ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதியில் ஆடி பூரம் உற்சவம்
முதல் திருநாள்
வேணுகோபாலன் திருக்கோலத்தில்
இரண்டாம் திருநாள் --- கஜலக்ஷ்மிதிருக்கோலத்தில்
மூன்றாம் திருநாள்
பத்ரிநாராயணன் திருக்கோலத்தில்
நான்காம் பாசுரம். “எம்பெருமான் உன் மீதுள்ள விருப்பத்தாலேயே வளையைக்கொண்டான். இதற்கு நீ ஸந்தோஷப்படத்தானே வேண்டும்?” என்று கேட்க, அதற்கு இவள் “என்னைப் பிரிந்து வாழ முடியாமல் என் வளையை எடுத்துக்கொண்டார் என்றால், நான் உயிர் வாழவேண்டும் என்பதற்காக ஒரு முறை நான் இருக்கும் தெருவில் போக வேண்டாமா?” என்கிறாள்.
மச்சு அணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறை ஆகி என்னுடைய பெய்வளை மேல்
இச்சை உடையரேல் இத் தெருவே போதாரே? 4
610
மேல் தளங்களாலே அலங்கரிக்கப்பட மாடங்களையும் மதிள்களையுமுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவராய் முன்பு வாமனாவதாரம் செய்தருளினவராய் பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமாள் தாம் முன்பு நீரை ஏந்திப்பெற்ற பிச்சையிலே குறை உண்டாகி, அக்குறையைத் தீர்ப்பதற்காக என்னுடைய கையில் இருக்கும் வளைமேல் விருப்பமுடையவராகில் இத்தெரு வழியாக எழுந்தருளமாட்டாரோ?
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment