கர்நாடக மாநிலத்தின் முக்கிய விஷ்ணு ஆலயங்களில் ஒன்றாக, 'விஜயநாராயணர் கோயில்' என்று முன்னர் அழைக்கப்பட்ட சென்னக்கேசவா கோயில் திகழ்கிறது.
'சென்னக்கேசவா' என்பதற்கு கன்னடத்தில் 'அழகிய கேசவா' என்று பொருள்படும்.
சென்னகேசவர் என்று அழைக்கப்படும் விஜயநாராயணப் பெருமாள், கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆண்டு கி.பி. 1117.
கர்ப்ப கிரகத்தில் உள்ள சென்னகேசவர் திருவுருவத்திற்கு பின் சுவாரஸ்யமான வரலாறு உண்டு.
தும்கூர் மாவட்டம் கைதாலா என்ற கிராமத்தில் புகழ்பெற்ற சிற்பியாக இருந்தவர் ஜகனாச்சாரி. பேலூரில் கோயில் கட்ட கிளம்பும்போது அவரின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார்.
கோயில்கான சிற்பங்கள் செதுக்கும் பணியில் இருந்த போது, அவரது மனைவிக்கு குழந்தை பிறந்து வளர்ந்து வாலிபனாக தந்தையை தேடி வந்துள்ளார்.
அப்போது அவரது தந்தை சென்னகேசவரின் சிலையை செதுக்கி கொண்டிருந்துள்ளார். அதனை கண்ட இளைஞன் நீங்கள் செதுக்கும் சிலையில் பிழையுள்ளது என குற்றம் சாட்ட, புகழ் பெற்ற அந்த சிற்பிக்கு தலைகணம் அதிகமாகி என் சிற்பத்தில் குற்றம்மில்லை.
நீ நிரூபித்தால் என் வலது கையை வெட்டிக்கொள்கிறேன் என சபதமிடுகிறார்.
அந்த சிறுவன் சந்தனத்தை எடுத்து சிலையின் முழுவதும் தடவிவிட்ட, பின் சிறிது நேரத்தில் சிற்பத்தின் தொப்புள் பகுதியை தவிர மற்றவை காய்ந்துபோயின.
அந்த தொப்புள் பகுதியை உளியை கொண்டு தட்டியபோது அந்த தொப்புள் வழியே தவளை, நீர், மணலும் வந்துள்ளது.
தவறை உணர்த சிற்பி தன் கையை துண்டித்துக்கொண்டார்
நான் உங்கள் மகன் என தன் தந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிற்பியின்மகன் வருந்தியுள்ளான்.
அசரீரி வழியாக... என் உருவத்தை உனது ஊரில் செதுக்கி நிர்மானி உன் கை வளர்ந்து பழைய நிலையை அடையும் என்றதாம். அதன்படி சென்னகேசவ கோயில் போல அவரின் கிராமத்தில் கட்ட.. அவரின் கை வளர்ந்து பழைய நிலைக்கு வந்துள்ளது. அந்த கோயில் உள்ள கிராமம் கைதாலாவாகும்.
சென்னக்கேசவர் உயர்ந்த உருவம், கல்லால் ஆன பீடத்தின் உயரத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டவர்...அழகிய பட்டுப்புடவையில், இடுப்புலே குறுவாளுடன் கம்பீர காட்சி அளிக்கிறார்.
நின்ற கோலத்தில் பெண்மையின் எழிலும் , கண்களில் அருளும் இழையோடுகிறது. மூக்குத்தி அணிந்து இருக்கிறார். பாதத்தில் சதங்கையும் ,கொலுசும் அழகு சேர்க்கின்றன. சங்கு, சக்கரம் இரண்டையும் இரு கைகளில் தாங்கி நிற்கின்றார். வலக்கரத்தில் தாமரை மலரையும் இடக்கரத்தில் கதாயுதத்தை தாங்கி இருக்கிறார் .
இரு பக்கமும் ஸ்ரீதேவி, பூதேவி சிறிய உருவில் காட்சியளிக்கிறார்கள்.
தூரமாக நின்றாலும் பளிச் காட்சி கிடைக்கும் , மேலும் இங்கு மூலவரை படம் எடுக்க அனுமதியும் உண்டு..ஆனாலும் நாங்கள் எடுக்க வில்லை .
கருவரைக்குள் செல்ல மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாயிலின் கதவுகள் அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தூணிலும் , சிறு சிறு இடத்திலும் வியக்க வைக்கும் கலைவண்ணம் . கீழே , மேலே என எங்கும் வேலைப்பாடுகள் நிறைந்து கண்ணை கவர்கின்றன.
இந்தக்கோவிலும் தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கின்றது. ஆனாலும் தினப்படி பூஜைகள், விழாக்கள் எல்லாம் சிறப்பாகவே நடைபெறுகின்றன .
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்

முந்தைய பதிவுகள் ...
அன்புடன்
அனுபிரேம்
இக்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளோம். காண, கண் கோடி வேண்டும்.
ReplyDeleteநன்றி ஐயா...
Deleteஇந்தக் கோவிலுக்குச் செல்லவேண்டும். ஒருவேளை பெங்களூர் அடுத்த வருடம் வந்த பிறகுதான் ப்ராப்தமோ என்னவோ.
ReplyDeleteபடங்கள் அருமை. சிற்பங்களின் அளவு தெரியணும் என்பதற்காக விரல் வைத்து படங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்று புரிந்துகொண்டேன்.
நீங்களே சென்றதா இல்லை அப்பாவா?
கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள் இவை விரைவில் உங்களுக்கும் அந்த வாய்ப்பு அமையும் ...
Deleteநாங்கள் துளசி தளம் பார்க்கவும் தான் இங்கு செல்லும் ஆர்வம் அதிகமாக வந்தது ..அதற்கு ஏற்ப ஒரு வாய்ப்பும் அமையவும் ..சென்று வந்துவிட்டோம் ..
இவை எல்லாம் நாங்கள் சென்ற போது எடுத்தவை ..அப்பா இங்கு எல்லாம் தனியாக சென்று வந்துள்ளார் ..இன்னும் தலைக்காடு கீர்த்தி நாராயணா வை காண செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் இன்னும் சமயம் அமைய வில்லை ...
இந்த மாதம் அப்பா சென்ற பயணத்தில் எடுத்த படங்களை எல்லாம் பகிர நேரம் இல்லை ..
இன்று அழகர் கோவில் சுந்தர்ராஜபெருமாளின் , பாதம் , திருமுகம் தரிசனம் செய்து வந்தோம். புனுகு சாற்றி உள்ளதால் இந்த மாத கடைசியில் தான் அவரை முழுதாக பார்க்க முடியும் திரையிட்டு இருட்டில் வைத்து இருப்பார்கள்.
ReplyDeleteஇங்கு சென்னகேசவரை பார்த்து விட்டேன்.
கலைவேலைப்பாடு கண்ணை கவருகிறது கோவில் வரலாறு அருமை.
புதுயுகத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்து கொண்டு பின்னூட்டம் இடுகிறேன்.
அழகான கேசவன்.
ஏற்கனவே துளசிதளத்தில் பார்த்த இடங்களை மீண்டும் இங்கே பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. நேரில் பார்க்கும் நாளிற்குக் காத்திருக்கிறேன். தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.
ReplyDeleteதல புராணமும் படங்களும் பகிர்வும் நன்று.
ReplyDeleteபடங்கள் அழகு...
ReplyDelete