29 June 2019

எத்தனை அழகு ...

வாழ்க வளமுடன் 

படம் - இந்திரா

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)

பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…

வாடி இளையசெல்லியே

நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே

அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்

அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்

பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

என்னடா இது  ஒரே படத்தைத் திரும்ப திரும்ப போட்டு இருக்கேன் என்று நினைகிறீர்களா  ...

இப்படி பளிச் பளிச் படம் எடுக்கணும் ன்னு பல நாள் ஆசை , இதுவரை பல படங்கள் எடுத்து இருந்தாலும் இந்த படங்களை  பார்க்கும் போது மிக நிறைவும், மகிழ்ச்சியும் வருகிறது  ...

நம் அலைபேசியில் எடுத்த படமும் , கேமராவில் எடுத்த துல்லியத்தில் இருக்கிறது  என்ற மகிழ்ச்சி....

இப்படங்கள் எல்லாம் ஒரே மாதரி இருந்தாலும் அனைத்திலும் சில சில வித்தியாசங்கள் உண்டு ...அவை கோணத்திலும்,  மலரிலும் ...சில மலர்கள் மலர்ந்தும் , சில மலரும் நிலையிலும் என ...

சிலவற்றில் மகரந்தம் இருந்தும் , விழுந்தும் என ..

இவைகளும் கப்பன் பார்க்கில் எடுத்த அழகிய காட்சிகளே ...

எப்படி இருக்கிறது ...நீங்களும் ரசித்தீர்களா....

அன்புடன்
அனுபிரேம்

8 comments:

  1. படங்கள் செம அழகு அனு.

    பாட்டு பல முறை கேட்டிருக்கிறேன். நல்ல பாடல். அனு இனி பாடல்கள் பகிரும் போது லிங்க் கும் கொடுத்துரருங்க. இப்பாடல் தெரியும். ஆனால் தெரியாத பாடலைக் கேட்க முடியுமே என்பதால்...

    கீதா

    ReplyDelete
  2. பாடலும், படங்களும் மிக அருமை.
    பளிச் பளிச் படங்கள் அழகு.பச்சையும், மஞ்சளும் அழகு.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். அலைபேசியில் எடுத்ததும் மிக அழகாக உள்ளது. நம் அலை பேசியில் எடுத்த படங்களாயினும், கேமராவின் துல்லியத்தில் வந்த சந்தோஷம்... அதைதான் எனக்கும்.. உங்களைப் போலவேதான் என் மனமும் நாம் அலைபேசியிலேயே எடுத்த படங்கள் இவை என மகிழ்ச்சியுறும்.படங்கள் மிகவும் நன்றாக கண்களை கவரும் வண்ணம் வந்திருக்கிறது. முதல் பட மலர் பாட்டுக்கு தகுந்தபடி ஆடி வேறு காண்பிக்கிறதே.! ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. பாடலும், படங்களும் மிகமிக அழகு. ஒரே படம் என்றாலும் வித்தியாசமாக தெரிகிறது.ஒற்றை மஞ்சள் பூ அழகு.

    ReplyDelete
  5. அழகான படங்கள். இந்திரா பாடல் பிடித்த பாடல்களில் ஒன்று.

    ReplyDelete
  6. பாடல் கேட்டிருக்கிறேன். பூவின் படங்கள் அழகு.

    ReplyDelete
  7. படங்களும் பாடலும் அருமை

    ReplyDelete