21 July 2023

ஶ்ரீனிவாசர் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்

   ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதியில் ஆடி பூர உற்சவம் 



முதலாம்  திருநாள் - வேணுகோபாலன் திருக்கோலத்தில் 

இரண்டாம் திருநாள்  --- கஜலக்ஷ்மிதிருக்கோலத்தில் 

மூன்றாம் திருநாள் --- பத்ரிநாராயணன் திருக்கோலத்தில் 

நான்காம் திருநாள்  -- பரமபதநாதன் திருக்கோலத்தில்  

ஐந்தாம் திருநாள்  -- ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் வீணை ஏந்தி பரகாலநாயகி திருக்கோலத்தில்

ஆறாம் திருநாள் -- கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் 

ஏழாம் திருநாள்  --- ஶ்ரீனிவாசர் திருக்கோலத்தில் 












எட்டாம் திருநாள்  --- வெண்ணைதாழி கிருஷ்ணர் திருக்கோலத்தில் 














9. ஒன்பதாம் திருநாள்  --
ராஜதர்பார் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  




 



நாச்சியார் திருமொழி

12.மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு  விடும்படி வேண்டுதல்


இரண்டாம் பாசுரம். “என்ன இருந்தாலும் இப்படி அவனிடம் தேடிப்போவது அவனுக்குக் கெட்ட பெயரை விளைக்கும்; அதை நீ செய்யலாமா? உன்னுடைய ஸ்த்ரீத்வத்தைப் பாதுகாக்க வேண்டாமா?” என்று கேட்க, அதற்கு பதிலளிக்கிறாள்.


நாணி இனி ஓர் கருமம் இல்லை* 
 நால் அயலாரும் அறிந்தொழிந்தார்* 
பாணியாது என்னை மருந்து செய்து*
  பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்* 

மாணி உருவாய் உலகு அளந்த*  
மாயனைக் காணில்  தலைமறியும்* 
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்*  
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்*.   2

618  


இனிமேல் வெட்கப்பட்டு ஒரு பயனுமில்லை. ஊரிலுள்ளவர்கள் என் விஷயத்தை அறிந்துகொண்டார்கள். காலம் தாழ்த்தாமல், வேண்டும் பரிஹாரங்களைச் செய்து, இப்போது பிரிந்து துன்புறும் நிலைக்கு முன்பிருந்த எம்பெருமானுடன் கூடியிருந்த நிலைக்கும் முன்பிருந்த அறிவற்ற நிலையில் என்னை ஆக்க நினைத்தீர்கள் என்றால், நீங்கள் என்னை ஸத்யமாகக் காப்பாற்ற விரும்புகிறீர்களாகில் என்னை திருவாய்ப்பாடியிலே கொண்டு சேர்த்து விடுங்கள். அங்கே வாமனரூபியாய்ச் சென்று உலகங்களை எல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால் இந்த நோய் தீரும்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......




தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் கண்களையும், மனதையும் கவர்கிறது. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் வெண்ணெய் தாழி ஏந்தி அருள் தரும் படமும், ராஜ தர்பாரில் கம்பீரமாக அமர்ந்துள்ள படமும் கண்களையும், மனதையும் விட்டு அகலவேயில்லை. ஸ்ரீ நிவாச பெருமாளையும், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரையும் ஒருங்கே ஒருவராய் கண்டு தரிசனம் பெற்றுக் கொண்டேன். ஆடிப்பூர விழா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பாசுரங்களும், அதன் விளக்கமும் படித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete