10 July 2019

அறிவியல் மீமீஸ் ..


வாழ்க வளமுடன் 

முக நூலில் பார்த்து ரசித்தவை இந்த அறிவியல் மீமீஸ் ....

பல விதத்தில்  மீமீஸ் பார்த்து இருந்தாலும் இது ஒரு புதிய முயற்சி...படிக்கவும் பார்க்கவும் மிக நன்றாக இருந்தது ...








எலி, அணில், முள்ளம் பன்றி மாதிரியான கொரித்துண்ணிகளோட (rodents) பற்கள் அதுங்களோட வாழ்நாள் முழுக்க வளரும். அதோட வளர்ச்சியக் கட்டுப்படுத்த எதையாவது கொரிச்சுகிட்டே இருக்கும். அப்படிக் செய்யாமல் இருந்தால் , அதோட பல் வாயவிடப் பெரிசாகி, சாப்பிட முடியாம பட்டினியால சாகக்கூட வாய்ப்பிருக்கு.






வேறு எந்த அமிலம் மற்றும்  காரம் ஆகிய பொருட்களுடனும் வினைபுரியாத கண்ணாடி ஹைட்ரோஃப்ளூரிக் அமிலத்தால் Hydrofluoric acid மட்டுமே தாக்கப்படும். அந்த அமிலம் கண்ணாடியில் இருக்கும் சிலிக்கான் ஆக்ஸிஜன் பிணைப்புகளை நொறுக்கி, சிலிக்கான் டெட்ரா ஃப்ளூரைட் Silicon Tetra Fluoride ஆக மாற்றிவிடும். இதனாலேயே அதனை டெஃப்ளான் Teflon அல்லது மெழுகினால் ஆன கலன்களில் அடைத்து வைப்பார்கள்.




ஒரு வேதிபிணைப்பில் இருக்குற எலெட்க்ரான்களை தன்பக்கம் இழுத்துக்கற திறன அந்தத் தனிமத்தோட எலெக்ட்ரான் நாட்டம் Electronegativity அப்படின்னு சொல்லுவோம். இருக்கறதிலேயே அதிக எலெக்ட்ரான் நாட்டம் கொண்ட தனிமம் ஃப்ளூரின். ஆக்ஸிஜன விடவும் அதிக எலெக்ட்ரான் நாட்டம் கொண்ட தனிமம் ஃப்ளூரின் மட்டும்தான்.





கண்ணின் கருவிழிப்படலத்தில் Cornea ரத்தக் குழாய்கள் கிடையாது. அப்டியிருந்தால் அது பார்வையை மறைக்கும். அங்கிருக்கற செல்களுக்கான ஆக்ஸிஜன் நேரா காத்துல இருந்து கண்ணீர்ல கலந்து அந்தச் செல்களுக்குப் போகுது.


தன் கண்ணின் பின்புறத்தை ஒரு மொண்ணையான ஊசியால குத்திகிட்டு கண்ணுக்குள்ள ஒளி என்ன ஆகுதுன்னு ஆராய்ச்சி பண்ணாரு நியூட்டன். அந்த அழுத்தம் அவர் கண்ணுக்குள்ள வெளிச்சப் புள்ளிகளுக்குளாத் தெரிய அத வச்சு ரெடினாவோட படம்‌ ஒண்ணும் தயார் பண்றாரு. அதுக்காக தன்னக் காயப்படுத்திக்கக் கூட அவர் தயங்கல.



எப்பயாவது பார்வையில புள்ளி புள்ளியா மிதக்கற உ(அ)ருவங்களப் பாத்துருக்கீங்களா? அதுங்களுக்கெல்லாம் பேரு மிதப்பான்கள் floaters. கண்ணுக்குள்ள இருக்கற விட்ரியஸ் ஹ்யூமர் Vitreous humor அப்டிங்கற திரவத்துல கோலாஜன் Collagen அப்டிங்கற புரதம் திப்பி திப்பியா மாறி மிதக்கும். அதுவும் விழித்திரைல பதிவாகறதால இந்த வடிவங்கள் தெரியும். பொதுவா இதுனால பெரிய உபத்திரவம் இல்ல.





சமையல் எரிவாயு மாதிரி குறைந்த எடை கொண்ட ஹைட்ரோகார்பளுக்கும் தனிப்பட்ட வாசனை கிடையாது. அப்போ கசிவு இருந்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு எத்தில் மெர்காப்டன் Ethyl mercaptan அப்டிங்கற தீவிரமான (உண்மையில கொடூரமான) வாசனை உடைய சேர்மத்த சேப்பாங்க. அந்தச் சேர்மம் நூறு கோடி மூலக்கூறுல 3-4 மூலக்கூறு இந்த மெர்காப்டப் இருந்தாக்கூட மூக்கு கண்டு பிடிச்சுடும்.



பூக்கள்ல தேன் இருக்கறதே மகரந்தச் சேர்க்கை நிகழ்த்ததான். ஆனா பம்புள்பீ (Bumblebee) அப்டிங்கற் பெரும் தேனீ வகைகள்ல சில வகை, தேன்சிட்டுகள்ல சில‌வகை உயிரிகள், மகரந்தத்த எடுத்துக்காம நேரா பூவுக்குப் பின்புறமா ஓட்டை போட்டு தேன மட்டும் குடிச்சிடும். இந்த மாதிரி உயிரிகள தேன்திருடிகள் (Nectar robbers) அப்டின்னு சொல்லுவாங்க. தாவரங்கள்-மகரந்தச் சேர்க்கை நடத்தும் உயிரிகள்ல இருக்கற சார்ப இது சிதைச்சாலும் தாவரங்களால இது எதிர்த்து ஏதும் பெருசா செய்ய முடியல.


புதிய முயற்சியாக இது போல  முக நூலில் பதிவிட்ட  halasyan  அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...



அன்புடன்

அனுபிரேம்




4 comments:

  1. எதையும் உபயோகமாக மாற்றிக்கொள்ளக்கூடியவர்கள். ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. பாராட்டப்பட வேண்டியவர்.

    ReplyDelete
  2. அறிவியல் மீமீஸ் பகிர்வு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.

    ReplyDelete
  4. இப்படியுமா மீம்ஸ் நல்ல கற்பனைதான். அருமையா இருக்கு.ரசித்தேன்.

    ReplyDelete