11 August 2019

பேபி கார்ன் மஞ்சூரியன்


 வாழ்க வளமுடன்










தேவையானவை 

பேபி கார்ன் - 10

பொரிக்க 

மைதா மாவு- 2 மேசைக் கரண்டி
சோள மாவு - 2 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு


மஞ்சூரியன் க்கு 

வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் - 2

தக்காளி  சாஸ்   - 2 மேசைக் கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைக் கரண்டி

மிளகாய் தூள்- 2 மேசைக் கரண்டி
மசாலா தூள்  - 2 மேசைக் கரண்டி
சோள மாவு     - 1 மேசைக் கரண்டி

சர்க்கரை    - 1 மேசைக் கரண்டி
உப்பு
எண்ணெய்



முதலில் பேபி கார்னை நறுக்கி   குக்கரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.




மைதா, சோள மாவு, மஞ்சள்  தூள், உப்பு  சேர்த்த கலவையில்  வேக வைத்துள்ள பேபி கார்ன் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கலக்க வேண்டும் பின் அதனை எண்ணையில் பொரிக்க வேண்டும்.





வாணலியில்  சிறுது எண்ணெய்  சேர்த்து, அதில்   நறுக்கிய வெங்காயம்,  பச்சை மிளகாய் மற்றும் தக்காளி  சேர்த்து நன்கு வதக்க வேண்டும் .

 பின்  அதில் தக்காளி  சாஸ், மி. தூள, மசாலா தூள், எலுமிச்சை சாறு, சர்க்கரை  மற்றும் உப்பு   சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

  சோளமாவை சிறுது தண்ணீரில்  கரைத்து,  இதில் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பேபி கார்ன் மஞ்சூரியன் ரெடி!!!











 இஞ்சி பூண்டு பேஸ்ட் , வெங்காய தாள் , நறுக்கிய  இஞ்சி, பூண்டு  மற்றும் குடை மிளகாய் என தேவைக்கேற்ப இவற்றையும் சேர்க்கலாம் ...

மழைக்காலத்தில்  சுவைக்க  தகுந்த இனிய உணவு ...

அன்புடன்
அனுபிரேம்




7 comments:

  1. ஆஹா படமே ஆசையை தூண்டுகிறதே...

    ReplyDelete
  2. மஞ்சூரியன் பொதுவாக பிடிப்பதில்லை. அதனால் வீட்டில் செய்வதில்லை. உணவகங்களில் ருசித்தது உண்டு.

    ReplyDelete
  3. மஞ்சூரியன் நன்றாக இருக்கிறது.
    குழந்தைகளுக்கு பிடித்த உணவு.

    ReplyDelete
  4. ​முத்துகளை மட்டும் உதிர்க்காமல் அப்படியே வெட்டி சமைத்துவிடுவதா? அந்த சக்கைபோன்ற பகுதியையும் சாப்பிடலாமா? பார்க்க அழகாக சுவை நரம்புகளைத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. முத்துக்கள் போல இதில் இருக்காது ..மிக சிறியதாக தான் இருக்கும் ..உரிக்கும் அளவெல்லாம் இருக்காது ..மேலும் நடு தண்டும் மிக மென்மையாக வே இருக்கும் அதனால் அதையும் சேர்த்தே சமைக்கலாம் ..

      Delete
  5. ரொம்ப நல்லா வந்திருக்கு அனு. எங்க வீட்டுல நல்லா போணியாகும். இதே போல பனீர் மஞ்சூரியனும் செய்வதுண்டு...காளிஃப்ளவர் மஞ்சூரியனும்

    சூப்பரா செஞ்சுருக்கீங்க

    கீதா

    ReplyDelete
  6. நான் செர்வ் பண்ணும் போது அந்த சாசை போட்டு பிரட்டி கொடுப்பது..அப்ப பொரிச்சது க்ரிஸ்பா நல்லாருக்கும். இதுல பூண்டையும் கொஞ்சம் பொடிப் பொடியா சேர்ப்பதுண்டெ அனு..பச்சையா கொஞ்சம் வெங்காயம், பூண்டு பொடி பொடியாக அரிந்த பச்சை மிளகாய் எலாம் கடைசில செர்வ் பண்ணும் போது தூவி கலந்து...வெங்காயத் தாள் கூட போடலாம் செமையா இருக்கும்..

    கீதா

    ReplyDelete