16 July 2023

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்  ஸ்ரீவில்லிபுத்தூர்


1.முதலாம் திருநாள் காலை

கொடியேற்றம் (துவஜாரோஹணம்)








முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில் 
 ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்










இரண்டாம்  நாள் இரவு 

ஆண்டாள் சந்திரப் பிரபை மற்றும் 
ரெங்கமன்னார் சிம்ம வாகனத்தில் புறப்பாடு









நாச்சியார் திருமொழி

11.தாம் உகக்கும் 
திருவரங்கன் மேல் கொண்ட காதல் 

இரண்டாம் பாசுரம்.  தன்னுடைய நிலையை மறைக்க வேண்டிய தாய்மார்களிடம் தன் நிலையை வெளியிடுகிறாள்.


எழில் உடைய அம்மனைமீர்! என் அரங்கத்து இன் அமுதர்

குழல் அழகர், வாய் அழகர், கண் அழகர் கொப்பூழில்

எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய

கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே  2

608


அழகிய தாய்மார்களே! திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கிற என்னுடைய இனிய அமுதம் போன்றவராய் அழகிய திருக்குழற்கற்றையை உடையவராய், அழகிய திருவதரத்தை உடையவராய், அழகிய திருக்கண்களை உடையவராய், திருநாபியில் உண்டான தாமரைப்பூவாலே அழகு பெற்றவராய், எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர் என்னுடைய கழலாத கைவளையை அவர்தாம் கழன்று விழுகின்ற வளையாக ஆக்கினார்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗



No comments:

Post a Comment