25 June 2019

சக்கர வியூகத்தில் அபிமன்யு

வாழ்க வளமுடன்





அர்ஜுனன் உடைத்த சக்கர வியூகத்தின் மாபெரும் கணிதம்

மகாபாரதம் இந்திய வரலாற்றின் அசைக்க முடியாத அடையாளம்.  பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே நடந்த இந்த போரில் கிட்டத்தட்ட பூமியின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இறந்தனர்.



அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய இந்த போரில், காக்கும் கடவுளான திருமால் கிருஷ்ணர் அவதாரமாய் முக்கியப் பங்கு வகித்தார்.

போரில் பாண்டவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது போரின் பதிமூன்றாம் நாளாகும். அதற்கு காரணம் அன்று துரோணாச்சாரியார் அமைத்த சக்கர வியூகம்.

பதினெட்டு நாட்கள் நடந்த இந்த போரில் ஒவ்வொரு நாளும் இரண்டு படைகளும் ஒவ்வொரு வியூகத்தை அமைத்தனர்.

வியூகத்தில் கூர்ம வியூகம், திரிசூல வியூகம், கிரௌஞ்ச வியூகம் என பல வியூகங்கள் இருக்கிறது. இதில் மிகவும் கடினமான வியூகம் சக்கர வியூகம்தான்.

சக்கர வியூகத்தை உடைக்கத் தெரிந்தவர்கள் பூமியில் மிக சிலரே பீஷ்மர், துரோணாச்சாரியார், பரசுராமர், அர்ஜுனன், கர்ணன், துருபதன். இந்த சக்கர வியூகத்தில் போர்த் திறமை மட்டுமின்றி கணிதமும், அறிவியலும் இருக்கிறது. அதனால் தான் அதனை உடைப்பது அவ்வளவு கடினமானது.


இது வெவ்வேறு அளவிலான ஏழு சுழலும் வட்டங்களைக் கொண்ட போர்த் தந்திரச் செயல் திட்டம். இதில் ஒவ்வொரு சக்கர அடுக்கும் திருகு சுழல் வடிவில் சுழன்று அமையும்.



சக்கர வியூகம் அமைப்பு;

போர்களத்தில் சுழலும் மரண இயந்திரமாகச் சக்கர வியூகம் கருதப்பட்டது.எனவே மிக நுட்பமான அறிவும் ஆற்றலும் இல்லையெனில் இதன் உள்ளே செல்பவர்கள் உயிர் பிழைத்து மீண்டும் வெளியில் வருவது மிக அரிது.

பாண்டவர்களை வீழ்த்த துரோணாச்சாரியார் இந்தச் சக்கர வியூக அமைப்பை ஏற்படுத்தினார்.பெரும் சிக்கலை ஏற்படுத்தி எதிரியை மதிமயங்க வைக்கும் இந்த பயங்கரமான போர்த் தந்திரத்தை முறையாகப் புரிந்து கொண்டு இந்தச் சக்கர வியூகத்தின் உள்ளே ஊடுருவிச் சென்று போர் புரிந்து பிழைத்து அதைத் தகர்த்து உயிருக்குச் சேதமில்லாமல் மீண்டு வரும் திறமை பாண்டவர்களில் அர்ஜீனன் உட்பட ஒரு சிலருக்கே இருந்தது.




அபிமன்யு இறப்பு-

மகாபாரத கதையின் படி அர்ஜீனன் தனது மகன் அபிமன்யு சுபத்திராவின் கருவில் இருக்கும் போது சக்கர வியூகத்தில்  எவ்வாறு உள்ளே செல்வது எப்படி திரும்ப வருவது குறித்து கூறுகையில் சுபத்திரா  தூங்கியதால் அபிமன்யுக்கு உள்ளே செல்ல தெரிந்தது, ஆனால் வெளி வருவதற்கு தெரியாமல் கடைசி  வரை போராடி கவுர வீரர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு தன் உயிரை நீத்தார் அபிமன்யு.


சக்கர வியூகத்தின் இரகசியம்


சக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார்.

அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும்.

 இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும்.

இதுதான் தந்திரம் ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும்.

இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும்.

