ஸ்ரீ அருள்மிகு ஊராளி அப்பன் உடனுறை ஸ்ரீ பூரணி, பொற்கலை திருக்கோவில், ஆசனூர் , உளுந்தூர்பேட்டை.
உளுந்தூர் பேட்டை அருகே உள்ள அய்யனார் கோவில் எங்கள் குலதெய்வ கோவில் . காட்டிற்குள்ளே அமைத்துள்ள இடம், இவ்விடத்தை ஆயிரம் காணி தோப்பு என்றும் அழைக்கிறார்கள்.
போன வருடம் ஆகஸ்ட் மாதம் சென்ற பொழுது எடுத்த படங்கள் ....மிக தாமதமாக ஒரு வருடம் கழித்து பதிவிடுகிறேன் .
நாங்கள் சென்றது ஒரு வேனில், மெயின்ரோட்டில் இருந்து இந்த காட்டிற்குள் இறக்கவே அந்த டிரைவர்க்கு பயம் , எங்கு வண்டி சிக்கிவிடுமோ என்று , இல்லை பொதுவாக செல்லும் வழி தான் பயபடாமல் வரவும் என பல தைரியத்திற்கு பின்னே அவர் வண்டியை எடுத்தார் .
இங்கு வெயில் காலத்தில் அனலாக இருக்கும் நாங்கள் எப்பொழுதும் மே மாதத்தில் செல்லுவோம் . பல பேர் சேர்ந்து தான் செல்லுவதும் , இந்த முறை ஆகஸ்ட் மாதம் என்பதால் மழை பெய்து மிக குளிர்ச்சியாக இருந்தது .
பொங்கல் வைக்க விறகு ஏதும் எடுத்து செல்லவில்லை அங்கு தான் இருக்குமே என்று சென்றுவிட்டோம், ஆனால் மழையில் எல்லாம் நனைந்து , அடுப்பை ஏற்றி பொங்கல் வைப்பதற்குள் ஆஹா அன்று ஆகிவிட்டது .
கோவிலின் கிணறு , சமுதாயக் கூடம் எல்லாமே அருகில் உள்ளது , அசைவ பூஜை செய்வோர் அங்கு சமைக்கலாம் .
திருப்பணிகள் பல நடந்து கோவில் மிக பொலிவுடன் அழகாக காட்சியளிக்கிறது .
போன முறை நாங்கள் சென்றபோது எடுத்த படங்கள் இங்கு அப்படங்களை காணும் போது தான் எத்தகைய மாற்றம் இங்கு என புரிகிறது .
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்

கோவில் அழகு. அழகான மாறுதல் அடைந்து இருக்கிறது.
ReplyDeleteஎங்களுக்கும் அய்யனார் தான் குலதெய்வம்(சாஸ்தா)
எனக்கு கிராமத்து குலதெய்வகோவில் என்றால் ரெம்ப பிடிக்கும். அழகழகான சிலைகள் இருக்கும். எங்க ஊரில் இப்படி இருப்பது கொஞ்சம் குறைவு. எங்கள் எல்லாமே கிராமம்தான்.
ReplyDeleteஇதில் என்ன வித்தியாசமா பொலிஸ்காரர் மாதிரி இருக்கார். அழகான படங்கள். 2,3 வது படங்கள் பார்க்க கொஞ்சம் பயமா இருக்கு.
அழகான கிராமிய கோயில்...
ReplyDeleteகுல தெய்வங்கள் வீற்றிருக்கும் பாரம்பர்ய வழிபாட்டுத்தலங்கள் பலவற்றையும் கட்டிக் காக்க வேண்டியது நமது பொறுப்பாகும்...
ReplyDeleteஅழகான படங்கள்... வாழ்க நலம்...
குலதெய்வம் அழகிய கிராமத்து சூழல் படங்கள்.
ReplyDeleteகுதிரை,ஐயனார்,கறுப்பு சாமி எல்லாம் எங்கள் ஊரில் கண்டதில்லை. முதலாவது இந்திய பயணத்தில் கண்டபோது ஆச்சரியப்பட்டிருக்கிறேன்..