ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம்
2 . இரண்டாம் நாள் இரவு
3. மூன்றாம் திருநாள் இரவு
5. ஐந்தாம் திருநாள் இரவு --- ஐந்து கருட சேவை
6. ஆறாம் திருநாள்
9. ஒன்பதாம் திருநாள் - திரு ஆடிப்பூரத்தை முன்னிட்டு திவ்ய தம்பதிகள் திருத்தேரில் ...
10.பத்தாம் திருநாள் - ஶ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம்...
11.பதினோன்றாம் திருநாள் - ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் தீர்த்தவாரி மண்டபத்தில், அலங்காரத் திருமஞ்சனம் பின் ஆஸ்தானம் புறப்பாடு.
முத்தாளத்தி வைபவத்தில் ஶ்ரீ ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் ....
"ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாம் அனஸ்ய சரண:சரணம் ப்ரபத்யே"
- ஸ்ரீகோதா ஸ்துதி
கற்பக விருட்சத்தில் பூக்கும் மலர்போல விஷ்ணு சித்தரின் குலத்தில் அவதரித்த ஆண்டாளே, நமஸ்காரம். ஹரிசந்தன மரத்தின் கீழ் வாசம் செய்யும் ரங்கராஜனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே, நமஸ்காரம். பூமிதேவியின் அம்சத்தைக் கொண்ட தாயே, உன் மனம் போல் மாங்கல்யம் அமைந்தாற்போன்று எனக்கும் அருள் செய்வாயாக. மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட அன்னையே! என் வாழ்க்கையில் மங்களமும், வளமும் பெருக வரமருள்வாய் அம்மா.
நாச்சியார் திருமொழி
12.மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
ஆறாம் பாசுரம். கண்ணன் ரிஷிபத்னிகளிடத்தில் உணவு உண்ட இடத்திலே என்னைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.
கார்த் தண் முகிலும் கருவிளையும்*
காயா மலரும் கமலப் பூவும்*
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு*
இருடீகேசன் பக்கல் போகே என்று*
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து*
வேண்டு அடிசில் உண்ணும் போது*
ஈது என்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்*
பத்தவிலோசனத்து உய்த்திடுமின்*. 6
622
மழைக்காலத்திலுண்டான குளிர்ந்த மேகமும் கருவிளைப்பூவும் காயாம்பூவும் தாமரைப்பூவுமாகிற இவைகள் எதிரே வந்து நின்று “நீயும் ஹ்ருஷீகேசனிடத்தில் போ” என்று என்னை நிர்ப்பந்தம் செய்கின்றன. அதனால், கண்ணன் பசு மேய்ப்பதால் வேர்வைபொங்கி, பசியினால் வருந்தி, வயிறு தளர்ந்து “வேண்டிய அளவுக்கு ப்ரஸாதம் உண்ணும் காலம் இது” என்று ரிஷி பத்னிகளின் வரவை எதிர்பார்த்திருந்து நெடுங்காலம் கடாக்ஷித்துக்கொண்டிருக்குமிடமான பக்தவிலோசனம் என்ற ஸ்தானத்திலே என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்.
தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை கண்டு ரசித்த அனைவருக்கும் நன்றிகள். இவ்வழகிய காட்சிகளை பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.......
No comments:
Post a Comment