06 August 2019

கல்யாணி தீர்த்தம் ,பேலூர் சென்னக்கேசவா திருக்கோயில்



வாழ்க வளமுடன் 









ஹொய்சாள ஆட்சியில் 958 இடங்களில் ஏறத்தாழ 1500 ஆலயங்கள் உண்டாக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தில் 118 கல்வெட்டுச் செய்திகள் காணப்படுகின்றன. அவை 1117 முதல் 18ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது சேர்க்கப்பட்டவையாகும்.

முதலில் எழுதப்பட்ட கல்வெட்டு செய்தியில் மன்னன்  தனது வாளின் மூலம் வென்ற பெரும் செல்வத்தைக் கொண்டே இந்த ஆலயத்தை எழுப்பியதாகக் குறிப்பிட்டிருக்கிறான். சாளுக்கியரிடமிருந்து தனக்குக் கிட்டிய விடுதலையைப் பறைசாற்றும் விதமாகவே இதை எழுப்பியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவேதான் தொடக்கத்தில் இந்த ஆலயம் விஜய நாராயண ஆலயம் என்று அழைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் இந்த ஆலயம் தவிர கேசவருக்கும் லட்சுமிநாராயணருக்கும் வேறு இரு ஆலயங்களையும் எழுப்பினான்.

இந்த ஆலயத்தை உருவாக்கிய சிற்பிகளும், கட்டட, கைவினைக் கலைஞர்களும் சாளுக்கிய ஆட்சியிலிருந்து பெறப்பட்டவர்கள் தான். இதுதான் ஹொய்சாளர் ஆட்சியில் தோன்றிய முதல் ஆலயமும் கூட.

இதனால் பின்னாட்களில் இடம்பெற்ற நெரிசலான, நுணுக்கம் மிகுந்த சிற்ப அணுகுமுறை இந்த ஆலயத்தில் இருக்கவில்லை. தேவையான இடங்களில் கல்பரப்பு வெறுமையாக விடப்பட்டது.

கிழக்குமுகம் பார்க்கும் மைய நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் ஹொய்சாளர் கட்டியது அல்ல. அது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி உள்ள உயர்ந்த மதிற்சுவரும் கூட அப்போதுதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.











சிற்பிகள் தாங்கள் உருவாக்கிய சிலைகளில் தங்கள் பெயர், குடும்ப விவரம், தாங்கள் சார்ந்த குழு போன்ற செய்திகளை எழுதி வைத்துள்ளனர் என்பது சிறப்பான செய்தியாகும்.

ருவரி மல்லிதம்மா என்னும் சிற்பி உருவாக்கியதாக நாற்பது சிலைகளுக்கும் மேல் காணப்படுகின்றன.

ஐந்து மதனிகா சிலைகளுக்கு உரிய சிற்பி என்று சவனாவின் பெயரும், தாசோஜா என்னும் சிற்பி உருவாக்கியவை நான்கு என்றும்,

மல்லியண்ணா, நாகோஜா என்னும் இரு சிற்பிகள் பறவை, விலங்குகளை உருவாக்கியதில் முதன்மையானவர் என்றும் செய்திகள் கூறுகின்றன.









சென்ன கேசவாவையும் ...மற்ற அருமையான சிற்பங்களையும் கண்டு ரசித்த உடன் எங்கள் பயணம் மீண்டும் தொடங்கியது .

நாங்கள் அங்கு சென்றது ஒரு திருமண வரவேற்பிற்கு அதனால் இங்கிருந்து நேராக அந்த நிகழ்ச்சிக்கு சென்றோம் .





அன்று இரவு அங்கு தங்கிவிட்டு ...மீண்டும் விடியலில் எங்கள் பயணம் தொடங்கியது .. இப்பொழுது  நாங்கள் காண சென்றது மிக பெரியவரை ...யார் அந்த பெரியவர்  ...

அடுத்த பதிவில்  ...








முந்தைய பதிவுகள் ...





















தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்



4 comments:

  1. சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது. குளம் அழகு.

    அடுத்த பதிவுக்கான காத்திருப்பில் நானும்.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான தகவல்கள்.

    குளத்தின் அழகு கண்களிலேயே நிற்கிறது.

    ReplyDelete
  3. சிற்பங்கள் அழகு, அனுமன் சிலை, காளிங்கந்ர்த்தன கண்ணன், திருக்குளம் எல்லாம் அழகு.

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு. பேலூர் கோவிலுக்குச் சென்றிருக்கிறோம். ஆனால் இந்த அழகியக் குளத்தைப் பார்க்கத் தவறிவிட்டோம் என நினைக்கிறேன்.

    ReplyDelete