தொடர்ந்து வாசிப்பவர்கள்

12 June 2019

முப்பூஜை விழா - அய்யனார் திருக்கோவில், மேலூர், ஸ்ரீரெங்கம்

 அருள்மிகு  ஸ்ரீ கரைமேல் அழகர் காடைப்பிள்ளை அய்யனார் திருக்கோவிலில் நடைபெற்ற முப்பூஜை விழா ...


முந்தைய பதிவில் அய்யனார் கோவில் கோபுர தரிசனம் கண்டோம் ..இன்று அங்கு நடைபெற்ற முப்பூஜை விழா படங்கள் ...

 ஸ்ரீ அய்யனார் கோயில்  முப்பூஜை விழா  மூன்று நாட்கள் நடைபெறும் ..
முதல் நாள் காலை கோவில் வீட்டிலிருந்து (கோவில் வீடு ஸ்ரீரெங்கத்தில் உள்ளது)    அய்யனார் கோவிலுக்கு பொங்கல் பானை செல்லும் போது ...


முதல் நாள் மாலை கருமேகங்கள் சூழ அய்யனார் கோவில் ...
சுவாமிகளின் ஆயுதங்களைக் காவேரியில் சுத்தம் செய்து அலங்கரித்து  பூஜை ...


அன்று இரவு சுவாமிக்கு பொங்கிய பொங்கல் ....

இரண்டாம் நாள் முடி இறக்கி , காது குத்தும் நிகழ்வு அனைத்தும் நடைபெறும் ..
பின் மாலை மீண்டும் நான்கு பொங்கல் பானைகளும்  கோவில் வீடு  சென்றது...


மூன்றாம் நாள் மாலை, அம்மா மண்டபத்தில் வீட்டுத் தெய்வம் அன்னபூரணி அம்மனின் ஓலைப்பெட்டிக்கு அலங்காரம் செய்து...  மீண்டும் கோவில் வீடு செல்லும் போது ...
 

 


முப்பூஜை முடிந்து கோவில் வீட்டில்  ஓலைப்பெட்டி ..அய்யனார் அருளில் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்றது... முதல் நாள் பூஜை மட்டுமே நேரில்   காணும் வாய்ப்பு கிடைத்தது ...
மற்ற இரு நாளும்  பூஜைப் படங்களை கண்டு ரசித்தேன் ...

நாங்கள் கண்டு மகிழ்ந்த பூஜை காட்சிகளை இங்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி...

மீண்டும் இப்பூஜையைக் காண  2026ம் ஆண்டு வரை  காத்திருக்க வேண்டும் ....

அதுவரை  அய்யனாரின் துணையோடு 
அனைத்து செயல்களும் சீரும் , சிறப்புமாக நடைபெற 

அய்யனார் துணை இருக்கட்டும் ...

அய்யனார் திருவடிகளே சரணம் ..
அன்புடன்
அனுபிரேம்


9 comments:

 1. சிறப்பான படங்கள்.

  ஏழு வருடங்களுக்கு ஒரு முறை தான் நடக்குமா இந்த விழா? மேலூர் பக்கம் சென்றிருந்தாலும் இக்கோவில் சென்றதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ ...

   ஒவ்வொரு பூஜை முடியும் போது அய்யனின் அருள் வாக்கில் தான் எத்தனை வருடங்களுக்கு பிறக்கு பூஜை என்னும் செய்தி இருக்கும் ...அது போலவே இந்த வருடமும் ...

   எனக்கு தெரிந்து இது வரை மூன்று பூஜைகளே நடந்துள்ளன ...

   அடுத்த முறை அந்த பக்கம் செல்லும் போது கண்டிப்பாக சென்று வாருங்கள் மிக சிறப்பான கோவில் ...

   Delete
 2. // அய்யனாரின் துணையோடு
  அனைத்து செயல்களும் சீரும் , சிறப்புமாக நடைபெற

  அய்யனார் துணை இருக்கட்டும் ...//

  அய்யனார் துணை இருப்பார்.
  முப்பூஜை விழா படங்கள் மிகவும் அழகு.

  ReplyDelete
 3. முப்பூஜை விழா தகவல் புதிதாக இருக்கு. //முதல் நாள் மாலை கருமேகங்கள் சூழ அய்யனார் கோவில் ..//.அந்த 3 படங்களும் ரெம்ப அழகு.
  நீங்க கண்டு மகிழ்ந்த காட்சியை பதிவாக்கியமைக்கு நன்றி அனு.அய்யனார் துணை இருக்கட்டும்.

  ReplyDelete
 4. படங்கள் வெகு சிறப்பு. கருமேகங்கள் சூழ்ந்த அய்யனார் கோவில் படம் பிரமாதம். கோவில் யானையின் பெயர் என்ன? அழகாக உற்சாக நடைபோட்டு செல்கிறது.

  https://www.youtube.com/watch?v=o1dO7eHD5Zs

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நன்றி ஸ்ரீராம் சார் ...

   கருமேகங்கள் சூழ்ந்த அய்யனார் கோவில் படம் ..தானாக அப்படி அமைந்தது ..

   அந்த யானை...விஷேசங்களுக்கு செல்லும் யானை போல நாங்க இருந்த இடத்திற்கு சும்மா ஒரு VISIT குடுத்துட்டு போனார் ..

   Delete