஆண்டாள் வாழித்திருநாமம்

திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப்  பதங்கள் வாழியே!



மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். 

ஏழாம் நூற்றாண்டு, நள ஆண்டு, ஆடி மாதம்  செவ்வாய்க்கிழமை, பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதியில்  தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்..


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, பெரியாழ்வார் தாம் அமைத்திருந்த நந்தவனத்திலுள்ள ஒரு துளசிச் செடியின் அடிவாரத்தில், பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். 

அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். 

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள்.



*காம் ததாதி இதி கோதா|*
*காம் தததே இதி கோதா||*

*காம்* -  *நல்ல வாக்கு* - 

காம் என்றால் நல்ல வாக்கு. அவள் நல்ல வாக்கைக் கொடுப்பவள். 
அவளைத் தியானித்தால், 
அவளின் திவ்ய மங்கல விக்கிரகத்தை தியானித்தால் நல்ல வாக்கைக் கொடுப்பாள். 

உத்தமமான வாக்கு உடையவள் ஆகவே, நல்ல வாக்கை நமக்கும் கொடுக்கிறாள்.

 அப்படிப்பட்ட கோதா, திருமாலை கட்ட இரு மாலை கட்டினாள். 
ஒரு மாலை பாமாலை; மற்றொன்று பூமாலை. 


பாமாலையைப் பாடி சமர்ப்பித்தாள்!

பூமாலையைச் சூடி அவன் திருவடியில் சமர்ப்பித்தாள்! 
அதனால் *சூடிக்கொடுத்த சுடர்கொடி* ஆனாள்!!

எம்பெருமானுக்கு பூமாலையையே தூது அனுப்பினாள், 
அவனும் கட்டுண்டான்! 

பகவானையே ஆண்டதாள் -  *ஆண்டாள்!* 

அவளது அவதாரத்துக்கு மூலகாரணமே *வராஹ அவதாரம்*! 

*திருப்பாவையில்*
முதல் பத்து பாசுரங்களில்
 "அவன் பெயர் பாடு"  என்றும்;

2வது பத்து பாசுரங்களில்
 "அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு பிரார்த்தனை செய்" என்றும்;

3வது பத்து பாசுரங்களில்
 "அவன் திருவடியில் சரணடை" என்றும்,

*தாம் வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை, 
இந்த முப்பது பாசுரங்களிலே விளக்குகிறாள்!*


*"அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்" அவதரித்த ஆண்டாள், ஆழ்வார்கள் கோஷ்டிக்கே கல்பலதிகையாக (கொடியாக) உயர்ந்து நிற்கிறாள்!!*












 2 . இரண்டாம்  நாள் இரவு 

 3. மூன்றாம் திருநாள்  இரவு 



5.  ஐந்தாம்  திருநாள் இரவு  --- ஐந்து கருட சேவை 

6. ஆறாம் திருநாள் 



8. எட்டாம்  திருநாள் இரவுஶ்ரீ ஆண்டாள் -  புஷ்பப் பல்லக்கு,  
ஶ்ரீ ரங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு  நடைபெற்றது.











9. ஒன்பதாம் திருநாள் -  திரு ஆடிப்பூரத்தை முன்னிட்டு திவ்ய தம்பதிகள் திருத்தேரில் ...












நாச்சியார் திருமொழி
12.மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு  விடும்படி வேண்டுதல்

மூன்றாம் பாசுரம்.   கண்ணனை ஒழுங்காக வளர்க்காததற்கு யசோதைப் பிராட்டியைச் சொல்லிக் குற்றமில்லை. தகப்பனாய் கண்ணனை அடக்கிவைத்திருக்கவேண்டிய ஸ்ரீநந்தகோபன் திருமாளிகை வாசலிலே என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள் என்கிறாள்.


தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்* 
 தனிவழி போயினாள்!' என்னும் சொல்லு* 
வந்த பின்னைப் பழி காப்பு அரிது*
  மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்* 

கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக்* 
 குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற* 
நந்தகோபாலன் கடைத்தலைக்கே*  
நள்இருட்கண் என்னை உய்த்திடுமின்*  3

619

  
“தகப்பனும் தாயும் உறவினர்களும் இருக்கும்போது தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்” என்கிற வார்த்தையானது உலகில் பரவின பிறகு அப்பழியைத் தடுக்கமுடியாது. நான் அப்படித் தனியாகப் போகாமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில், ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய கண்ணன் எதிரே வந்து தன் வடிவைக்காட்டி என்னை இழுக்கின்றான். பெண்களிடம் சண்டைசெய்து பழி விளைத்து, குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான ஸ்ரீநந்தகோபருடைய திருமாளிகை வாசலிலே நடுநிசியிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.









ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

இன்றோ திருவாடிப்பூரம்*
 எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்*
 குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னை இகழ்ந்து*
 ஆழ்வார் திருமகளாராய்.
22



பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த*
 திருவாடிப்பூரத்தின் சீர்மை*
 ஒருநாளைக்கு உண்டோ மனமே! உணர்ந்து பார்*
 ஆண்டாளுக்கும் உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.
23



அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்*
 ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்*
 பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்*
 வழுத்தாய் மனமே! மகிழ்ந்து.
24



ஸ்ரீ  ஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    ஆடிப்பூரத்தில் அவதரித்த ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் தரிசனம் இன்றைய தினத்தில் இனிது கிடைக்கப் பெற்றேன். ஸ்ரீ கோதை நாச்சியாரின் படங்கள், தேர்த் திருவிழா படங்கள் என அனைத்தும் அருமை. ஸ்ரீ ஆண்டாள் அன்னையின் திருவடிகளே சரணம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete