19 July 2023

ஸ்ரீவில்லிபுத்தூர் ---- ஐந்து கருட சேவை

   ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம் 

1.முதலாம் திருநாள்

 2 . இரண்டாம்  நாள் இரவு 

 3. மூன்றாம் திருநாள்  இரவு 




5. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடித்திருநாள் ப்ரம்மோத்ஸவம் ஐந்தாம்  திருநாள் இரவு  ஐந்து கருட சேவை 

ஆடிப்பூர உற்சவத்தில் 5ஆம் திருநாள் மிக முக்கியமான ஒன்று ஐந்து பெருமான்களையும் பெரியாழ்வார் மங்களா சாசனம் செய்து வரவேற்பார். அதன் பின்னர் அனைவரும் திருமஞ்சனம் கண்டருளி கருட வாகனத்தில் எழுந்தருளுவர். 


ஐந்தாம் நாள் காலை -- ஸ்ரீ பெரியாழ்வார் மங்களாசாசனம்

ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ சுந்தரராஜன் , ஸ்ரீனிவாசன், திருத்தங்கல் அப்பன், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளி ஸ்ரீ பெரியாழ்வார் திவ்ய பிரபந்த பாசுரங்களால் மங்களா சாசனம் நடைபெற்றது.
















ஐந்தாம் திருநாள் இரவு புறப்பாடு- 

பெரியாழ்வார் - சிறிய அன்னவாகனத்தில் 

ஶ்ரீ ஆண்டாள் - பெரிய அன்னவாகனத்தில் 

ஶ்ரீ ரங்கமன்னார் - கருட வாகனத்தில் 

ஶ்ரீ பெரிய பெருமாள் - கருட வாகனத்தில் 

ஶ்ரீ சுந்தரராஜப் பெருமாள் - கருட வாகனத்தில் 

ஶ்ரீ ஶ்ரீநிவாஸப் பெருமாள் - கருட வாகனத்தில் 

ஶ்ரீ திருத்தங்கால் அப்பன் - கருட வாகனத்தில்.






































நாச்சியார் திருமொழி


11.தாம் உகக்கும் 

திருவரங்கன் மேல் கொண்ட காதல் 

எட்டாம் பாசுரம். எம்பெருமானுடைய குணங்களை நினைத்து உன்னையே நீ தரித்துக்கொள்ளலாமே என்று சொல்ல இவள் “நான் எம்பெருமானை மறந்து தரிக்கலாம் என்று பார்க்கிறேன் ஆனால் என்னால் மறக்க முடியவில்லை” என்கிறாள்.


பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டு ஒரு நாள்

மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்

தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்

பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே 8

614


முன் காலத்தில் பாசி படர்ந்து கிடந்த ஸ்ரீ பூமிப்பிராட்டிக்காக அழுக்கேறின திருமேனியில் நீர் ஒழுகும்படி நிற்கும் வெட்கமில்லாத வராஹ வடிவு கொண்ட தேஜஸ்ஸையுடைய தெய்வமான திருவரங்கநாதன் முன்பு சொல்லியிருக்கும் பேச்சுக்கள் நெஞ்சில் நின்று அழிக்கப்பார்த்தாலும் அழியாமல் இருக்கின்றன.

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment