02 July 2019

சோயா கட்லெட் / சோயா டிக்கி

வாழ்க வளமுடன் 

இன்றைய பதிவில் சோயா கட்லெட்  / சோயா  டிக்கி  








தேவையானவை

சோயா - 1 கப்

பெரிய வெங்காயம் -  1

இஞ்சி , பூண்டு விழுது  - 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள்        -  1  ஸ்பூன்
எலுமிச்சை சாறு   -  1  ஸ்பூன்
மைதா மாவு          - 2 ஸ்பூன்
சோள மாவு            - 1 ஸ்பூன்

மல்லி இலை - சிறிதளவு

எண்ணெய்
உப்பு



செய்முறை 

சோயாவை  வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் . அதனுடன்   இஞ்சி, பூண்டு விழுது,   ( இந்த விழுதுடன் நான் மிளகாயும் சேர்த்து அரைத்து இருப்பதால் அது சிவப்பு நிறத்தில் உள்ளது)  வெங்காயம் , கொத்தமல்லி தலை , எலுமிச்சை சாறும்   சேர்த்து அரைக்கவும் .



அரைத்த கலவையில்  மைதா  மாவு , சோள மாவு , உப்பு  சேர்த்துப் பிசையவும் .

பின் அவைகளை வட்டமாக தட்டி  தோசை கல்லில் சிறிது எண்ணை விட்டு பொரித்து எடுக்க, சுவையான சோயா கட்லெட்  / சோயா  டிக்கி  தயார்.









பொதுவாக இந்த சோயா  கொஞ்சம் வழவழப்பாக இருப்பதால் பசங்களுக்கு பிடிப்பது  இல்லை ..ஆனால் இந்த முறையில்  செய்யும் போது விரும்பி உண்கிறார்கள் ..




அன்புடன்
அனுபிரேம்





4 comments:

  1. புதிய ,வித்தியாசமான குறிப்பு அனு. படம் பார்க்க நன்றாக இருக்கு.

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது சோயா டிக்கி.

    ReplyDelete
  3. வித்தியாசமான குறிப்பு. சுவையான பதிவு.

    ReplyDelete