0.1428578*1=0.142857
0.1428578*2=0.285714
0.1428578*3=0.428571
0.1428578*4=0.571428
0.1428578*5=0.714285
0.1428578*6=0.857142

சக்கரத்தை உடைத்த ஒன்று;

இப்பொழுது  1/7=0.142857142857 என்ற எண்ணை ஏழால் பெருக்கினால் கிடைப்பது  1 ஆகும்.

எனவே மேலே உள்ள எண்ணை  ஏழால் பெருக்கினால் சக்கர அமைப்பு உடைந்து விடும். எனவே முதல் தரத்திற்கு வந்து வீரராக வெளிப்படலாம்.  7-ல் பெருக்குவதைப் இங்கு  மிக முக்கியமான ரகசியம் .

இதனை அறிந்துதான் போரில் துருபதனை அர்ஜுனன் வீழ்த்தியிருப்பார். ஆன்மீகமும், அறிவியலும் இரட்டை குழந்தைகள் போல என்பதை நிரூபிப்பதற்கான உதாரணம்தான் இந்த சக்கர வியூகம்



(இணையத்திலிருந்து )

இங்கிருக்கும் மிக சிறப்பான சிற்பங்களுள் இந்த சக்கர வியூகமும் ஒன்று ...








பிரம்மா , விஷ்ணு , முருகன் , விநாயகர் 




சில ராமாயண காட்சிகள் ..

இவையெல்லாம் மிகச் சிறிய சிற்பங்களே ஆனாலும் அவற்றின் நளினங்கள் என்னை அதிகம் கவர்ந்தன..







கால் மேல் கால் வைத்து படுக்கையில்  















முந்தைய பதிவுகள் ...














தொடரும் ..


அன்புடன்
அனுபிரேம் 





9 comments:

  1. சக்கரவியூகத்தினுள் இருக்கும் மதிநுட்பம் வியக்கவைக்கிறது. சிற்பங்கள் அழகு. காலம் கரைத்தது போக, மிச்சமிருப்பவற்றையாவது பத்திரப்படுத்தவேண்டுமே என மனம் பதைக்கிறது.

    ReplyDelete
  2. படங்கள் அற்புதம். சக்கரவியூகக் கணக்கு பிரமிப்பு.

    ReplyDelete
  3. சக்கரவியூகக் கணக்கு மிக அருமையான பகிர்வு அனு.
    படங்கள் எல்லாம் அழகு.
    பார்க்க ஆவலை ஏற்படுத்தி விட்டது.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    மகாபாரதபோரில் சக்கரவியூகம் பற்றி, அபிமன்யு பற்றி ஒரளவு அறிந்திருந்தாலும், சக்கரவியூக கணக்குகளை பற்றி தாங்கள் குறிப்பிட்டிருந்ததை படித்ததும் வியப்பு மேலிட்டது. எத்தனை போர் அம்சங்கள் எத்தனை திறனாய்வுகள், அனைவரின் புத்திசாலிதனங்களும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சிற்பங்களின் கலையம்சங்கள் மிக அருமை. பார்க்க வேண்டிய இடங்கள்,எல்லாவற்றையும் நேரில் பார்க்க வைத்தது போல இருந்தது தங்களின் அழகான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. இங்கு சென்றுள்ளேன். சக்கர வியூகம் பற்றிய விளக்கம் அருமை. பேலூர், ஹலேபேடு, சோம்நாத்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றபோது பிரமித்து நின்றோம். அவற்றில் அருமையான சிற்பங்களைத் தேர்ந்தெடுத்துப் பகிரும் விதம் பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  6. அழகான இடம் படங்களும். மிக அழகாக எடுத்துருக்கின்றீர்கள். சிற்பங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன.

    சக்கரவ்யூகம் கணக்கும் வியப்பூட்டுகிறது.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  7. சக்கரவியூகம் பிரமிப்பூட்டுகிறது. அழகான சிற்பங்கள். எவ்வளவு அழகா செதுக்கியிருக்கிறார்கள். படங்கள் அத்தனையும் அழகு அனு.

    ReplyDelete
  8. சக்கர வியூக கணக்கு அருமை...
    படங்களுடன் நல்ல பகிர்வு...
    தலையில்லாத சிற்பத்தைப் பார்க்கும் பொது இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டுமே என்ன எண்ணம் தோன்றுகிறது...

    ReplyDelete
  9. பிரமிக்க வைக்கும் கணக்கு. சிற்பங்கள் எத்தனை அழகு.

    ReplyDelete