28 June 2019

மகா விஷ்ணுவின் 16 பெயர்கள்

வாழ்க வளமுடன் 




இன்று  ஹோய்சாலேஸ்வரர் கோவிலின் மேலும் சில காட்சிகள் ...




திருமால் புகழ்

கண்ணன் கீதையில் இவ்வாறு சொல்கிறார் :

"எவர்கள் எவ்வாறு என்னை நாடுகிறார்களோ அவர்களை அவ்வாறே அனுக்கிரகிக்கிறேன்" என்று

யார் என்னை எந்தப் பெயரால் அழைத்தாலும், அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொண்டு ஆசிர்வதிப்பேன் என்கிறார் பகவான்.

மகா விஷ்ணுவுக்கு 16 பெயர்கள் கூறப்படுகின்றன .

அந்த 16 பெயர்களில் எப்பொழுதும் மக்களை ஆட்கொள்ள அவர் தயங்குவதில்லை. அப்பெயர்கள் பின்வருமாறு.

1. மருந்தை உட்கொள்ளும் பொழுது , அவனை நினைத்தால் - விஷ்ணு,

2. உணவை உட்கொள்ளும் பொழுது அவனை நினைத்தால் - ஜனார்த்தனன் ,

3. படுக்கச் செல்லும் பொழுது அவனை நினைத்தால் - பத்மநாபன்,

4. திருமணத்தின் பொழுது அவனை நினைத்தால் - பிரஜாபதி,

5. யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் - சத்ரதாரி,

6. வெளியில் கிளம்பும் பொழுது அவனை நினைத்தால் - திரிவிக்ரமன்,

7. நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது - ஸ்ரீ தரன் ,

8. கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் - கோவிந்தன்,

9. கஷ்டம் வரும் போது , அவனை அழைத்தால் - மதுசூதனன்,

10. காடுகளில் செல்லும் பொழுது - நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன் ,

11.நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ மகாவிஷ்ணு ,

12.தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே - ஸ்ரீ வராகன்,

13.ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே -ஸ்ரீ ராமன்,

14. நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே - வாமனன்,

 15.இறக்கும் தருவாயில் அவன் நமக்கு - நாராயணன்,

16. எல்லாச் சமயங்களிலும் பக்தனுக்கு அருள ஓடோடி வருவதில் அவன் - மாதவன்.


இதுபோல யுகங்கள் தோறும் பகவானுக்கு பல நாமங்கள் உண்டு. அவைகள் பின்வருமாறு :

துவாபர யுகம் - ஸ்ரீ தேவராஜன்

திரேதா யுகம் - ஸ்ரீ ரங்கநாதன்

கிருதயுகம் - ஸ்ரீ ஜெகந்நாதன்

கலியுகம் - ஸ்ரீ வெங்கடேசன்



கலியுகம் பாவங்கள் நிறைந்த யுகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. பெருகி வரும் துன்பங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்களை போர்கால அடிப்படையில் ஆட்கொள்ளத்தான் ஸ்ரீநிவாசனாக, அந்த நாராயணன் நின்றகோலத்தில் உள்ளார்.

நின்ற கோலத்தில் இருந்தால் தான், பக்தன் அழைக்கும் பொழுது ஓடிச் சென்று உதவ முடியும்.

 மற்ற மூன்று யுகங்களில், கலியுகம் அளவுக்கு பாவங்கள் இல்லை, அதனால் தான் அமர்ந்த கோலத்தில் தேவராஜனாகவும், படுத்த ( சயன) கோலத்தில் ரங்கநாதனாகவும் இருந்து உள்ளார் பகவான் என்பது தாத்பர்யம்.

ஓம் நமோ நாரயணா

(இணையத்திலிருந்து )








ஹோய்சாலேஸ்வரர் கோவிலின் பின்புற தோற்றம் ..











ஹோய்சாலேஸ்வரர் கோவிலின் முன்புற அழகு ..










blue boys




இங்கு ஒரு அருங்காட்சியகமும் இருந்தது , 5 ரூபாய் நுழைவுக் கட்டணம் ...கோவிலின் உள்ளே இருக்கும் சிலைகளை இங்கு தனியாக வைத்து இருந்தார்கள் , ஒன்று இரண்டு தகவல்களுடன். இன்னும் சற்று தகவல்களுடன் சிறப்பாக அமைத்து இருக்கலாம் என்னும் எண்ணம் தோன்றுவதை தடுக்க முடியவில்லை.

தொடர்ந்து 5 பதிவுகளாக ஹோய்சாலேஸ்வரர் கோவில் ( ஹளபேடு ) சிற்பங்களை கண்டோம். ஓரளவு படங்களும் , தகவல்களும் என தர முயன்றேன் .. ..

அடுத்த பதிவில் அடுத்த இடம் காண செல்லலாம் ...


முந்தைய பதிவுகள் ...








தொடரும் ..


அன்புடன்
அனுபிரேம் 




8 comments:

  1. மிக அருமையான புகைப்படங்கள். அழகான கோவில்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் ..

      Delete
  2. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. ஹோய்சாலேஷ்வரர் கோவில் ஒரு கலை பொக்கிஷம். அங்குள்ள சுவர் சிற்பங்களின் அழகு மனதை கவர்கிறது.
    மஹாவிஷ்ணுவின் பதினாறு நாமங்களையும், அதை எவ்வெப்போது உச்சரிக்க நலம் பயக்கும் என்ற விபரங்களையும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றிகள். புளு பாய்ஸ் படம் அழகாக உள்ளது. தங்கள் குழந்தைகளா? தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.

    ஹளபேடு பதிவுகள் ஸ்வாரஷ்யமாக இருந்தது. இனி அடுத்ததாக சென்ற விடயங்களை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலா க்கா ...

      ஹோய்சாலேஷ்வரர் கோவில் சிற்பங்களை ரசித்தமைக்கு மிக மகிழ்ச்சி ..

      அந்த blue boys எங்க பசங்க தான் ..பெரியவர் கீர்த்தி எட்டாவதும், சின்னவர் பிரசன்னா ஐந்தாவது ம் படிகிறார்கள் ...

      Delete
  3. தொடர்ந்து பார்த்து, ரசித்து வருகிறேன். உடன் அடுத்த இடம் காண காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து நீங்கள் ரசிக்கும் சமண கோவிலை தான் காண போகிறோம் ஐயா..

      Delete
  4. அழகான படங்கள். தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  5. சொன்னதுலாம் நல்லா இருக்கு. ஆனால் இடுகையில் ஒரு மகாவிஷ்ணுவின் படம் கூட இல்லையே

    ReplyDelete