17 July 2023

2. ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ..... ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்

  ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


1.முதலாம்  திருநாள்

 2.இரண்டாம் திருநாள்

 3.மூன்றாம் திருநாள்

மூலவர் - திருவேங்கடமுடையான்
உற்சவர் - பூவராகன் திருக்கோலத்தில் 









விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே? 1

577


 

நான்காம் திருநாள்

மூலவர் - பரமஸ்வாமி

உற்சவர் - கள்ளழகர் திருக்கோலத்தில் 










நாச்சியார் திருமொழி

11.தாம் உகக்கும் 
திருவரங்கன் மேல் கொண்ட காதல் 

மூன்றாம் பாசுரம்.   உன்னிடத்தில் விருப்பம் இருந்ததால்தானே உன் கைவளையை அவர் எடுத்துக்கொண்டார். தம்முடைய சொத்திலே ஒன்று குறைந்ததால், உன்னிடத்தில் இருந்து அதைப் பெற்றுக்கொண்டு பூர்த்தியடைந்தார் என்று சொல்ல, அதற்கு “இது இல்லாமல் துன்புற்று, இதைப் பெற்ற பின் இன்பம் அடைந்தாரோ? அதெல்லாம் இல்லை, என்னைத் துன்புறுத்துவதற்காகவே, இவ்வாறு செய்தார்” என்று வெறுக்கிறாள்.


பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும்

அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம் பெருமான்

செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்

எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே? 3

609


அலை வீசுகிற கடலாலே சூழப்பட்ட இந்த பூலோகமும், பரமபதமும் அங்கு சிறிதும் குறைவுபடாதபடி ஆள்கின்ற எம் ஸ்வாமியாய், செங்கோல் செலுத்த வல்லவராய், கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கத்திலே சயனித்திருக்கும் ஸ்ரீமான் என்னுடைய கைவளையாலே தம்முடைய குறை தீர்த்துக்கொள்வாரோ?



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment