26 July 2019

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவில்



அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்று விளங்குவது காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவிலாகும்.


இந்த அம்பாளுக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய சிறப்பு பெயர்களும் உண்டு.




காம என்றால் அன்பு, கருணை. அட்ச(சி) என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள்.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும்.







திருக்கோவில் வரலாறு 

முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தவ வலிமை பெற்று எல்லாரையும் வென்று, தன்னால் கொன்றவரின் பலம் தனக்கு வந்து விட வேண்டும் என்று வரம் பெற்று இருந்தான். மேலும் அவனுக்கு ஒன்பது வயது பெண் குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற விதியும் இருந்தது.

இதனால் தேவர்களும், இந்திரர்களும் மிகவும் வேதனை அடைந்தனர். ஆகவே சக்தி தேவி ஒன்பது வயது குழந்தை போல வடிவம் எடுத்து அசுரனை வதம் செய்து அமர்ந்த இடம் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்.






 பிறகு அந்த கோபத்தை குறைக்க ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஒன்றை உருவாக்கி, அம்பாளின் கோப சக்தியை அருள் தரும் சக்தியாக மாற்றினார் என்பது வரலாறு.

அன்னையின் பீடத்தின் கீழாகத்தான் ஸ்ரீ சக்கரம், அனைத்து ஆலயங்களிலும் அமைத்திடுவது வழக்கம் ஆகும். ஆனால் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் உக்கிரம் தணித்திட வேண்டிய ஆதிசங்கரர் தேவியின் முன்பாக ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார் எனக் கூறப்படுகின்றது.





அம்பாளின் சிறப்பு பெருமை

இந்த திருத்தலத்தில் அம்பிகைக்கு மூன்று உருவங்கள் உண்டு. அவை ஸ்தூலம், காரணம், சூட்சுமம் என்பன. மேலும் இந்த அம்பாளை வணங்குவதால் கோடான கோடி நன்மைகள் உள்ளது. ஆகவே இந்த அம்பாள் காமகோடி காமாட்சி என்ற சிறப்பு பெயரோடு அருள்பாலிக்கிறாள்.


காமாட்சி அம்மன் தெற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார்.

காமாட்சி  இவ்விடத்தில் பத்மாசனக் கோலம் கொண்டவளாக இருக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து வித பிரம்மாக்களையும் தனக்கு ஆசனமாய்க் கொண்டவள்.

காமாட்சி தனது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்பு வில் ஆகிய நான்கு ஆயுதங்களை ஏந்தி இருக்கிறாள்.

காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.

ஆனால்…இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்

கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலிருந்து தங்கம்வேய்ந்த கோபுர விமானத்தினை பார்க்கலாம்.









கோவிலின் சிறப்பு 

ஸ்ரீகாமாக்ஷியம்மன் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ள கருவறைப் பகுதிக்கு ‘காயத்ரி மண்டபம்’ என்று பெயர்.

இம்மண்டபத்தில், 24 தூண்கள் உள்ளன; இவை, காயத்ரி மந்திரத்தின் 24 அக்ஷரங்களைக் குறிக்கின்றன.

காயத்ரி மண்டபத்திற்கு வலப்பக்கமாக, வாராஹி, அரூபலக்ஷ்மி, சந்தான கணபதி ஆகியோரின் சந்நிதிகள் காணப்படுகின்றன.

வெள்ளிக் கவசமிடப்பட்டுள்ள சந்தான ஸ்தம்பம், பிள்ளை வரம் கேட்டுப் பிரார்த்தித்த தசரதச் சக்கரவர்த்தியால் ஸ்தாபிதம் செய்யப்பட்டது என்பர். இராமருக்கும் அவருடைய வம்சாவளியினருக்கும் காமாட்சியே குடும்ப தெய்வம்.















 விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னதியும்  அம்பாளுக்கு அருகில் இருப்பது மிகவும் விசேஷம்.

 இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கருதப்படுவது துண்டீர மகராஜா சன்னிதி. இந்த தலத்தை ஆட்சி செய்த துண்டீரர் என்ற ஆகாசபூபதிக்கு குழந்தை இல்லை. அவர் காமாட்சி அம்மனை தினமும் வழிபட்டு வந்தார்.

இவரது பக்தியில் அம்மன் தனது முதல் குழந்தையான பிள்ளையாரை கொடுத்தாள். கணபதி துண்டீரர் என்ற பெயரோடு அந்த ஊரை ஆட்சி செய்தார்.

துண்டீர மகராஜா காமாட்சி அம்மனுக்கு எதிரே அமர்ந்துள்ளார். இவரை காண செல்லும் முன் அமைதியாக செல்ல வேண்டும்.



