12 August 2019

உலக யானைகள் தினம்

இன்று உலக யானைகள் நாள் ( World Elephant Day )

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ல்  இத்தினம் கொண்டாடப்படுகிறது.





இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் ,யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.

முதன் முதலில் இந்த தினம் 2012 ஆகஸ்ட் 12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.

 ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆகஸ்ட்12ல் வெளியானது.

அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.








சுற்றுச்சூழலின் அடையாளம் யானை

காட்டில், யானைகள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புகிறது. இதன்மூலம் மரங்கள், செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகிறது.

காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் யானை வழிவகுக்கிறது. யானைகள் பல கி.மீ. தூரம் காட்டில் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் காட்டில் உருவாகின்றன.






 தும்பிக்கையே யானையின் பலம். தும்பிக்கை மூலமே யானை சுவாசிக்கிறது. தண்ணீரையும், உணவையும் அதன் மூலம்தான் சாப்பிடுகிறது. தும்பிக்கையாலேயே அதிக எடை கொண்ட பொருளை யானையால் எளிதாகத் தூக்க முடியும்.

யானை தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கும்.

யானை மண்ணை கிளறி கண்டுபிடிக்கும் ஊற்று தண்ணீரால் மற்ற விலங்குகளும் பயன் பெறுகின்றன.

தந்தம் தான் யானையின் முக்கிய ஆயுதம். தந்தத்தை யானையின் கொம்பு என நடைமுறையில் அழைக்கின்றனர்.

ஆனால், யானையின் மேல்வரிசை பற்களின் நீட்சிதான் தந்தம்.

ஒரு டன் எடையுள்ள பொருளையும், தந்தத்தால் தூக்க முடியும். அதனால், சண்டையின் போது யானை தந்தத்தைத் தான் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும்.

தந்தம் இல்லாத ஆண் யானை, மக்னா யானை என அழைக்கப்படுகிறது. தும்பிக்கை மூலம் யானை வாசனை உணர்வுகளை அறிந்து கொள்கிறது. 1.5 கி.மீக்கு அப்பால் உள்ள மனிதனின் நடமாட்டத்தை கூட யானையால் அறிந்துகொள்ள முடியும்.







 யானைக்கு கேட்கும் சக்தி அதிகம். ஆனால், கண் பார்வை குறைவு. மூளையின் அளவு பெரியது என்பதால் யானைக்கு நினைவாற்றல் அதிகம் உண்டு. இந்த நினைவாற்றல் மூலமே யானைகள், பரந்த காட்டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன.


ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 100, 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் வரை குடிக்கிறது.





யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு மற்றும் தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.


இதை தடுக்கப்பட வேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கம்.


பொள்ளாச்சி topslip ல் உள்ள யானை முகாமில் எடுத்த படங்கள் இவை  ..

இந்த முகாமில் யானை பராமரிப்பைக் கண்டு, அவர்களுடன் பேசும் போது ...ஒரு குழந்தையைப் போலவே அவர்கள் யானையையும் காணுகிறார்கள் எனப் புரிந்தது .....

உலக யானைகள் தினத்தின் மூலம் இன்னும் யானைகளைப் பேணும் முயற்சிகளை எடுப்போம்....

அன்புடன்
அனுபிரேம்






5 comments:

  1. அழகான படங்கள்.... யானைகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    உலக யானைகள் தினமென்பதை இன்று உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். அழகான படங்கள். யானையைப் பற்றிய நிறைய விபரமான செய்திகளுக்கும் மிக்க நன்றி. பதிவு மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோ
    இன்றைய தினம் யானைகள் தினம் மட்டுமல்ல...
    சர்வதேச இளைஞர் தினமும்கூட...

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. பார்க்கப் பார்க்க அலுக்காத விலங்கு யானை. தகவல்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  5. அனு படங்கள் எல்லாம் மிக மிக அழகு. தகவல்கள் எல்லாம் செம...யானைகள் தான் என்ன அழகு. அவங்களுக்கு வாழ்த்து சொல்லிக்குவோம்...

    கீதா

    ReplyDelete