04 August 2019

ஸ்ரீ கோதை ரெங்கமன்னார் சயன சேவை.


ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூரத்து உற்சவம் --ஸ்ரீ கோதை ரெங்கமன்னார் சயன சேவை.

























“கண்ணா! வேண்டுவன கேள் என்று சொன்னாய். வேண்டுவதற்கு ஆறு பொருட்கள் கேட்கிறேன். தருவாயா? முதலில் ஒரு சங்கு வேண்டும்.”

“சங்கா? விட்டால் என்னுடைய கைச்சங்கையே கேட்பீர்களோ?”

“மதுசூதனா! உன்னுடைய கைச்சங்காகிய பாஞ்சசன்னியம் ஒலிக்கும் போது உலகமே நடுங்கும். படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே என்று என் தந்தை உனக்குப் பல்லாண்டு பாடியபடி ஒலிக்கின்ற சங்கங்கள் வேண்டும். பாஞ்சசன்னியத்தையே கொடுத்தாலும் எங்களுக்கு உவப்பே!”

”சரி. தருகிறேன். வேறென்ன வேண்டும்.”

“இரண்டாவதாக பறை ஒன்று வேண்டும். அதுவும் ஏறுகோட்பறை போன்ற பெரிய கொட்டுப்பறை வேண்டும்.”

“தந்தேன். மூன்றாவதாக?”

“பல்லாண்டு பாடுகின்ற அடியவர்கள் வேண்டும். உன்னையே எண்ணிப் பாடும் நல்ல சுற்றம் வேண்டும்.”

“அடியவர்கள்தானே. நிறைய இருக்கிறார்கள். நான் சொல்லி அனுப்பிவைக்க வேண்டாம். நீ கூப்பிட்டாலே வந்துவிடுவார்கள். அவர்கள் என்னோடு இருப்பதை விட என் பெயரைச் சொல்கின்றவர்களோடு இருக்கும் நேரமே அதிகம். ஆகட்டும். அடுத்ததைச் சொல்.”

”அணையாச் சுடர் விளக்குகளும், உன்னுடைய கொடியும், தலைக்கு மேல் பந்தலும் வேண்டும்.”

“சங்கு, கொட்டு, பாட்டு, விளக்கு, கொடி, பந்தல்… இவை போதுமா? இந்த ஆறையும் கேட்பதற்காகவா என்னை நாடி வந்தாய்?”

என்ன வேண்டும் என்று இறைவன் நம்மைக் கேட்டால் என்ன கேட்போம்? ...... நாமெல்லாம் எவ்வளவு சுயநலமிகள் என்றும் இந்த வாழ்க்கையின் மீது எவ்வளவு ஆசை கொண்டவர்கள் என்பதும் விளங்கும்.


ஆண்டவனே ”என்ன வேண்டும்?” என்று கேட்கும் போது “ஆண்டவனே! நீயே வேண்டும்!” என்று அவள் கேட்டிருக்கலாம்.

 ஆனால் கேட்கவில்லை.

 ஏன்? கேட்காமலே கொடுப்பவனிடம் கேட்டுப் பெறுவதா சிறப்பு? அப்படியானால் என்ன கேட்பது? அவனையே நினைத்துப் போற்றிப் பாடுவதற்கு என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் கேட்டாள் கோதை.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !




ஆஹா அற்புத காட்சிகள் ....முகநூலில் பதிவிட்ட பக்தருக்கு நன்றிகள் பல ...


பார்க்க பார்க்க மனதை அள்ளும் கோதை நாயகி ...



நாச்சியார் திருமொழி
ஏழாம் திருமொழி 


கருப்பூரம்நாறுமோ? கமலப்பூநாறுமோ? * 
திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? * 
மருப்பொசித்தமாதவன்தன் வாய்ச்சுவையும்நாற்றமும் * 
விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே. (2)

567


கடலில்பிறந்து கருதாது * பஞ்சசனன் 
உடலில்வளர்ந்துபோய் ஊழியான்கைத்தலத் 
திடரில் * குடியேறித் தீயவசுரர் * 
நடலைப்படமுழங்கும் தோற்றத்தாய்நற்சங்கே.

568


அன்புடன்
அனுபிரேம் 

3 comments:

  1. படங்கள் எல்லாம் அழகு.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    சயன சேவை அருமை.

    ReplyDelete
  2. படம் எடுத்தவர் பார்த்துப் பார்த்து ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார். படங்களை இங்கே காணத் தந்த உங்களுக்கும் படம் எடுத்துப் பகிர்ந்து கொண்டவருக்கும் நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். கோதை கோவிந்தனிடம் வேண்டிப் பெற்றது அருமை. அடியவர்களோடு சேர்ந்து நாதம் இசைத்து பாடும் போது அதைவிட பேரின்பம் வேறு என்ன வேண்டும்.? வேண்டியதைதான் விருப்பமாய் பெற்றிருக்கிறாள் கோதை. படங்களை கண்ணுக்கு நிறைவாய் தந்த முகநூல் பக்தருக்கும், பதிவிட்ட தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete