ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம்
6. ஆறாம் திருநாள்
ஸ்ரீரங்க மன்னார் யானை வாகனத்திலும்
பத்தாம் பாசுரம். பெரியாழ்வார் திருமகளாக இருந்தும் தர்மம் அறிந்த நீர் என்னைக் கைக்கொள்ளவில்லை என்றால் நன் என்ன செய்யமுடியும் என்று வருந்துகிறாள்.
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே? 10
616
நேர்மை என்கிற குணத்தை உடைய திருவரங்கநாதர் முன்பு தம் வாயாலே அருளிச்செய்த ஸத்யமானதும் பெருமதிப்புடையதுமான சரமச்லோகம் என்கிற வார்த்தையை எனதுஅ திருத்தகப்பனாரான பெரியாழ்வார் கேட்டு அதன்படி நிர்ப்பரராயிருப்பார்.
“தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவார்” என்ற பழமொழியானது தம்மிடத்திலேயே பொய்யாகி விட்டால் அதற்குமேல் வேறுயார் அவரை நியமிக்க முடியும்?
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment