வாழ்க வளமுடன் ...
நாங்கள் மஹாலக்ஷ்மி கோவில் சிற்பங்கள்... , கண்டு ரசித்துவிட்டு அடுத்து சென்ற இடம் ஹோய்சாலேஸ்வரர் கோவில் ,ஹளபேடு
இந்த இடம் மஹாலக்ஷ்மி கோவிலிருந்து 2௦ கி. மீ தொலைவில் உள்ளது.
கி.பி 10ம் நூற்றாண்டில் இருந்து 14 நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் ஹோய்சாலா வம்ச மன்னர்கள் அரசாண்டனர்.
950 ஆம் ஆண்டு ஆரக்கௌள என்பவரின் தலைவனாக இவ்வம்சத்தின் வரலாறு தொடங்குகிறது. பின்னர் நிரிபா காமா, வினாயதித்தா, ஈரேயேங்கா, பல்லாலா, விஷ்ணுவர்தனா, நரசிம்மா, வீரபல்லாலா, வீரநரசிம்மா, வீரசோமஸ்வரா, நரசிம்மா 2, வீர பல்லாலா 3, ஹரிஹர ராயார் கடைசி அரசராவார்.
சாளுக்கியர்கள், சோழர்கள் ஆகியோர்களை வெற்றி பெற்று அரசை பலமாக்கினர். விஷ்ணுவர்தன் அரசனாக இருந்தபோது பேலூர் நகரத்தில் இருந்து ஹலபேடுக்கு தன் தலைநகரத்தை மாற்றினார்.
இரண்டு நூற்றாண்டுக்கு பின் வீர பல்லாலா-3 காலத்தில் அதாவது கி.பி 1311ல் டில்லி சுல்தான் படையெடுப்பால் ஹலபேடு சிதைக்கப்பட்டபின் மீண்டும் பேலூருக்கே தலைநகரம் மாற்றப்பட்டது.
சாலா என்பவர் புலியுடன் தனியாக மோதினார். அப்போது ஹோய்சாலா ஹோய்சாலா என மக்கள் ஊக்கம் தந்தனர். ( ஹோய் என்றால் கன்னடத்தில் மோது, சாலா – என்பது பெயர்)
இரண்டும் இணைந்து ஹேய்சாலா என மாறியது. புலியையும் வென்றார். அந்த சாலாவிற்கு பின் வந்தவர்களே ஹோய்சாலா வம்சம் என அழைக்கப்பட்டனர்.
ஹளபீடு என்றால், சிதைந்த நகரம் என்று பொருள். அன்றைய காலத்தில் அடுத்தடுத்த இஸ்லாமிய மன்னனான மாலிக் கபூரின் படையெடுப்பில் சிதைந்தது அந்த நகரம்.
இக்கோவில் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்குப் பகுதியில் ஷாந்தலேஸ்வரர், தெற்குப் பகுதியில் ஹொய்சளேஸ்வரர் ஆகிய சிவபெருமான் திருவுருவங்கள். இரண்டுமே சிவலிங்க வடிவம்.
ஆலயத்தின் முகப்பில் இரு நந்தி மண்டபங்கள் உள்ளன.
தெற்கு, வடக்கு திசைகளில் தலா ஒரு வாசலும் கிழக்கில் இரு நுழைவு வாயில்களும் உள்ளன.
இரண்டாம் நந்தி மண்டபம் ...
நாங்கள் சென்ற போது கோவில் நடை மூடி இருந்ததால் ....சிறிது நேரம் அங்கே அமர்ந்து ஓய்வு எடுத்தோம் ....
பின் நடை திறப்பிற்குப் பின் சிவனை வழிபட்டோம் ....சிறிய எளிய உருவில் சிவ பெருமான் இங்கே அருள் புரிகிறார் ...
நாங்கள் மஹாலக்ஷ்மி கோவில் சிற்பங்கள்... , கண்டு ரசித்துவிட்டு அடுத்து சென்ற இடம் ஹோய்சாலேஸ்வரர் கோவில் ,ஹளபேடு
இந்த இடம் மஹாலக்ஷ்மி கோவிலிருந்து 2௦ கி. மீ தொலைவில் உள்ளது.
கி.பி 10ம் நூற்றாண்டில் இருந்து 14 நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் ஹோய்சாலா வம்ச மன்னர்கள் அரசாண்டனர்.
950 ஆம் ஆண்டு ஆரக்கௌள என்பவரின் தலைவனாக இவ்வம்சத்தின் வரலாறு தொடங்குகிறது. பின்னர் நிரிபா காமா, வினாயதித்தா, ஈரேயேங்கா, பல்லாலா, விஷ்ணுவர்தனா, நரசிம்மா, வீரபல்லாலா, வீரநரசிம்மா, வீரசோமஸ்வரா, நரசிம்மா 2, வீர பல்லாலா 3, ஹரிஹர ராயார் கடைசி அரசராவார்.
சாளுக்கியர்கள், சோழர்கள் ஆகியோர்களை வெற்றி பெற்று அரசை பலமாக்கினர். விஷ்ணுவர்தன் அரசனாக இருந்தபோது பேலூர் நகரத்தில் இருந்து ஹலபேடுக்கு தன் தலைநகரத்தை மாற்றினார்.
இரண்டு நூற்றாண்டுக்கு பின் வீர பல்லாலா-3 காலத்தில் அதாவது கி.பி 1311ல் டில்லி சுல்தான் படையெடுப்பால் ஹலபேடு சிதைக்கப்பட்டபின் மீண்டும் பேலூருக்கே தலைநகரம் மாற்றப்பட்டது.
சாலா என்பவர் புலியுடன் தனியாக மோதினார். அப்போது ஹோய்சாலா ஹோய்சாலா என மக்கள் ஊக்கம் தந்தனர். ( ஹோய் என்றால் கன்னடத்தில் மோது, சாலா – என்பது பெயர்)
இரண்டும் இணைந்து ஹேய்சாலா என மாறியது. புலியையும் வென்றார். அந்த சாலாவிற்கு பின் வந்தவர்களே ஹோய்சாலா வம்சம் என அழைக்கப்பட்டனர்.
ஹளபீடு என்றால், சிதைந்த நகரம் என்று பொருள். அன்றைய காலத்தில் அடுத்தடுத்த இஸ்லாமிய மன்னனான மாலிக் கபூரின் படையெடுப்பில் சிதைந்தது அந்த நகரம்.
விஷ்ணுவர்த்தனின் அரசவையில் முக்கியப் பொறுப்பு வகித்த கோட்டுமல்லன் என்பவர் மேற்பார்வையில் ஹளபேடு கோயில் உருவாக்கப்பட்டது. 103 ஆண்டுகள் கட்டப்பட்ட போதிலும் இன்னும் முழுமையடையாத பகுதிகள் இங்கு உண்டு.
வடக்குப் பகுதியில் ஷாந்தலேஸ்வரர், தெற்குப் பகுதியில் ஹொய்சளேஸ்வரர் ஆகிய சிவபெருமான் திருவுருவங்கள். இரண்டுமே சிவலிங்க வடிவம்.
தெற்கு, வடக்கு திசைகளில் தலா ஒரு வாசலும் கிழக்கில் இரு நுழைவு வாயில்களும் உள்ளன.
நந்தி மண்டபத்தின் கூரை
கோவிலின் உட்புறம் ...
மேற்கூரை |
பின் நடை திறப்பிற்குப் பின் சிவனை வழிபட்டோம் ....சிறிய எளிய உருவில் சிவ பெருமான் இங்கே அருள் புரிகிறார் ...
கல்லிலே கலை வண்ணம் என்னும் சொல்லுக்கு விளக்கம் இங்குள்ள சிற்பங்களே ....அத்துணை அழகு அனைத்தும் ...
அக்காட்சிகள் இனி வரும் பதிவுகளில் தொடரும் ...
முந்தைய பதிவுகள் ...
தொடரும்....
அன்புடன்
அனுபிரேம்
கல்லிலே கலை வண்ணம் என்னும் சொல்லுக்கு விளக்கம் இங்குள்ள சிற்பங்களே ....அத்துணை அழகு அனைத்தும் ...//
ReplyDeleteஅனைத்தும் அழகுதான்.
நேரில் பார்த்த உணர்வை தருது பதிவு.
படங்களும், விளக்கங்களும் அருமை சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான கோவில்.. விளக்கமாக தகவல்கள் தந்துள்ளீர்கள். படங்களும் செய்திகளும் இந்த இடத்தை தரிசிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன. கோவிலின் கற்சிற்பங்களும், வேலைப்பாடுகளும் மிக அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகான கலைநுட்பத்துடன் சிற்பங்கள். நந்தியை பார்க்கும்போது தஞ்சாவூர் நந்தி தான் ஞாபகம் வருகிறது. பிள்ளையார் வெகு அழகு. அருமை.
ReplyDeleteசென்றிருக்கிறேன். வியக்க வைக்கும் கலை நுணுக்கம். இரசித்துக் கொண்டே இருக்கலாம்.
ReplyDeleteநல்ல பகிர்வு.
எத்தனை அழகான சிற்பங்கள்.....
ReplyDeleteசிற்பங்கள் அனைத்தும் அப்படியொரு அழகு! பிரமிப்பாய் இருக்கிறது!
ReplyDelete