26 August 2019

சரவணபெலகுலா -கோமதீஸ்வரர்



வாழ்க வளமுடன்


ஒரே கல்லில் செதுக்கப்பட்ட57 அடி உயரமும் 60 டன் எடையும் கொண்ட பாகுபலியின் சிலை...






பாகுபலியின் மற்றொரு பெயர்தான் கோமதீஸ்வரர்.

போதான் பூரை ஆண்டு வந்த சமணர்களின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபா மன்னனுக்கு 100 மகன்கள், அதில் பரதன் எனும் தலைமனுக்கு தக்கசமயத்தில் முடிசூட்டு விழா நடக்க, இரண்டாவது மகன் பாகுபலி வெகுண்டெழுகிறான்.

 தனக்கு ராஜ்யத்தை ஆளும் தகுதி இல்லையா? என கேட்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான்.

ஆனால் மறுநாளே போரில் தோற்ற தமையனின் வாடிய முகம் கண்டு துடிக்கிறது பாகுபலியின் மனம்.

 துடித்த மனம் துறவறம் மேற்கொள்ள...

பாகுபலி தெய்வமாகிறார்.

பிற்காலத்தில் விந்தியகிரி சாவண்டராயாவின் விருப்பத்தால் விந்தியகிரி மலையில் 57 அடி உயரம் கொண்ட சிலையாகிறார்.





சுருண்ட தலைமுடி கற்றைகள், அகன்ற கண்களில் ஒளி, உதடுகளில் ஓரத்தில் சுழியிடும் புன்சிரிப்பு, நீண்ட கைகள், தாமரை பூ போன்ற பாதங்கள், அசைவற்ற நிலையில் தவத்தில் ஈடுபட்டிருப்பதால் சுற்றி வளைந்திருக்கும் புற்றுகள், அதிலிருந்து தலை காட்டும் நாகம், காட்டுக்கொடிகள் சுற்றிப் படர்ந்து ஒட்டி உறவாடுகின்றன.


 சிலையின் காலடியில் ,  சிறிய அளவிலான  பாகுபலி சிலை உள்ளது . வணங்க வருவோர் அச்சிலைக்கு  அபிஷேகம் செய்கின்றனர். மேலும் அங்கு அமர்ந்து தியானமும் செய்கின்றனர்.











பாகுபலி சிலையின் வலப்புறம் உள்ள  பாதையில்  சென்றால் அனைத்து  தீர்த்தங்கரர்களின் சிலைகளையும் காணலாம் .





கோவிலின் வெளிப்புறம் ...


















அமைதியும் , பக்தியும் கமழும் இடம் ...மிக நிறைவான தரிசனம் ...

இன்னும் பக்கத்து மலைகளில் எல்லாம் இது போல சில கோவில்கள் இருந்தன. ஆனால் எங்களுக்கு நேரம் இல்லாததால் இங்கிருந்து நேராக பெங்களூர் புறப்பட்டு விட்டோம் ...






முந்தைய பதிவுகள் ...


























இருநாள் பயணம் தான் முடிந்த அளவு பல முக்கிய கோவில்களை தரிசித்துவிட்டு வீடு திரும்பியாகிவிட்டது . பல படங்களுடன் அந்த இடங்கள்  அனைத்தையும் இங்கு பதிவிட்டாச்சு ...பார்த்து ரசித்த அனைவருக்கும் நன்றிகள் பல ...

இங்கு பதிவிட அடுத்த குளு குளு  பயணக் காட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன ...

விரைவில் அவை ..

அன்புடன்
அனுபிரேம்




7 comments:

  1. மலையும் குளமும் பாகுபலியின் சிலையும் மிக அழகு!

    ReplyDelete
  2. சரவணபெலகுலாவை நேரில் பார்த்த உணர்வை தந்து விட்டது படங்கள், செய்திகள். காணொளியும் அருமை.

    ReplyDelete
  3. சிரவணபெலகோலாவை முருகன் கட்சில சேர்த்துட்டீங்களே... சரவணபெலகோலான்னு போட்டு

    ReplyDelete
  4. படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. நேர்ல பார்க்கிறமாதிரியே. பாராட்டுகள்

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். விபரமான உணர்ச்சி பூர்வமான இளவரசர்களின் கதை. நாங்களும் உங்களுடன் வந்து கோமதீஸ்வரரை தரிசித்த அமைதியும், திருப்தியும் கிடைத்தது. காணொளியும் கண்டேன். காணொளியும் பதிவுக்கு மிகவும் அழகு சேர்த்தது. அடுத்தப் பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. படங்கள் அருமை. நிறைய படங்கள் சேர்த்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. அழகான படங்கள். கர்நாடகம் பக்கம் சென்றிருந்தாலும் பார்த்த இடங்கள் குறைவு. பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு. நேரம் எடுத்து அங்கேயும் பயணம் செய்ய வேண்டும்.

    ReplyDelete