தழுவக் குழைந்த நாதர்





காஞ்சிபுரத்தில் எண்ணற்ற சிவாலயங்கள் இருந்தாலும் அங்கு  எங்கும் அம்பாளுக்குத் என தனி சந்நிதிகள் இருப்பதில்லை.
அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர்.

 காஞ்சியில் காமாட்சியம்மாள் தவக்கோலத்தில் இருப்பதால் தான் இங்கிருக்கும் சிவன் கோவில்களில் அம்மாளுக்கு தனி சன்னதி கிடையாது எனறு  கூறுவர்.







மிக நிறைவான தரிசனம் இங்கு ...

மேலும் கோவிலின் உள்ளே நந்தவனமும் , திருக்குளமும் மிக அருமையான பராமரிப்பு ...

எல்லா இடமும் மிக சுத்தமாக கண் கொள்ளா காட்சிகளாக இருந்தன.


சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
ஜோதியாய் நின்ற உமையே

சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கிவிடுவாய்

சிந்தைதனில் உன் பாதம் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தைப் மாற்றிவிடுவாய்

ஜெகமெலாம் உன் மாயை
 புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது

சொந்தவுன் மைந்தனாம் எந்தனை ரக்ஷிக்க
சிறிய கடன் உன்னதம்மா

சிவசிவ மஹேஷ்வரி பரமனிட ஈஷ்வரி
சிரோன்மணி மனோன்மணியும் நீ

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
அனாத ரக்ஷகியும் நீ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே.

-  காமாட்சி அம்மன் விருத்தம்







ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மனின்  திருவடிகளே சரணம்...

அன்புடன்
அனுபிரேம் 

11 comments:

  1. அருமையான பதிவு வெள்ளிக்கிழமைக்கு.
    ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் படங்கள் எல்லாம் மிக அழகு.
    தூண்களில் உள்ள சிற்பங்கள் அழகு.
    பல வருடம் ஆச்சு இந்த கோவிலைப் பார்த்து. உங்கள் தளத்தில் நன்கு தரிசனம் செய்து கொண்டேன்.
    கோவில் விவரங்கள் அருமை.

    ReplyDelete
  2. காமாட்சி அம்மன் விருத்தம் பாடி காமாட்சியை வணங்கி கொண்டேன் அனு.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி ..

      Delete
  3. புகைப்படங்களூம் விபரங்களும் மிக அருமை! கோபுரம் மிக அழகு!

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு. கருணை நிறைந்த காமாட்சி அம்மன் தரிசனமும், தங்க கோபுர அழகும், தரிசித்துக் கொண்டேன். நல்ல விபரமாக காஞ்சி காமாட்சி அன்னை வரலாற்றை சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்.அம்மனின் மகிமைகள் படித்துணரும்படி மிகவும் அருமையாக இருக்கிறது. நான் சென்னையில் இருந்த போது எப்போதோ ஒரு தடவை காஞ்சிபுரம் சென்றது. சரியாக நினைவில் இல்லை. தற்போது சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும் இந்த இடங்களைப் பற்றி அவர்கள் பதிவில் எழுதியிருந்தார்கள். அவர்கள் பதிவிலும், உங்கள் பதிவிலும் நன்றாக விவரமாக படித்துணர்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மா

      நாங்கள் அங்கு செல்லும் முன்னே கீதா மா பதிவு வாசித்துவிட்டே சென்றேன் ..நிறைய தகவல்கள் அவரின் தளத்தில் ..

      மேலும் ஏகம்பரநாதர் கோவில் பற்றியும் அங்கு வாசித்து செல்ல வேண்டும் என்னும் ஆவலிலே சென்றோம் ஆனாலும் அங்கு செல்ல முடியவில்லை ...

      அவர் தளத்தில் அறிந்துக் கொண்ட பெயர் தான் தழுவக் குழைந்த நாதர்.

      Delete
  5. அருமையான படங்களுடன் கூடிய பதிவு. நான் எடுக்காத படங்களை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    அந்த கோவில் குளம்தான், அப்படித்தான் இருந்ததா என்பது நினைவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ..

      வரிசையில் செல்லும் போதே இந்த திருக்குளத்தை காண முடியுமே ..நல்ல பராமரிப்பு அடுத்த முறை செல்லும் போது பார்த்து வாருங்கள் ...

      Delete
  6. காஞ்சி காமாட்சி தரிசனம் உங்கள் தயவில் எங்களுக்கும்..... கோவில் வரலாறு படித்து மகிழ்ச்சி.

    ReplyDelete