தொடர்ந்து வாசிப்பவர்கள்

15 June 2019

நம்மாழ்வார் திருநட்சத்திரம்

இன்று   நம்மாழ்வார் திருநட்சத்திரம்  (வைகாசியில் – விசாகம்)........
ஆழ்வார்  வாழி திருநாமம்!


திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே

திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே

இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே

எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே

கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே

காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே

வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே

மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே


நம்மாழ்வார்


பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி

தந்தை : காரி

தாய் : உடையநங்கை

பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12

நட்சத்திரம் : விசாகம் (பவுர்ணமி திதி)

கிழமை : வெள்ளி

எழுதிய நூல்கள் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி

பாடல்கள் : 1296

சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் போன வருட பதிவு ...


உயர்வறவுயர்நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்

மனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்

இனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்

இனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே


இலனது உடையனிது எனநினை வரியவன்

நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்

புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்

நலனுடை யொருவனை நணுகினம் நாமே

நாமவனிவனுவன், அவளிவளுவளெவள்

தாமவரிவருவர், அதுவிது வுதுவெது

வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை

ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே
அவரவர் தமதமது  அறிவறி வகைவகை

அவரவர் இறையவர் என அடியடைவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர்இறையவர்

அவரவர் விதிவழி அடையநின்றனரே
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்*

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்*

என்றுமொரியல்வினர் எனநினைவரியவர்*

என்றுமொரியல்வொடு நின்றவெந்திடரே
திடவிசும் பெரிவளி நீர்நில இவைமிசை

படர்பொருள் முழுவதுமாய் அவையவைதொறும்

உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும்பரந்துளன்

சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்

வரன்முதலாயவை முழுதுண்ட பரபரன்

புரமொரு மூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து

அரனயனென உலகழித்தமைத் துளனே--திருவாய்மொழி முதல் திருமொழி


திருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் ( நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.

இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.

மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது.

ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார்.

யானையை அடக்கும் அங்குசம் போல பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால், "பராங்குசன்" என்றும்,

தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி (தெய்வப் பேச்சு) "பகவத் விஷயம்" என்று அழைக்கப் படுகிறது.


நம்மாழ்வாரை வைணவர்கள் 'தமிழ் வேதம் தந்த ஆழ்வார்' 
எனப் போற்றுகின்றனர்...


நம்மாழ்வாருடைய திருநாமங்கள்..

ஓம் நமோ நாராயணாய நம!!
நம்மாழ்வார்  திருவடிகளே சரணம்!!


அன்புடன்
அனுபிரேம்...

2 comments:

  1. நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
    படங்கள் எல்லாம் அழகு.
    நம்மாழ்வார் திருநாமங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete