20 July 2023

ஸ்ரீ ஆண்டாள் அரங்கர் அலங்காரத்தில்...

ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 



1.முதலாம்  திருநாள்

 2.இரண்டாம் திருநாள்




5. ஐந்தாம் திருநாள்



7.ஏழாம் திருநாள்

மூலவர் - அரங்கர் அலங்காரத்தில் 
உற்சவர் - ஆண்டாள் .











8. எட்டாம் திருநாள்
மூலவர் - செல்வநாரணன் ( மேல் கோட்டை)   திருக்கோலத்தில் 
உற்சவர் - உலகளந்த பெருமாள் திருக்கோலத்தில் 






















நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி
11.தாம் உகக்கும் 

திருவரங்கன் மேல் கொண்ட காதல் 

ஒன்பதாம் பாசுரம். எம்பெருமான் ருக்மிணிப் பிராட்டிக்கு உதவியது தன்னை உள்பட எல்லாப் பெண்களுக்கும் உதவியதாக எண்ணித் தன்னை தரித்துக்கொள்கிறாள். கண்ணன் எம்பெருமான் அர்ஜுனன் ஒருவனுக்குச் சொன்ன வார்த்தை எல்லா சரணாகதர்களுக்கும் பொதுவாக இருப்பதைப் போலே இங்கும் கண்டு கொள்ளலாம்.


கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்

திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து

அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த

பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே 9

615


கல்யாண க்ரமங்களை எல்லாம் நன்றாகச் செய்து முடித்து மணப்பெண்ணான ருக்மிணிப்பிராட்டியை பாணிக்ரஹணம் செய்துகொள்ளப் போவதாக உறுதியாக நினைத்திருந்த சிசுபாலன் ஒளி அழிந்து ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும்படியாக நேர்ந்த அச்சமயத்திலே அந்த ருக்மிணிப்பிராட்டியை பாணிக்ரஹணம் செய்தருளினவனாய் பெண்களுக்கெல்லாம் துணைவன் என்று ப்ரஸித்தனான பெருமான் உகந்து சயனித்திருக்கும் திவ்யதேசத்தின் திருநாமம் திருவரங்கமாம்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஆடிப்பூர விழா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஸ்ரீ ஆண்டாள் அரங்கன் படம் மிகவும் கவர்ந்தது. இறைவன் இறைவியை தரிசித்துக் கொண்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete