ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
1.முதலாம் திருநாள்
2.இரண்டாம் திருநாள்
5. ஐந்தாம் திருநாள்
7.ஏழாம் திருநாள்
மூலவர் - அரங்கர் அலங்காரத்தில்
உற்சவர் - ஆண்டாள் .
8. எட்டாம் திருநாள்
மூலவர் - செல்வநாரணன் ( மேல் கோட்டை) திருக்கோலத்தில்
உற்சவர் - உலகளந்த பெருமாள் திருக்கோலத்தில்
9. ஒன்பதாம் திருநாள்
மூலவர் - ஶ்ரீ வாமன அவதாரம்
உற்சவர் - ஶ்ரீ சௌரிராஜபெருமாள் (திருக்கண்ணபுரம்)
பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூரம் நன்னாளில்
தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திவ்ய தரிசனத்தை ரசித்த அனைவருக்கும் நன்றிகள் பல. ஸ்ரீ ஆண்டாளின் பரிபூரண ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க ஆண்டாளே அருள்வாள் .
நாச்சியார் திருமொழி
12.மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
நான்காம் பாசுரம். எம்பெருமானுக்கே முழுவதுமாக அடிமைப்பட்டவளான என்னை யமுனை நதிக்கரையில் கொண்டுவிடுங்கள் என்கிறாள்.
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்*
அவன் முகத்து அன்றி விழியேன் என்று*
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்*
சிறு மானிடவரைக் காணில் நாணும்*
கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர்*
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா*
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்*
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்*. 4
620
தாய்மார்களே! அழகிய கைத்தலத்திலே திருவாழியை ஏந்தியிருப்பவனான கண்ணனுடைய முகத்தில் தவிர வேறொருவருடைய முகத்தில் விழிக்கமாட்டேனென்று நல்ல சிவந்த வஸ்த்ரத்தாலே முலைக்கண்களை மூடிக்கொண்டு தாழ்ந்தவர்களைக் கண்டால் வெட்கப்படும் இம்முலைகளை நீங்கள் உற்றுப்பாருங்கள். இவை கோவிந்தனைத் தவிர மற்றொருவர் வீட்டு வாசலைப் பார்க்காது. ஆகையால், நான் இவ்விடத்தில் வாழ்வதைவிட்டு, என்னை யமுனை நதிக்கரையிலே சென்று சேர்த்துவிடுங்கள்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment