03 June 2019

மஹாலக்ஷ்மி கோவில் சிற்பங்கள்... , ஹெலேபேடு

வாழ்க வளமுடன் 






முந்தைய பதிவில் மஹாலக்ஷ்மி  கோவில்  , ஹளபேடு பற்றிக் கண்டோம் .

இன்று அக்கோவிலின்   சிறப்புகளைக் காணலாம் .. ...

 நுழைவாயில் வழியாக, மைய மண்டபம் நோக்கிச் சென்றால் அந்த மண்டபத்தைச் சார்ந்து மூன்று சந்நதிகளை காணலாம்.

நான்காவது சந்நதி சற்று நீண்ட சதுர அமைப்பைக் கொண்டது.

இந்த நான்காவது சந்நதியில்தான் மகாலக்ஷ்மி  அருள்கிறாள். மையக் கோயிலில் லக்ஷ்மி தேவி நின்ற கோலத்தில் மூன்று அடி உயரத்தில் மிக அழகாக காட்சியளிக்கிறாள்.

தேவிக்கு நான்கு கரங்கள்.

அவற்றில் சங்கு, சக்கரம், தண்டாயுதம் மற்றும் ஜெபமாலை ஏந்தியிருக்கிறாள். லட்சுமிதேவியின் இருபுறமும் காவல் தெய்வங்களாக திருவுருவங்கள் காணப்படுகின்றன.

 மற்ற மூன்று சந்நதிகளில், வடக்கே காளியும், தெற்கே விஷ்ணுவும், மேற்கே சிவனும் உள்ளனர்.


 மகாலட்சுமி சன்னதிக்கு எதிர்புறம் விஷ்ணு சன்னதி உள்ளது .

ஆனால் அங்கு இருந்த   விஷ்ணு விக்ரகம் திருடப்பட்டதால், பின்னர் ஒரு  காளபையர்ஷேவரர்  சிலை அந்த  இடத்தில் வைக்கப்பட்டுள்ளது  .

காளி  தேவியின்  சன்னதிக்கு நேர் எதிர்புறம் சிவன்  சன்னதி அமைந்துள்ளது .

இங்குள்ள காளி சும்ப-நிசும்பனை வதம் செய்தபின் ஆக்ரோஷமாக காட்சி தரும் உருவமைப்போடு விளங்குகிறாள். சிவனை இங்கு பூதநாதர் என்று அழைக்கின்றனர்.

மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது அங்கு கூரையில் உள்ள சிற்பங்கள் ....

மைய சதுர மண்டபத்தின் மேற்கூரையில் சிவதாண்டவத்தை நடன கோலத்தில் சிற்பமாக காணலாம். அதனைத் தாண்டவராயன் என்றழைக்கின்றனர்.


கீழே உள்ள படங்கள் எல்லாம் மேற்கூரையில் உள்ள சிற்பங்கள்...

சிவன்

நந்தி மீது 

கஜேந்திர வாகனத்தில் 

குதிரை வாகனத்தில்  





கையில் வாளும் தோளில் இருவரை சுமந்துக் கொண்டும் 


முதலை மீது 


குதிரை வாகனத்தில்  



மேலும், இருபுறமும் யானை துதிக்கையை உயர்த்தியபடியும் நடுவில் கஜலட்சுமியின் சிலையையும் தரிசிக்கலாம்.

அஷ்டதிக் பாலகர்களும் உள்ளனர். மைய சதுர மண்டபம் 18 தூண்களைக் கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு தூணும் ஹொய்சாலாக்கே உரிய பாணியில் கச்சிதமாக அமைந்துள்ளது.


வாஸ்து சாஸ்திரத்திரப்  படி  எட்டு  திசைகளும் ஏற்றப்ப இந்த சிற்பங்கள் உள்ளதாக அந்த வழிகாட்டி விளக்கினார்.




நான்கு சந்நதிகளைத் தவிர, மதிற் சுவருக்குள்ளே மற்றொரு சந்நதியில் காலபைரவர் அருள்பாலிக்கிறார்.

கோயிலில் மொத்தம் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. இவற்றில் எட்டு பிரமிட் பாணியில் அமைந்துள்ளன.

இதில் லட்சுமி தேவி வீற்றிருக்கும் கோபுரம் மட்டும் சற்று வித்தியாசமாய் உள்ளது. இதன்மீது மட்டும் உலோக கலசம் உள்ளது. மற்ற எட்டு கோபுரங்களிலும் காரையால் ஆன கற்கலசம்தான் உள்ளது.







பின்புறம் உள்ள ஏரிக்கரை
























மிக அருமையான பராமரிப்பில் ,  அமைதியான கோவில் ... ...மிக சிறப்பான தரிசனம் கிடைத்தது ....





தொடரும்.....

அன்புடன்
அனுபிரேம்




7 comments:

  1. ஹளபேடு சிற்பங்கள், கோவில் அனைத்தும் அழகு.
    விவரங்களும் மிக அருமை.
    மேற்கூறை சிற்பங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  2. ஹளேபேடு சென்றபோது இக்கோயிலுக்குச் செல்லவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வோம்.

    ReplyDelete
  3. அழகிய சிற்பங்கள்.

    ReplyDelete
  4. விவரங்களும், அழகிய படங்களும் இந்த இடத்துக்குச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்துகின்றன.

    ReplyDelete
  5. படங்கள் அட்டகாசமாக இருக்கு. ஹளபேடு கலை சூப்பரா இருக்கும்..மேற்கூரை சிற்பங்கள் செம...விவரங்களும் அருமை...

    கீதா

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    ஹலபேடு கோவிலும், கோவிலைப்பற்றிய விபரங்களும், படங்களும் மிகவும் அழகாகவும், அருமையாகவும் பதிந்து உள்ளீர்கள். மேற்கூரை கலை சிற்பங்கள் மிக மிக அழகாக உள்ளன. தங்களால் இக்கோவிலைப் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. சிற்பங்கள் அருமை.... நமக்கு அதன் அருமை புரியுமா?

    ReplyDelete