03 August 2019

ஆடிப் பூரம் - ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்



இன்று    ஆண்டாள் அவதாரம்  திருநட்சத்திரம் .....ஆடிப்பூரம்

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் 



  ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள்



ஆண்டாள் வாழித்திருநாமம்

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!

வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!

 கூடலழகர் கோவிலில் ஆண்டாள்


ஏழாம் நூற்றாண்டு,

 நள ஆண்டு,

 ஆடி மாதம்   செவ்வாய்க்கிழமை,

பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதியில்  தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்..


ஆண்டாள் வைபவங்கள்  முந்தைய பதிவுகள்  இங்கே ...


ஸ்ரீ ஆண்டாள்  மற்றும்   ஸ்ரீ ஆண்டாள் வைபவங்கள்



ஸ்ரீவில்லிபுத்தூர் 









நாச்சியார் திருமொழி
ஐந்தாம் திருமொழி - மன்னு பெரும்புகழ்
எம்பெருமானைக் கூவியழைக்கும்படி குயிலுக்கு கூறுதல்



மன்னுபெரும்புகழ்மாதவன் 
மாமணிவண்ணன் மணிமுடிமைந்தன் 
தன்னை * உகந்ததுகாரணமாக
என்சங்கிழக்கும்வழக்குண்டே? * 
புன்னைகுருக்கத்திஞாழல்செருந்திப் 
பொதும்பினில்வாழும்குயிலே! * 
பன்னிஎப்போதும்இருந்துவிரைந்து என் 
பவளவாயன்வரக்கூவாய். (2)

545


வெள்ளைவிளிசங்கு இடங்கையில்கொண்ட 
விமலன்எனக்குஉருக்காட்டான் * 
உள்ளம்புகுந்து என்னைநைவித்து
நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும் * 
கள்ளவிழ்செண்பகப்பூமலர்கோதிக் 
களித்திசைபாடும் குயிலே! * 
மெள்ளவிருந்துமிழற்றிமிழற்றாது என் 
வேங்கடவன்வரக்கூவாய்.

546






மாதலிதேர்முன்புகோல்கொள்ள 
மாயன்இராவணன் மேல் * சரமாரி 
தாய்தலைஅற்றற்றுவீழத் தொடுத்த 
தலைவன்வரவெங்கும் காணேன்! * 
போதலர்காவில்புதுமணம்நாறப் 
பொறிவண்டின்காமரம் கேட்டு * உன் 
காதலியோடுஉடன்வாழ்குயிலே! என் 
கருமாணிக்கம்வரக்கூவாய்.

547


என்புருகிஇனவேல்நெடுங்கண்கள் 
இமைபொருந்தாபலநாளும் * 
துன்பக்கடல்புக்குவைகுந்தனென்பது ஒர் 
தோணிபெறாதுஉழல்கின்றேன் * 
அன்புடையாரைப்பிரிவுறுநோயது 
நீயும் அறிதிகுயிலே! * 
பொன்புரைமேனிக்கருளக்கொடியுடைப் 
புண்ணியனைவரக்கூவாய்.

548



 காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில்

ஸ்ரீபெரும்புதூர் கோதை நாச்சியார்



மென்னடையன்னம்பரந்துவிளையாடும் 
வில்லிபுத்தூருறைவான்தன் * 
பொன்னடிகாண்பதோராசையினால் என் 
பொருகயற்கண்ணிணை துஞ்சா * 
இன்னடிசிலொடுபாலமுதூட்டி 
எடுத்தஎன்கோலக்கிளியை * 
உன்னொடுதோழமைகொள்வன்குயிலே! 
உலகளந்தான்வரக்கூவாய். (2)

549


எத்திசையும்அமரர்பணிந்தேத்தும் 
இருடீகேசன்வலிசெய்ய * 
முத்தன்னவெண்முறுவல்செய்யவாயும் 
முலையும் அழகழிந்தேன்நான் * 
கொத்தலர்காவில்மணித்தடம் கண்படை 
கொள்ளும்இளங்குயிலே! * என் 
தத்துவனை வரக்கூகிற்றியாகில் 
தலையல்லால்கைம்மாறிலேனே.

550





 திருப்பதி கோதை பிராட்டி

 திருப்பதி கோதை பிராட்டி



பொங்கியபாற்கடல்பள்ளிகொள்வானைப் 
புணர்வதோராசயினால் * என் 
கொங்கைகிளர்ந்துகுமைத்துக்குதுகலித்து  
ஆவியைஆகுலம்செய்யும் * 
அங்குயிலே! உனக்கென்னமறைந்துறைவு ?
ஆழியும்சங்கும் ஒண்தண்டும் * 
தங்கியகையவனைவரக்கூவில் நீ 
சாலத்தருமம்பெறுதி.

551


திருவல்லிக்கேணி ஸ்ரீ ஆண்டாள்

பெரிய கோயில்.

சார்ங்கம்வளையவலிக்கும்தடக்கைச் 
சதுரன்பொருத்தமுடையன் * 
நாங்கள்எம்மில்லிருந்தொட்டியகச்சங்கம் 
நானும்அவனும்அறிதும் * 
தேங்கனிமாம்பொழில்செந்தளிர்கோதும்
சிறுகுயிலே! * திருமாலை 
ஆங்குவிரைந்தொல்லைக்கூகிற்றியாகில் 
அவனைநான்செய்வனகாணே.

552


பைங்கிளிவண்ணன்சிரீதரனென்பது ஓர் 
பாசத்து அகப்பட்டிருந்தேன் * 
பொங்கொளிவண்டிரைக்கும்பொழில்வாழ்குயிலே!
குறிக்கொண்டு இது நீகேள் * 
சங்கொடுசக்கரத்தான்வரக்கூவுதல் 
பொன்வளைகொண்டுதருதல் * 
இங்குள்ளகாவினில்வாழக்கருதில் 
இரண்டத்தொன்றேல்திண்ணம்வேண்டும்.

553



ஸ்ரீரங்கம் ஆண்டாள் நாச்சியார் 


 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் - தர்பார் கண்ணன் திருக்கோலத்தில் திவ்ய சேவை.

அன்றுலகம்மளந்தானையுகந்து
அடிமைக்கணவன்வலிசெய்ய * 
தென்றலும்திங்களும்ஊடறுத்து என்னை 
நலியும்முறைமைஅறியேன் * 
என்றுஇக்காவில்இருந்திருந்து
என்னைத் ததர்த்தாதேநீயும் குயிலே * 
இன்றுநாராயணனைவரக்கூவாயேல் 
இங்குத்தைநின்றும்துரப்பன்.

554


விண்ணுறநீண்டு அடிதாவியமைந்தனை 
வேற்கண்மடந்தைவிரும்பி * 
கண்ணுறஎன்கடல்வண்ணனைக் கூவு 
கருங்குயிலே! என்றமாற்றம் * 
பண்ணுறுநான்மறையோர்புதுவைமன்னன் 
பட்டர்பிரான்கோதைசொன்ன * 
நண்ணுறுவாசகமாலைவல்லார்
நமோநாராயணாயவென்பாரே. (2)

555

 ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி கோவில் - நாச்சியார் 




உய்யக்கொண்டார் அருளிச்செய்தது

அன்னவயற்புதுவைஆண்டாள் * அரங்கற்குப் 
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! * தொல்பாவை 
பாடிஅருளவல்லபல்வளையாய்! * நாடி நீ
வேங்கடவற்குகென்னைவிதியென்றவிம்மாற்றம் *

நாம்கடவாவண்ணமேநல்கு.





 ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நாச்சியார் 

ஸ்ரீ கோதா ஸமேத ஸ்ரீ ரங்கமன்னார் ஸ்வாமிநே ஸ்ரீ வடபத்ரசாயிநேச நமஹ

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......





அன்புடன்
அனுபிரேம்

3 comments:


  1. ஸ்ரீ கோதா ஸமேத ஸ்ரீ ரங்கமன்னார் ஸ்வாமிநே ஸ்ரீ வடபத்ரசாயிநேச நமஹ

    ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......

    அருமையான ஆடிபூர பதிவு.

    படங்கள் தேர்வு அருமை.
    தர்பார் கண்ணன் திவ்ய சேவை மிக அழகு.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அருமையான ஆண்டாள் படங்கள். ஒவ்வொரு ஊரின் கோதை நாச்சியாரின் தரிசனங்கள் ஒருசேர கிடைக்கப் பெற்றேன். பார்க்க பரவசமாக உள்ளது. அருமையாக தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. ஆடிப் பூரம் கொண்டாட்டங்கள் சிறப்பு. உங்கள் மூலம் பல ஊர்களில் நடந்த கோதை நாச்சியார் விழா பார்க்க முடிந்தது. நன்றி.

    ReplyDelete