19 July 2023

3. துவராபதி கண்ணனாக ..... ஸ்ரீ ஆண்டாள்

   ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


1.முதலாம்  திருநாள்

 2.இரண்டாம் திருநாள்




3. ஐந்தாம் திருநாள்

மூலவர் - ஆராவமுதனாக 
உற்சவர் - குறும்புசெய்வானோர் மகனாக 
















ஆறாம் திருநாள்

மூலவர் - துவராபதி கண்ணனாக 
உற்சவர் - சோலைமலைப் பெருமானாக 









நாச்சியார் திருமொழி

11.தாம் உகக்கும் 

திருவரங்கன் மேல் கொண்ட காதல் 

ஏழாம் பாசுரம்- சீதாப்பிராட்டியிடத்தில் காட்டிய பரிவை என்னிடத்தில் அவர் காட்டவில்லை என்கிறாள்.


உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து

பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்

திண்ணார் மதில்  சூழ் திருவரங்கச் செல்வனார்

எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே 7

613


திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட கோயிலிலே சயனித்திருக்கும் ச்ரிய:பதியான எம்பெருமான் ஸ்ரீராமாவதாரத்தில் சீதை என்கிற பெண் விஷயத்தில் ஆசைகொண்டு உண்ணாமலும் உறங்காமலும் வருந்தி இருந்து, பெருத்தை ஓசையைச் செய்யும் கடலில் அணைகட்டி தாம் அடைந்த எளிமைகளை எல்லாம் மறந்துபோய் இப்போது தம்முடைய பெருமைகளையே எண்ணுகிறார்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment