ஒவ்வோர் வருடமும் ஜூன் 05 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக அனுசரிக்கப் படுகிறது.
புவியையும் அதன் இயற்கைத் தன்மையையும் காக்கும் பொருட்டு, உலகளாவிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவே கடந்த 1972 ஆம் ஆண்டு ஐ.நா சபையால் துவங்கி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாம் வாழ்ந்து வருகிற புவி குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் சிறிதேனும் நாம் சிந்தித்திடாத காரணத்தால்தான் ஐ.நா சபையால் இம்மாதிரியான முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த நாள் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினம்.
முடிவில் ஜுன் 5ஆம் தேதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும்.
மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது.
இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.
நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது.
இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது.
சுற்றுச் சூழலை மனிதன் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல.
சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை.
மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம்.
இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.
மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும், காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான்.
பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன.
மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.
சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் உணர்ந்து செயல் ஆற்ற வேண்டும் .
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
( cuppon park ல் எடுத்த படங்களும் , இணையத்தில் சேகரித்த தகவல்களும் ...)
நமது சந்ததிகளுக்கு வேறு எதனையும் தவிர்த்து இயற்கையோடு இயைந்த புவியை கையளித்துவிட்டுச் செல்வோம்.
இனிய சுற்றுச் சூழல் தின வாழ்த்துக்கள்.!
அன்புடன்
அனுபிரேம்
நல்லதொரு பதிவு!
ReplyDeleteசுற்றுப்புறத்தின் சுத்தம் பற்றி ஒவ்வொரு தனி மனிதன் மனதிலும் நல்ல சிந்தனைகள் பதிந்திருக்க வேன்டும். எங்கிருந்தாலும் அதைப்பின்பற்ற வேண்டும்.
அருமையான பதிவு.
ReplyDeleteஆதி முதலில் மனிதன் மரத்தை வழிபட்டான்.
காலம் காலமாய் தலவிருட்சம் வழிபாடு என்றும் வழிபட்டு வருகிறார்கள். மதுரையில் சில வீடுகளின் முன் இருக்கும் மரத்திற்கு தினம் வழிபாடு செய்து விட்டுதான் உணவே அருந்துவார்கள்.
சாலை விரிவாக்கத்திட்டதால் எண்ணற்ற மரங்கள் வெட்டி சாய்க்கபடுகிறது.
ஒரு மரம் வெட்டினால் பல மரங்கள் நட வேண்டும். காற்று மாசு அடையும் மரம் இல்லையென்றால்,மழை வரத்து குறையும்.
சிந்திப்போம்.
இனிய சுற்றுச் சூழல் அழைய வாழ்த்துக்கள்.
இனிய சுற்று சூழல் அமைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteபசேலென்ற கண்ணுக்கு குளிர்சியான படங்களுடன் விழிக்கும் பகிர்வு.
ReplyDeleteதலைநகரங்களில் அடுக்குமாடிக்கட்டிடகாடுகள் முளைப்பதில் சோலைகள்யாவும் மாயமாகிவிட வெப்பமோ சொல்லமுடியாது. இதை உணர்ந்தாவது சுற்றுசூழலை பாதுகாப்போம்.
நல்லதொரு பதிவு.அழகான படங்கள். இங்கு மரங்கலை கண்டபடி வெட்டமுடியாது. வீட்டில் இருக்குமரமாயின் அனுமதி பெறவேண்டும்(சில மரங்களுக்கு). மரத்தினை அழிப்பதனால் மழை இல்லாமல் போகுகிறது. சூழலை பாதுகாப்போம்.
ReplyDelete