17 July 2019

ஆடி மாதம் ...



வாழ்க வளமுடன் 



திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் தரிசனத்துடன் ஆடி மாதம் பற்றிய சில தகவல்கள் இன்றைய பதிவில்      ....


ஆடி மாதம், மாதங்களில் சிறப்பான மாதமாகக்  கொண்டாடப்படுகிறது.



சூரியனின் தெற்கத்திய பயணம்-

தக்ஷிணாயண புண்யகாலம் ஆடி முதல் நாள் தொடங்கி மார்கழி கடைசி வரை இருக்கும்.

இந்த மாதத்தில் அம்மன் வழிபாடுகள் அதிகமாக இருக்கும் .


பூமிப்பிராட்டி ஆண்டாள் நாச்சியார் அவதரித்த மாதம்!

தேவி பாகவத்தின்படி பார்வதி தேவி அவதரித்த மாதம்!

மதுரை மீனாட்சி அம்மன் அவதரித்ததும் ஆடி மாதத்தில் தான்!




பொதுவாக ஆடி மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்று ஒரு கருத்து. ஆனால் அது அப்படியல்ல.

இந்த மாதம் பகவானுக்கும்,நித்யசூரிகளுக்கும், தேவ/தேவதைகளுக்கும் உகந்த மாதம்.

பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமன் யோக நித்திரை துவங்கும் மாதம்.

தேவர்களின் ஒரு நாள் என்பது, நமது ஒரு ஆண்டுக்காலமாகும்.

தை முதல் ஆனி முடிய அவர்களது பகல்நாள்.

ஆடி முதல் மார்கழி வரை அவர்களது இரவுநாள்.

எனவே அவர்கள் நித்திரை கொள்ளும் முன் அவர்களைப் போற்றிப்பாடி வணங்கி திருப்பள்ளி கொள்ள வைக்கிறோம்.

அதே போல மார்கழி மாதத்தில் அவர்களை நித்திரையிலிருந்து, திருப்பள்ளி எழுச்சி பாடித் துயில் எழுப்பி விஸ்வரூப தரிசனம் சேவிக்கிறோம்.

ஆடி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் நம்மை முற்றிலும் பகவத் சம்பந்தமான கைங்கர்யங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த மாதத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் சூட்சும சக்திகளால் இது ஜீவாதார மாதமாகக் கருதப் படுகிறது.

காற்றில் பிராணவாயு அதிகமாகக்  கிடைக்கும்.

தொடர்ந்து மழைக்காலமும் துவங்கும்.

எனவே பயிர் விதைப்பதற்கு உகந்த மாதம்.'ஆடிப்பட்டம் தேடி விதை' என்னும் பழமொழியே இதற்குச் சான்று.

விவசாயிகளும்,விவசாயத்தொழிலாளர்களும்  ஓய்வின்றி வேலை செய்யும் மாதம். எனவே தான் இந்த இரண்டு மாதங்களிலும் நமது சொந்த லெளகீக விஷ்யங்களைத் தவிர்த்து விடுகிறோம்.




ஆடி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதகமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது.

வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது.

ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ,ஆடிப்பௌர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.




அன்புடன்,
அனுபிரேம்







7 comments:

  1. ஆடி மாதம் அருமையான பதிவு.
    ஆடி மாத சிறப்புகளை அழகாய் பகிர்ந்து விட்டீர்கள்.
    படங்கள் எல்லாம் மிக அழகு.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    ஆடி மாத சிறப்புகளை மிக அழகான அம்மன் படங்களுடன் வெகு அழகாய் கூறியுள்ளீர்கள்.
    ஆடி மாதம் பிறந்ததும் செவ்வாய் வெள்ளியில் பல விஷேடங்கள் வருகின்றன.ஆடியும் தையுந்தான் அம்மனுக்கு உகந்த மாதங்கள்.ஆடிப்பதிவு விபரமாக ஆடி மாதத்தின் சிறப்புகளை நன்றாக உணர்த்தும்படி அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. ஆடிச்சிறப்பு படங்களுடன் சிறப்பு.

    ReplyDelete
  4. படங்கள் வழமை போல சிறப்பு.

    ஆடி மாதத்தின் சிறப்பு குறித்த தகவல்கள் சில புதியவை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  5. ஆடி மாத சிறப்பினை அருமையாக தந்திருக்கிறீங்க அனு. அழகான படங்கள்.

    ReplyDelete
  6. படங்கள் அழகாக இருக்கு. நீங்க எடுத்த படங்களா அனு?

    உங்களின் சிக்னேச்சர் அதுல இல்லாததால் கேட்கிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்த படங்கள் எல்லாம் முக நூலில் கிடைத்தவை கீதா க்கா...

      Delete