வாழ்க வளமுடன்
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
ஸ்.. ஆஹா.. ஸ்.. ஆஹா..
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட
அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
இந்த பொறப்புத்தான்
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
தாமிரபரணி திருநெல்வேலி சோதியில ஒரு தனிருசி
வைகையில் புடிச்ச ஆயிர மீனு கொழம்புக்கு ஒரு தனிருசி
திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு
தென்காசி பரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு
அம்மாவின் வாசம் முன்பு வேப்பம்பூ கொழம்புக்கு
அவ தானே ஊட்டித்தந்தா ஆகாய நெலவுக்கு
உணவிலே ஒரு உறவு இருக்குது
உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது
பொறப்புத்தான் ஆஹா ஹா…
அத நெனச்சு தான் ஆஹா ஹா…
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
கத்திரி வெயிலு கொதிக்கும் போது பானகம் கரைச்சு குடிக்கணும்
கொட்டுற மழையில் குளிரும் போது காரச்சேவு கொஞ்சம் கொரிக்கணும்
ஆல்வள்ளி கிழங்குக்கு ஆஹாஹா என்ன ருசி
ஓலை கொழுக்கட்டைக்கு ஓஹோஹோ என்ன ருசி
கருப்பட்டி சுக்கு மல்லி காபிக்கு என்ன ருசி
ஊரோரம் ஒத்தபனை கள்ளுக்கு என்ன ருசி
பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில
ஒவ்வொரு சுவைக்கும் மனசு லயிச்சிது
பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அட சுடச்சுட
அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி...
சாப்பிட கிடைச்சது கிடைச்சது கிடைச்சது........
இளையராஜாவின் இசையில் இந்த பாடலுக்கான வீடியோ ...
அனுபிரேம்
ஆஹா ஐஸ் க்ரீம் செமையா இருக்கு சாக்கோ சிப்ஸ் எல்லாம்...அப்புறம் குச்சி ஐஸ் யும்மி..
ReplyDeleteஇந்தப் பாட்டு கேட்டதில்லை. கேட்டுப் பார்க்கிறேன்...
கீதா
ருசியான பாடல் ... ருசி... ருசி...
ReplyDeleteஇரண்டுமே ருசித்தது.
ReplyDeleteபாடல் கேட்டது இல்லை ரசித்து கேட்டேன்.
ReplyDeleteபடங்கள் நன்றாக இருக்கிறது.
ஆஹா..ஐஸ்கிரீம். குச்சிஐஸ் எனக்கு பிடிக்கும். பாட்டு சூப்பரா இருக்கு.
ReplyDeleteசின்ன வயசில் குச்சி ஐஸுக்கு ஆலாய்ப் பறந்தது நினைவுக்கு வருகிறது. அதுஒரு காலம்!
ReplyDeleteஇந்தப் பாடல் கேட்டதில்லை.
பார்க்க நல்லாத்தான் இருக்கு... உண்மைதான் இந்த பிறப்பு முடிவதற்குள் அனைத்தையும் அனுபவிச்சிடோணும்:) அடுத்த பிறப்பு எங்கினயோ:)..
ReplyDelete