25 July 2019

அத்தி வரதர் தரிசனம் (2)



 வாழ்க வளமுடன் 

அத்தி வரதர் வைபவம்  முந்தைய பதிவு  ...










எங்கள் பயணம்  சென்னையிலிருந்து ஆரம்பித்தது.
 காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பும் ரயில் மூலமாக காஞ்சிபுரம் சென்றோம் .

அங்கு செல்லும் பொழுது காலை 10.30 மணி.

 அங்கிருந்து உலகளந்த பெருமாள் கோவிலுக்குச் சென்று, அங்கே இருந்த ஐந்து  திவ்ய தேச பெருமாள்களையும்  சேவித்தோம். அங்கும்  கூட்டமே,  மிக பொறுமையாக நின்றே எங்களுக்கு தரிசனம் கிடைத்தது .






உலகளந்த பெருமாள் கோவில் 

அடுத்து நாங்கள் சென்றது காமாட்சியம்மன் கோவிலுக்கு ,அன்று ஆடி முதல்  வெள்ளிக்கிழமை காமாட்சியம்மன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தாலும் ,

 கோவிலின் உட்புறத்தை மட்டுமாவது பார்த்து விட்டு வரலாம் என்று கோவில்  நோக்கி சென்றோம்.

 கோவிலின் உள்ளே மிக பெரிய வரிசை காத்துக் கொண்டிருந்தது அம்பாளை தரிசிக்க ....


காமாட்சியம்மன் கோவில் 



அப்பொழுது  அங்கு நந்தவன பணியில் இருந்த ஒரு பாட்டியிடம் விசாரித்தோம் , அவர் இந்த வரிசையில் இப்பொழுது நிற்கவேண்டாம் நீங்கள் அந்த மண்டபத்தில் சென்று அமருங்கள்.

இனி கோபுர வாசல்களை மூடி விடுவார்கள் ,அதனால் வெளியிலிருந்து யாரும் வர இயலாது ..உள்ளே இருப்பவர்கள் அனைவருக்கும் தரிசனம் கிடைக்கும் என கூறினார் .

எனவே நாங்கள் கொண்டு சென்ற உணவுகளை அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து உண்டு,  பின் வரிசையில் கடைசியாக நின்றோம் ... கூட்டம் குறைந்து மிக சிறிய வரிசை எனவே  காமாட்சியம்மன் தரிசனம் மிக சிறப்பாகவே கிடைத்தது .


பின் அத்திவரதரை காணச் செல்லும்பொழுது மூன்று மணி ..







3.30 மணி அளவில்  வரிசையில் நிற்க ஆரம்பித்தோம் ,அந்த வரிசை வேகமாக சென்றது. கோபுரத்தை அடையும் போது சரியாக 4.50 மணி ,





பின் உள்ளே உள்ள இடத்தில்  நடந்தோம் நடந்தோம் ........அங்கு எல்லாம் அமர்வதற்கு  சிறிது கூட வாய்ப்பே இல்லை... நடந்து கொண்டே இருந்தோம் ..மக்களும் பொறுமை இன்றி ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு சென்றனர் ....

சில இடங்களில் மோசமான நாற்றமும் ..

சரியாக ஆறு மணி நேரம் கழித்து நாங்கள் அத்தி வரதர் அருகில் சென்றோம்...

  அருமையான தரிசனம்.... சில நொடிகள் தான் அவரைக் காண முடியும் ஆனாலும் சிறப்பு  பெற்ற நொடிகள் அவை ...

 எத்தனை படங்களில் கண்டாலும் நேரில் காண்பதற்கு இணை ஏது என்னும் சொல்லுக்கு ஏற்ப மகிழ்வான தரிசனம் ... வெளியே வரும் போது சரியாக ஏழு மணி நேரம் முடிந்து விட்டது..


அத்தி வரதர் மண்டபம் 


 நாங்கள் வெளியே வரும்போது இரவு பத்து முப்பது மணி .

நாங்கள் வெளியே வரவும் மழை கொட்ட தொடங்கவும் சரியாக இருந்தது ...

பசங்களை நாங்கள் அழைத்து செல்லவில்லை ...இந்த கூட்டத்தில்  நிச்சயமாக அவர்களால் வரவும் இயலாது . சில இடங்களில் ஏற்பாடுகள் பரவாயில்லை ...இன்னுமே சிறப்பாக செய்து இருக்காலம் என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை .









கடைசியாக வெளியே வரும் போது தான் சில படங்கள் எடுத்தேன் ...மற்றவை அனைத்தும் முக நூல் வழியே கிடைத்தவை ...


2060
வங்கத்தால்மாமணிவந்துந்துமுந்நீர் 

மல்லையாய்! மதிள்கச்சியூராய்! பேராய்! * 

கொங்கத்தார்வளங்கொன்றையலங்கல்மார்வன் 

குலவரையன்மடப்பாவைஇடப்பால்கொண்டான்

பங்கத்தாய்! * பாற்கடலாய்! பாரின்மேலாய்! 

பனிவரையினுச்சியாய்! பவளவண்ணா! * 

எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னைநாடி 

ஏழையேன்இங்ஙனமேஉழிதருகேனே.




2066
கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய 

களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் * 

அல்லியம்பூமலர்ப்பொய்கைப்பழனவேலி 

அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் * 

சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித் 

தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு * 

மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே 

மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)


ஓம் நமோ நாராயணாய நம!!



அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. பலமணி நேரம் கழித்து பெருமாளின் தரிசனம் . பொறுமையுடன் நின்றும், நடந்தும் தரிசனம் செய்து வந்தது அறிந்து மகிழ்ச்சி.
    5 திவ்யதேசங்கள், காமாட்சி அம்மன் தரிசனம் எல்லாம் கிடைத்தது மகிழ்ச்சி அனு.
    ஓம் நமோ நாராயணாய நம!!

    ReplyDelete
  2. எவ்வளவு அருமையான தரிசனம். அத்திவரதர் தரிசனம்,அம்பாள் தரிசனம் ,திவ்ய தேச தரிசனம் என ஆடி வெள்ளி உங்களுக்கு சிறப்பா அமைந்திருக்கு அனு.

    ReplyDelete
  3. அனைத்து கோவில்களிலும் திவ்ய தரிசனம் - மகிழ்ச்சி.

    உங்கள் பதிவில் வந்திருக்கும் படங்கள் மூலம் நானும் தரிசனம் கண்டேன். நன்றி.

    ReplyDelete