18 July 2023

ஸ்ரீ கள்ளழகர் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ...

  ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதியில் ஆடி பூர உற்சவம் 


முதலாம்  திருநாள் - வேணுகோபாலன் திருக்கோலத்தில் 

இரண்டாம் திருநாள்  --- கஜலக்ஷ்மிதிருக்கோலத்தில் 

மூன்றாம் திருநாள் --- பத்ரிநாராயணன் திருக்கோலத்தில் 

நான்காம் திருநாள்  -- பரமபதநாதன் திருக்கோலத்தில்  










ஐந்தாம் திருநாள்  -- ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் வீணை ஏந்தி பரகாலநாயகி திருக்கோலத்தில்








ஆறாம் திருநாள் -- கள்ளழகர் திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் 







நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி
11.தாம் உகக்கும் 

திருவரங்கன் மேல் கொண்ட காதல் 

ஆறாம் பாசுரம். அவன் எண்ணியபடி என் சரீரத்தைக் கொள்ளைகொண்டான் என்கிறாள்.


கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர்

செய்ப் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார்

எப்பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின்

சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே 6

612


காவிரியின் தீர்த்தமானது பயிர் நிலங்கள் வளமாக இருக்கும்படி ஓடும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமானாயும் எத்தனையேனும் தாழ்ந்தவர்களுக்கும் எளியனாய் நின்று எத்தனையேனும் உயர்ந்தவர்க்கும் கைப்படாமல் இருப்பவனும், நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் அர்த்தமாய் நிற்பவருமான பெரிய பெருமாள் முன்பே கையிலுள்ள பொருள்களை எல்லாம் கொள்ளைகொண்டபின்பு இப்போது எனது சரீரத்தையும் கொள்ளைகொண்டார்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......




தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment